என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீரமங்கலம் பேரூராட்சி ஒப்பந்த அறிவிப்பாணைக்கு நீதிமன்றம் தடை"

    • கீரமங்கலம் பேரூராட்சி ஒப்பந்த அறிவிப்பாணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    • பட்டுக்கோட்டை அறந்தாங்கி இணைப்பு சா லை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த அறிவிப்பாணையை வெளியிட்டார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையைச் சேர்ந்த விமல் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த 9.3.2022-ல் ரூ.67 லட்சம் மதிப்புள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி இணைப்பு சா லை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த அறிவிப்பாணையை வெளியிட்டார்.

    அதில் 180 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். எனக் கூறப்பட்டிருந்தது.நான் ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்தேன். 29.5.2022-ல் இணைய வழியில் ஏலம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இறுதி முடிவு வெளியிடப்படவில்லை.

    எனவே சாலை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த இறுதி முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந் த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து,

    கீரமங்கலம் பேரூராட்சி ஒப்பந்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து, ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஜூன் 17-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

    ×