என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MOTHER MISSING WITH 2 CHILDREN"

    • இரண்டு குழந்தையுடன் தாய் மாயமானார்
    • தந்தை வீட்டில் இருந்தபோது மாயமாகியுள்ளார்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுலத்தைச்சேர்ந்த ராஜசேகர் மனைவி கார்த்தியாயேணி (வயது 30) இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷல்மிதாஸ்ரீ ( வயது 9). மற்றும் நிரஞ்சன் (வயது 4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது.

    கும்மங்குளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் இருந்த கார்த்தியாயேணி திடீர் என்று மாயமானார். இது குறித்து இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப் இ ன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் ஆகியோர் வழக்குபதிவு செய்து காணமல் போன தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர். 

    ×