என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்.

    புதுக்கோட்டை:

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தினை, கலெக்டர் கவிதா ராமு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவு ள்ளதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்க விடுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஓட்டமானது, மாவட்ட ஆட்சியரக ரவுண்டானா, நகராட்சி அலுவலகம், அண்ணாசிலை, பழைய பேருந்துநிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக விளை யாட்டரங்கத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தின் பொழுது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதனை த்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள ஒட்டு வில்லைகளை பார்வையிட்ட கலெக்டர், மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடிய சதுரங்க விளையாட்டினையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கலெக்டர் கவிதா ராமு, மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடிய சதுரங்க போட்டிகளை பார்வையிட்டார்.

    • தமிழ்நாடு அரசு உத்தரவுபடி பள்ளிக்கல்வித் துறையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் செஸ் போட்டியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான செஸ் போட்டி பள்ளி அளவில் நடத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு உத்தரவுபடி பள்ளிக்கல்வித் துறையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் செஸ் போட்டியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அதன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிடும் வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்குதல் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான செஸ் போட்டி பள்ளி அளவில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெயஜோதி, மணி, சுவாமிநாதன், மனோஜ் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். போட்டியின் முடிவில் இரண்டு மாணவர்களும் இரண்டு மாணவிகளும் ஒன்றிய அளவிலான அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    • நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவரும், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினருமான மோகன்ராஜா, துணைத் தலைவர், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பொருளாளர் பிரசாத், இணைச்செயலாளர் முகமது அப்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு, பொதுக்குழு உறுப்பினர் தங்க ராஜா முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் நிலைய பயிற்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

    • எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி புதுக்கோட்டையில் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • நாளுக்குநாள் சரிவடைவதால் விவசாயிகள் வேதனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக, எலுமிச்சை மரங்க ளை நட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

    இப்பகுதிகளில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்கள் திருச்சி, மது ரை, தஞ்சை, கோவை, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் சவுதி கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்களை வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகள் மற்றும் எலுமிச்சை பழக்கடைகள் மூலம் நாள்தோறும் டன் கணக்கில், விவ சாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். எலுமிச்சை பழங்க ள் தற்போது கிலோ ரூ.15-க்கு மட்டுமே வாங்கப்பட்டு வருவதால் எலு மிச்சை பயிரிட்டுள்ள விவசா யிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நாளுக்கு நாள் இதன் விலை வீழ்ச்சி கண்டு வருவதால் வி வசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது எலுமிச்சை உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே உற்பத்தி குறைந்து இருந்த சமயத்தில் மட்டும் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.70, ரூ.80 க்கு வாங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் படிப்படியாக உற்பத்தி அதிகரித்த நிலையில், கடந்த வாரம் கிலோ ரூ.20 வரை விற்பனை ஆகி வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது, கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்னார்கள்.

    • மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • தற்கொலைக்கு முயன்றவர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரைச்சேர்ந்த நல்லையா மகன் அய்யப்பன் (வயது 35). இவர் ஜடிஐ முடித்து கடந்த நான்கு ஆண்டுகளாக. ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் நடைபெறவில்லை.கடந்த 9-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறு காயத்தடன் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பிறகு அய்யப்பனை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு ெசய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.
    • வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த 4-ந்தேதி 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்வின், சத்தியராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் 11-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக் (24), தேவராஜ் (35), சுரேஷ் (47), திருமேனி (31), வேல்முருகன் (29), சுந்தரம் (47) ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவார கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டது சக மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலையற்ற அரசு நீடிக்கிறது. வன்முறை, போராட்டம் என கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் மீதான வழக்கு இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 11 மீனவர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி நெடுந்தீவு அருகே கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மீனவர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

    • கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்
    • கந்தர்வகோட்டை வர்த்தக சங்க நிர்வாகிகள் பழக்கடை மாரிமுத்து, தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் நடராஜன், கந்தர்வகோட்டை வர்த்தக சங்க நிர்வாகிகள் பழக்கடை மாரிமுத்து, தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநில அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்தும் நிலையில் உள்ளவரே ஆளுநா்.
    • ெரயில் பெட்டிகளில் சாதாரண படுக்கைகளை வெகுவாகக் குறைத்து குளிா்சாதனப் படுக்கைகளை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயா்கல்வித் துறை அமைச்சரும், அவா்களைத் தொடா்ந்து துணைவேந்தரும் செயல்பட்டு வருகிறார்கள். மாநில அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்தும் நிலையில் உள்ளவரே ஆளுநா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயா்கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல் நடத்துவது முழுக்க, முழுக்க சட்ட விரோதம்.

    அமைச்சா் விழாவை புறக்கணித்தது மட்டும் போதாது. ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தின் மீதும் ஆளுநா் கையெழுத்து போடாமல் இருப்பதும் சட்ட விரோதம்தான். தனது வரம்பை மீறி ஆளுநா் போட்டி அரசாங்கம் நடத்துவது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவா் அண்ணாமலை விளக்கம் அளிப்பாரா?

    ெரயில் பெட்டிகளில் சாதாரண படுக்கைகளை வெகுவாகக் குறைத்து குளிா்சாதனப் படுக்கைகளை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே, மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. குளிா்சாதன படுக்கை உள்ள பெட்டிகளில் வழங்கி வந்த வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. அரசு சில நல்ல திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பல ஆண்டுகளாக நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. ஆசிரியா், அரசு ஊழியா், சத்துணவு, மருத்துவத் துறைகளில் அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்த அவுட்சோா்சிங் முறையையே தி.மு.க. அரசும் கடைப்பிடிப்பது சரியல்ல.

    குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளரை எதிா்க்கட்சிகள் சில ஆதரிப்பதால், அது மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று ஆகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்டச் செயலா் கவிவா்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சங்கா் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • செங்கமேடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் சௌந்தரநாயகி அம்பிகா சமேத செங்கழனி திருமேனி நாதர் கோவிலில் ஆகம விதிகள்படி திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது
    • னித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச்சென்று கருட பகவான் வானத்தை வட்டமிட புனித நீர் கோபுர கலசம் மற்றும் கருவறை கலசங்களில் ஊற்றப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வடக்களூர் நாட்டைச் சேர்ந்த செங்கமேடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் சௌந்தரநாயகி அம்பிகா சமேத செங்கழனி திருமேனி நாதர் கோவிலில் ஆகம விதிகள்படி திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது.

    இதையடுத்து சுவாமி, அம்பாள் மற்றும் செல்வ விநாயகர், செல்வ முருகன், முனீஸ்வரர், அய்யனார், பெரிய கருப்பு, சின்ன கருப்பு, தூண்டி கருப்பு, அக்னி காளி, முன்னாடியான், சப்த கன்னிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிவராஜ மகேந் திரா சுவாமி கள் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் யானை, குதிரை கோவிலை சுற்றி வலம் வந்து காண்போரை பிரமிக்க வைத்தது. சிவாச்சாரியார்கள் யாக சாலைகள் அமைத்து தொடர்ந்து மந்திரம் முழங்க புனித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச்சென்று கருட பகவான் வானத்தை வட்டமிட புனித நீர் கோபுர கலசம் மற்றும் கருவறை கலசங்களில் ஊற்றப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோவில் கலசத்தில் கங்கை புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மக்கள் மேல் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மாவட்ட ஆளுநர் ஜெரால்டு புதிய நிர்வாகிகளை பணியவர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
    • விழாவில் முன்னாள் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், வைரமூர்த்தி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ரோட்டரி சங்க ஆண்டு விழாவும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக ஆர். முருகேசன், செயலாளராக கே. முருகேசன், பொருளாளராக பால் குணசீலன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட ஆளுநர் ஜெரால்டு புதிய நிர்வாகிகளை பணியவர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், வைரமூர்த்தி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது
    • கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியலில் பெயர் சேர்த்தல், இலவச மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு பொதுமக்கள் ஒப்புதல் பெறப்பட்டது ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் சிறப்பு பற்றாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியலில் பெயர் சேர்த்தல், இலவச மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ராணி முருகேசன் தலைமையிலும், அண்டனூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் இளங்கோவன் தலைமையிலும், பல்லவராயன் பட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மணிகண்டன் தலைமையிலும், நடைபெற்றது.

    • புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டியும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது. அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா விழாவை ஒருங்கிணைத்தார்.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    விழாவில் மாவட்ட இணை செயலாளர் துரையரசன், சின்னராசா, பாக்கியராஜ், ஆசிரியை விஜயலட்சுமி, பாரதிராஜா, சசிகுமார் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

    ×