என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாம் தமிழர் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது
- முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாம் தமிழர் கட்சி, இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவர் அருள் தலைமை தாங்கினார். மருத்துவர் அரவிந்த் முன்னிலை வைத்தார்.
முகாமிற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்ட ஏராளமானோர் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்.
மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அருள் டாக்டர் அரவிந்த், சுகாதார ஆ ய்வாளர் திருச்செல்வம் உள்ளிட்ட குழுவினர் இந்த முகாம் மூலம் 30 நபர்களுக்கும் மேல் தானமாக அளித்த ரத்தத்தை பெற்றனர்.
இதேபோல் பொதுமக்களிடையே ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்பதை மக்கள் உணர்ந்து பிறருக்கு உதவிட வேண்டும் என்றும் இந்த முகாமில் வலியுறுத்தப்பட்டது.
- மத்திய அரசு அரிசி மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்க முடிவு செய்துள்ளதை எதிர்த்து ஆலங்குடியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்
- அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசியின் மீது மத்திய அரசு விதித்த 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்யக் கோரி மத்திய அரசினை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
மத்திய அரசு அரிசி மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து அரிசி வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில் இயங்கி வரும் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் அரிசி சில்லறை வியாபாரிகள் முழு கடை அடைப்பு மற்றும் அரிசி ஆலைகள் அடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசியின் மீது மத்திய அரசு விதித்த 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்யக் கோரி மத்திய அரசினை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரிசி ஆலை மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழு கடை அடைப்பு மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
- வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள
இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் என 2 கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடம் எனக்கூறி 4 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு கல்வி பயின்று வந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 முதல் 3-ம் வகுப்பிற்கான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் சிறிய கட்டிடத்திற்குள் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுக்கமான சூழ்நிலையில் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் தெரிவிக்கையில், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கிருந்த பிள்ளைகள் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி
றிய கட்டிடம் ஆகையால் இறுக்கமான சூழ்நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஒரே கட்டிடத்திற்குள் 90 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். மேலும் வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.
மதிய உணவு வேளையில் சாப்பிடக்கூட இடம் இல்லாமல் வெட்ட வெளியில், வெயிலில் உட்கார்ந்து பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது.
தற்போது கொரொனா பரவும் சூழலில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இங்கு மட்டும் நெருக்கடியில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கூடத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்து கீழே விழுந்ததால், முள்கம்பிகளை கொண்டு தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலி வழியாக கிராமத்திலிருக்கின்ற நாய்கள் முழுவதும் பிள்ளைகள் சாப்பிடும்போது உள்ளே நுழைந்துவிடுகிறது. எனவே பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கவே அச்சமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே தமிழக முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முன்பிருந்தது போல் புதிதாக ஒரு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கேட்டுக்கொண்டனர்.
- 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபணியை மேற்கொண்டனர்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லா கோட்டையில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.
முகாமில் புதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ அலுவலர் பாலாஜி,
சுகுமாரன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபணியை மேற்கொண்டனர்.
- கம்பன் பெருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது
- கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் மா.கி. ரமணன் ேபசினார்.
புதுக்கோட்டை :
நேற்றும் இன்றும் நாளையும் கம்பன் வாழ்வாா் என்பதற்கு காரணம், கம்பன் நாளைய மொழியையும் பேசினாா் என்பதுதான் என்றாா் சென்னை பாரதி பாசறையின் தலைவா் மா.கி. ரமணன்.
புதுக்கோட்டை நகா்மன்றத்தில் இரவு நடைபெற்ற 47ஆவது கம்பன் பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தினமலா் வெளியீட்டாளா் ஆா்.ஆா். கோபால்ஜி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் 'கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் மா.கி. ரமணன் மேலும் பேசியதாவதது:
தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு, கம்ப ராமாயணம், திருக்கு, சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் முக்கியமானவை என்று சொன்னவா் பாரதியாா். தமிழ் இலக்கியத்துக்கு இம்மூன்றும் ஆணிவேராக உள்ள சொத்துகள்.
நேற்றும், இன்றும், நாளையும் என என்றும் வாழ்பவா் கம்பன். நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பன் வாழ்வாா் என்பதற்கான காரணம், அவா் நாளைய மொழியையும் பேசியவா்.
கடவுள் மறுப்பாளரும், சிறந்த பொதுவு டைமைவாதியுமான ஜீவானந்தம், 1952 முதல் தொடா்ந்து 7 ஆண்டுகள் காரைக்குடி கம்பன் கழகத்தில் கம்பனைப் பேசியவா். கம்பனைப் படிப்பவா்களுக்கு சமயம் கிடையாது, மதம் கிடையாது.
மனவளம், மனித வளம், மண் வளம் என மூன்று வளங்களையும் பேசியவா் கம்பன். சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பாடியவா்கள் கம்பனைத்தவிர இப்போதும் யாரும் இல்லை என்றாா்.
தொடக்கமாக, எம்.பி.எஸ். கருணாகரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொற்றாமரை அமைப்பின் தலைவா் செல்வம் அழகப்பன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் எம்ஆா்எம். முருகப்பன் வரவேற்றாா். நிறைவில், என். கணேஷ் நன்றி கூறினாா். கம்பன் கழகத் தலைவா் ச. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினா்களை சிறப்பித்தாா். கழகத்தின் செயலா் ரா. சம்பத்குமாா் தொகுத்து வழங்கினாா்
- சத்துணவு ஊழியர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர். புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். கேரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சீத்தாலெட்சுமி பேசினார். ஊர்வலத்தை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா பேசினார். தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது வழங்கப்படும் பணிக்கொடையை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.
- அறந்தாங்கியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அறந்தாங்கி நகரத் தலைவர் சன் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன் முன்னிலை வகித்தார். அப்போது காந்தி பூங்கா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எல்என்புரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 120 பேருக்கு நோட்டு பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் முத்துக்குமாரசாமி.மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமையா, மாவட்டத் துணைத் தலைவர் முகமது மைதீன்,ராஜசேகர் விஜியா, பால்ராஜ் நாகூர்மீரா, அரசப்பன், சத்தியமூர்த்தி,பவித்ரா ராமநாதன்,ஜெயராஜ், ராமநாதன் ,இளையராஜா,பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.1.48 கோடி டெண்டர் ரத்து நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
- டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த தனவிமல், உயர் நீதிமன்ற கிளையில் த ாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு நான் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆனால் நான் உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரிப்பட்டது. விசாரித்தபோது போலி ஆவணம் சமர்ப்பித்த நெம்மக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு 20 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு டெண்டர் ஒதுக்க முடிவு செய்ததாக தெரியவந்தது. இதனால் திருவரங்குளம் வட்டத்தில் 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்ய உத்தவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் ரூ.1.48 கோடி மதிப்பிலான சாலை பலப்படுத்தும் பணி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து நீதிபதி உத்தவிட்டார்.
- ஆடு மேய்க்க சென்ற வாலிபர் மாயமானார்
- தாயார் அதிர்ச்சியடைந்தார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இடையன் வயல் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பார்த்தசாரதி (வயது 18). இவர் நேற்று மதியம் காளிகோவில் அருகே உள்ள வயல் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை 6 மணியளவில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்த நிலையில் பார்த்தசாரதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது
- மணல் குவாரி அமைத்து தரக்கோரி நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 1800க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆற்றுப்படுகை, ஏரி, குளங்கள் போன்ற பகுதிகளிலிருந்து மண் மற்றும் மணல் எடுத்து, அதனை கிராம புறங்களில் சின்னச்சின்ன வீடுகள் கட்டுவதற்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கென அந்தந்த பகுதிகளில் மணல் குவாரி அமைத்து பொதுப்பணித்துறை சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டி மணல் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் அந்தந்த பகுதிகளில் மணல்குவாரி அமைத்திட வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார். அப்போது மணல் குவாரி அமைத்துதர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் சொர்ணாராஜ், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மாட்டு வண்டிக்கென மணல் குவாரி அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.
கோட்டாட்சியரின் உறுதியளிப்பை தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேசன் உள்ளிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அஞ்சலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது
- வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் தாலுகா பெருமருதூர் கிராமத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டின்கீழ் அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பெருமருதூர், வேலிவயல், மின்னாமொழி, வாட்டாத்தூர், சிறுகாசாவயல், கீழ்குடி உள்ளிட்ட 12 ற்கும் மேற்பட்ட கிராமக்களை சேர்ந்த சுமார் 900 க்கும் மேற்டோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவ்வஞ்சலகத்தில் மாதத்திற்கு 8 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அஞ்சலக அதிகாரி சரவணன், அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
விடியற்காலையில் அஞ்சலகத்திலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாகுடி காவல் துறையினருக்கும், அஞ்சல் அதிகாரி சரவணனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்க்கையில் வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இது குறித்து அஞ்சலக அதிகாரி தெரிவிக்கையில், அலுவலகத்திலிருந்த கணக்கு புத்தகங்களில் மீதம் இருந்த புத்தகங்கள் மட்டுமே எரிந்துள்ளது, இருந்த போதிலும் வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் அனைத்தும் கனிணியில் ஏற்றப்பட்டுள்ளது, அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
சம்பவம் குறித்து நாகுடி காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+2
- கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
- விழா ஏற்பாடுகளை திருப்பணி செம்மல் முத்துப்பட்டிணம் தொழிலதிபரும், கம்பன் கழக தலைவருமான ச.ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை ;
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் கம்பன் கழகம் சார்பில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா இன்று (15-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் விழாவில் 10 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசையோடு தொடங்குகிறது. கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதே போல் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உச்சநீதிமன்ற நீதியரசர் ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்ற நீதியரசர் சுரேஷ்குமார், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, கலைஇளமணி டாக்டர் மதுமிதா, முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான், பர்வின் சுல்தானா,
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, திருநாவுகரசர், தொழிலதிபர் ரத்தினம், சொல்வேந்தர் சுகிசிவம், நடன இளமணி பாலாம்பிகா, மேனாள் சபாநாயகர் சிவக்கொழுந்து,
முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், யுவஸ்ரீ கலா பாரதி சுஜிதா, நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்துராஜா, சின்னத்துரை, மேனாள் எம்எல்ஏ கவிதைபித்தன், கார்த்திக் தொண்டைமான், விஜயரவிபல்லவராயர், பாரதி விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார், இலக்கிய தென்றல் ரேவதி சுப்புலட்சுமி,
தென்காசி முனைவர் ராமச்சந்திரன், சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரவிச்சந்திரன், கலைமாமணி முனைவர் ஞானசம்பந்தன் உட்பட பலர் தினந்தோறும் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணி செம்மல் முத்துப்பட்டிணம் தொழிலதிபரும், கம்பன் கழக தலைவருமான ச.ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.






