என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1.48 கோடி டெண்டர் ரத்து நீதிமன்றத்தில் அரசு தகவல்
- ரூ.1.48 கோடி டெண்டர் ரத்து நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
- டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த தனவிமல், உயர் நீதிமன்ற கிளையில் த ாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு நான் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆனால் நான் உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரிப்பட்டது. விசாரித்தபோது போலி ஆவணம் சமர்ப்பித்த நெம்மக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு 20 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு டெண்டர் ஒதுக்க முடிவு செய்ததாக தெரியவந்தது. இதனால் திருவரங்குளம் வட்டத்தில் 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்ய உத்தவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் ரூ.1.48 கோடி மதிப்பிலான சாலை பலப்படுத்தும் பணி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து நீதிபதி உத்தவிட்டார்.