என் மலர்
நீங்கள் தேடியது "அஞ்சலகத்தில்"
- அஞ்சலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது
- வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் தாலுகா பெருமருதூர் கிராமத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டின்கீழ் அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பெருமருதூர், வேலிவயல், மின்னாமொழி, வாட்டாத்தூர், சிறுகாசாவயல், கீழ்குடி உள்ளிட்ட 12 ற்கும் மேற்பட்ட கிராமக்களை சேர்ந்த சுமார் 900 க்கும் மேற்டோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவ்வஞ்சலகத்தில் மாதத்திற்கு 8 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அஞ்சலக அதிகாரி சரவணன், அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
விடியற்காலையில் அஞ்சலகத்திலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாகுடி காவல் துறையினருக்கும், அஞ்சல் அதிகாரி சரவணனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்க்கையில் வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இது குறித்து அஞ்சலக அதிகாரி தெரிவிக்கையில், அலுவலகத்திலிருந்த கணக்கு புத்தகங்களில் மீதம் இருந்த புத்தகங்கள் மட்டுமே எரிந்துள்ளது, இருந்த போதிலும் வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் அனைத்தும் கனிணியில் ஏற்றப்பட்டுள்ளது, அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
சம்பவம் குறித்து நாகுடி காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






