என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது.
- இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
கல்லாக்கோட்டை இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு தின நாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, ரஹமதுல்லா கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவது நோக்கம் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் சர்மிளா, பொம்மி |சசிகலா, பூமாதேவி தங்கம்| பவித்ரா, சிவரஞ்சனி, விமலா, ரேவதி, கலைச்செல்வி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகள் பறிமுதல் செய்தனர்.
- ரூ.1000 அபராதம் செலுத்தினால் ஒப்படைக்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் குறிப்பாக புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலை, ஆலங்குடி, கறம்பக்குடி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட சாலைகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் 100க் கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகின்றன.
இந்த மாடுகளால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும், பேரூராட்சி பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் பிடித்துச் செல்ல வேண் டும். சாலைகளில் சுற்ற விட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் எ ன்று ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமை யில் இளநிலை உதவியாளர் ரேவதி முன்னிலையில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பையும் மீறி ஆலங்குடி பேரூராட்சி சா லைகளில் சுற்றி திரிந்த சுமார் 25 மாடுகளுக்கு மேல் பேரூராட்சி ப ணியாளர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி வளாகத்தில் அடைத்துள்ளனர்.
மேலும் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மாடுகளின் உரிமை யாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கப்படு ம் என்றும் 1000 ரூபாய் அபராதம் கட்டினால் மட்டுமே மாடுகள் உரிமை யாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இதன் பின்னரும் சாலைகளி ல் மாடுகளை சுற்ற விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் தூய்மை பணியாளர்கள் சுற்றித்திரிந்த மாடுகளை கொண்டு வந்து வளாகத் தில் அடைத்தனர். பணத்தைக் கட்ட தவறிய மாடுகளுக்கு பொது ஏலம் விடப்படும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 26 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
- கலெக்டர் கவிதா ராமு நடவடிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் கவிதா ராமு உத்தவிட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை காவிரி -குண்டாறு இணைப்பு திட்ட த னி வட்டாட்சியராக இருந்த விஜயலட்சுமி, புதுக்கோட்டை வட்டாட்சியராகவும், ஆலங்குடி தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி கந்தர்வக்கோட்டை வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மணமேல்குடி தனி வட்டாட்சியர் ராமசாமி கறம்பக்குடிக்கும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அறந்தாங்கிக்கும், குளத்தூர் தனி வட்டாட்சியர் சதீஸ் விராலிமலைக்கும் வட்டாட்சியர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அறந்தாங்கி தனி வட்டாட்சியர் பிரகாஷ் பொன்னமராவதிக்கும், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் புவியரசன் புதுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், இதே போன்று மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்த வட்டாட்சியர்கள் மற்றும் அதற்கு இணையான அலுவலர்கள் 26 பேர் பணணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- கந்தர்வகோட்டை பகுதியில் நிலம் இல்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும்.
- கந்தர்வகோட்டை பகுதியில் அரசு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார் மாநாட்டு கொடியை லெனின் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ராமச்சந்திரன் வாசித்தார்.
மாவட்ட செயலாளர் நாராயணன் தொடக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ராஜேஷ் அறிக்கை முன்மொழிந்தார்.
மாநாட்டில் கந்தர்வகோட்டை பகுதியில் நிலம் இல்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்கிடவும், கந்தர்வகோட்டை பகுதியில் அரசு முந்திரி தொழிற்சாலை அமைக்கவும், கந்தர்வ கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்திடவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக இளையராஜா நன்றி கூறினார்.
- பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.
- துருசுப்பட்டி, மெய்குடிபட்டி, அக்கட்சிப்பட்டி, வெள்ளாள விடுதி சுங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது
புதுக்கோட்டை:
ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாலை சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி,
கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர்,
துருசுப்பட்டி, மெய்குடிபட்டி, அக்கட்சிப்பட்டி, வெள்ளாள விடுதி சுங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி மின் வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
- சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி நாடியம்மன் தெருவைச்சேர்ந்த கோபால் மகன் வெங்கடேஷ் (வயது 29 ), ஆண்டிகுளம் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (28), சூரன்விடுதி சிக்கப்பட்டியைச்சேர்ந்த குழந்தைவேல் மகன் ரமேஷ் (43 )ஆகியோர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர் கலைசெல்வம் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- விவசாய மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
- காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது
புதுக்கோட்டை:
ஆலங்குடி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாளை (செவ்வாய்கிழமை) ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலைம் அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் ஆலங்குடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு. தங்களுக்குரிய பிரச்சனைகளை கூறி அவற்றை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது குறைகளை நேரில் பகிர்ந்து கொள்ள கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- பொன்னமராவதியில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- புத்தக திருவிழாவையொட்டி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா வரும் 29 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 -ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொன்னமராவதி ஒன்றியம மற்றும் ரோல்பால் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் இணைந்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கியவீதிகளின் வழியே சென்று வட்டார வளமையம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஸ்கேட்டிங் சென்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்துணைத்தலைவர் சதாசிவம் புத்தக திருவிழாவின் நோக்கம், பயன்களை விளக்கிப்பேசினார்.
அறிவியல் இயக்க ஒன்றியத்தலைவர் அறிவுடைநம்பி, பொருளர் பிரபு, நிர்வாகிகள் புவியரசு, ரவி, மாரிமுத்து, ஞானகுருசாமி, ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சுப்புராஜ், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நாடியம்மன் கோவில் குளத்தை மூடுவதற்காக கொட்டப்பட்ட மண்ணை அகற்ற அதிகாரிகள் உறுதியளித்தனர்.
- பா.ஜ.க. காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி நகரின் மையப்பகுதியில் நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் இடங்களை ஆக்கிரமித்து தனிநபர்கள் பலர் கட்டிடங்கள் கட்டியுள்ளதாக கூறி திருவரங்குளம் ஒன்றிய பா.ஜ.க. வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று நாடியம்மன் கோவில் குளத்தில் லாரிகளில் மணல் கொட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், நாடியம்மன் கோவில் குளத்தை கோவில் நிர்வாகம் மணலை கொட்டி மூட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட இந்து அறநிலையத்துைற உதவி ஆணையர் அனிதா, அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார்(பொறுப்பு), ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைகண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குளத்தை மூடுவதற்கு கொட்டப்பட்ட மண்ணை உடனே அள்ளுவதாகவும், இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 90 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
- புதுக்கோட்டை மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் 23 இடங்களிலும், கறம்பக்குடியில் 22 இடங்களிலும், குறுவை பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இலுப்பூரில் 11, கந்தர்வக்கோட்டையில் 9, புதுக்கோட்டையில் 7, ஆலங்குடியில் 5, விராலிமலையில் 4, அறந்தாங்கியில் 3, திருமயம் மற்றும் பொன்னமராவதியில் தலா 2, ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடியில் தலா 1 என மொத்தம் 90 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி குறித்து வேளாண்துறையால் வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர்.
- மண்டையூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படித்தாரர்கள் சார்பில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பெரிய அய்யனார் தேரில் எழுந்தருளினார். பின்னர் ேதரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள், விழா கமிட்டியாளர்கள், மிராஸ்தார்கள் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் படுகளம், பாரிவேட்டையும் மாலையில் சாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
- அப்பெண்கள் சென்றபின்பு நகையை பரிசோதித்தபோது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை எனத்தெரியவந்துள்ளது.
- மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் உள்ள மு.வடிவேல் என்பவருக்கு சொந்தமான தனியார் அடகுக்கடையில் கடந்த ஜூன் 27ம்தேதி மூன்று பெண்கள் தங்கநகையை அடகு வைக்கவேண்டும் என்று கூறி ரூ 2 லட்சத்து 65 ஆயிரம் அடகுக்கடன் பெற்று சென்றுள்ளனர். அப்பெண்கள் சென்றபின்பு நகையை பரிசோதித்தபோது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை எனத்தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அதே மூன்று பெண்கள் நேற்று சனிக்கிழமை மீண்டும் அடகுவைக்க கடைக்கு வந்துள்ளனர். சுதாரித்து கொண்ட கடை உரிமையாளர் பொன்னமராவதி காவல்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளார். அங்கு சென்ற காவல்துறையினர் மூன்று பெண்களையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பொன்னமராவதி வலையபட்டி ரா.சங்கரி(வயது50), நத்தம் தனலெட்சுமி(40), ராமலெட்சுமி(42) என தெரியவந்து.
மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர் திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






