என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி
- பொன்னமராவதியில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- புத்தக திருவிழாவையொட்டி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா வரும் 29 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 -ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொன்னமராவதி ஒன்றியம மற்றும் ரோல்பால் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் இணைந்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கியவீதிகளின் வழியே சென்று வட்டார வளமையம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஸ்கேட்டிங் சென்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்துணைத்தலைவர் சதாசிவம் புத்தக திருவிழாவின் நோக்கம், பயன்களை விளக்கிப்பேசினார்.
அறிவியல் இயக்க ஒன்றியத்தலைவர் அறிவுடைநம்பி, பொருளர் பிரபு, நிர்வாகிகள் புவியரசு, ரவி, மாரிமுத்து, ஞானகுருசாமி, ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சுப்புராஜ், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






