search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 WOMEN ARRESTED"

    • தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர்.
    • கையும் களவுமாக பிடித்த உரிமையாளர் நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 3 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த கணேஷ்பாண்டி நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசா ரணையில் அந்த பெண்கள் மதுரை மாவட்டம் விக்கிர மங்கலம் வடகாட்டுப்ப ட்டியை சேர்ந்த போயாண்டி மனைவி ராக்கம்மாள் (60), விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஜெகன் மனைவி விஜயா (58), உசிலம்பட்டி கீழபுதூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி நதியா (38) என தெரியவந்தது.

    3 பெண்களையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் மீது மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பகண்டைக் கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 45), சுப்பராயன் மனைவி வீரம்மாள் (65) ஆகியோர் தனித்தனியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இளையனார்குப்பத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி மஞ்சுளா(42) என்பவரையும் போலீசார் கைதுெ செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 22 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.
    • 3 பெண்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ரோகினி (வயது32).

    சம்பவத்தன்று இவரும் இவரது கணவரும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பெண்கள் 3 பேர் ரோகினி கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதனை பார்த்த ரோகினி சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுமதி என்ற லட்சுமி (22), செல்வி (25), மஞ்சு(28) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் காரமடையை சேர்ந்த சுஜிதா (36) என்ற பெண்ணிடம் ரூ.26 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 3 பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது
    • தொடர்ந்து மூன்று பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் சிலர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோவை ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரெயில் சோதனை செய்வதற்காக சென்றனர்.

    மாலை 6 மணிக்கு பாசஞ்சர் ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. உடனடியாக போலீசார் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி ( வயது 45), ராஜலட்சுமி ( 50 ),போத்தனூரை சேர்ந்த மேரி (60) என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை ரூ.5-க்கு வாங்கி ரூ.10-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மூன்று பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பெண்கள் சென்றபின்பு நகையை பரிசோதித்தபோது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை எனத்தெரியவந்துள்ளது.
    • மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் உள்ள மு.வடிவேல் என்பவருக்கு சொந்தமான தனியார் அடகுக்கடையில் கடந்த ஜூன் 27ம்தேதி மூன்று பெண்கள் தங்கநகையை அடகு வைக்கவேண்டும் என்று கூறி ரூ 2 லட்சத்து 65 ஆயிரம் அடகுக்கடன் பெற்று சென்றுள்ளனர். அப்பெண்கள் சென்றபின்பு நகையை பரிசோதித்தபோது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை எனத்தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து அதே மூன்று பெண்கள் நேற்று சனிக்கிழமை மீண்டும் அடகுவைக்க கடைக்கு வந்துள்ளனர். சுதாரித்து கொண்ட கடை உரிமையாளர் பொன்னமராவதி காவல்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளார். அங்கு சென்ற காவல்துறையினர் மூன்று பெண்களையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பொன்னமராவதி வலையபட்டி ரா.சங்கரி(வயது50), நத்தம் தனலெட்சுமி(40), ராமலெட்சுமி(42) என தெரியவந்து.

    மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர் திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×