search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டைக் கூட்டுரோடு அருகே  - மதுபாட்டில் விற்ற 3 பெண்கள் கைது
    X

    பகண்டைக் கூட்டுரோடு அருகே - மதுபாட்டில் விற்ற 3 பெண்கள் கைது

    • பகண்டைக் கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 45), சுப்பராயன் மனைவி வீரம்மாள் (65) ஆகியோர் தனித்தனியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இளையனார்குப்பத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி மஞ்சுளா(42) என்பவரையும் போலீசார் கைதுெ செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 22 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×