என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "90 LOCATIONS"

    • 90 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
    • புதுக்கோட்டை மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் 23 இடங்களிலும், கறம்பக்குடியில் 22 இடங்களிலும், குறுவை பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இலுப்பூரில் 11, கந்தர்வக்கோட்டையில் 9, புதுக்கோட்டையில் 7, ஆலங்குடியில் 5, விராலிமலையில் 4, அறந்தாங்கியில் 3, திருமயம் மற்றும் பொன்னமராவதியில் தலா 2, ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடியில் தலா 1 என மொத்தம் 90 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி குறித்து வேளாண்துறையால் வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×