என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முந்திரி தொழிற்சாலை"

    • கந்தர்வகோட்டை பகுதியில் நிலம் இல்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும்.
    • கந்தர்வகோட்டை பகுதியில் அரசு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார் மாநாட்டு கொடியை லெனின் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ராமச்சந்திரன் வாசித்தார்.

    மாவட்ட செயலாளர் நாராயணன் தொடக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ராஜேஷ் அறிக்கை முன்மொழிந்தார்.

    மாநாட்டில் கந்தர்வகோட்டை பகுதியில் நிலம் இல்லா விவசாயிகளுக்கு நிலம் வழங்கிடவும், கந்தர்வகோட்டை பகுதியில் அரசு முந்திரி தொழிற்சாலை அமைக்கவும், கந்தர்வ கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்திடவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிறைவாக இளையராஜா நன்றி கூறினார்.

    ×