என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பன் பெருவிழா"

    • கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
    • விழா ஏற்பாடுகளை திருப்பணி செம்மல் முத்துப்பட்டிணம் தொழிலதிபரும், கம்பன் கழக தலைவருமான ச.ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை ;

    புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் கம்பன் கழகம் சார்பில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா இன்று (15-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் விழாவில் 10 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசையோடு தொடங்குகிறது. கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இதே போல் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உச்சநீதிமன்ற நீதியரசர் ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்ற நீதியரசர் சுரேஷ்குமார், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, கலைஇளமணி டாக்டர் மதுமிதா, முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான், பர்வின் சுல்தானா,

    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, திருநாவுகரசர், தொழிலதிபர் ரத்தினம், சொல்வேந்தர் சுகிசிவம், நடன இளமணி பாலாம்பிகா, மேனாள் சபாநாயகர் சிவக்கொழுந்து,

    முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், யுவஸ்ரீ கலா பாரதி சுஜிதா, நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்துராஜா, சின்னத்துரை, மேனாள் எம்எல்ஏ கவிதைபித்தன், கார்த்திக் தொண்டைமான், விஜயரவிபல்லவராயர், பாரதி விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார், இலக்கிய தென்றல் ரேவதி சுப்புலட்சுமி,

    தென்காசி முனைவர் ராமச்சந்திரன், சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரவிச்சந்திரன், கலைமாமணி முனைவர் ஞானசம்பந்தன் உட்பட பலர் தினந்தோறும் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணி செம்மல் முத்துப்பட்டிணம் தொழிலதிபரும், கம்பன் கழக தலைவருமான ச.ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×