என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி வெள்ளூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு செஸ் போட்டி
- தமிழ்நாடு அரசு உத்தரவுபடி பள்ளிக்கல்வித் துறையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் செஸ் போட்டியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான செஸ் போட்டி பள்ளி அளவில் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை:
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு உத்தரவுபடி பள்ளிக்கல்வித் துறையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் செஸ் போட்டியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிடும் வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்குதல் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான செஸ் போட்டி பள்ளி அளவில் நடத்தப்பட்டது.
இந்த போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெயஜோதி, மணி, சுவாமிநாதன், மனோஜ் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். போட்டியின் முடிவில் இரண்டு மாணவர்களும் இரண்டு மாணவிகளும் ஒன்றிய அளவிலான அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.






