மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தற்கொலைக்கு முயன்றவர்
மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரைச்சேர்ந்த நல்லையா மகன் அய்யப்பன் (வயது 35). இவர் ஜடிஐ முடித்து கடந்த நான்கு ஆண்டுகளாக. ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் நடைபெறவில்லை.கடந்த 9-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறு காயத்தடன் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பிறகு அய்யப்பனை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு ெசய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com