என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு-  கே.பாலகிருஷ்ணன் பேட்டி
    X

    தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு- கே.பாலகிருஷ்ணன் பேட்டி

    • மாநில அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்தும் நிலையில் உள்ளவரே ஆளுநா்.
    • ெரயில் பெட்டிகளில் சாதாரண படுக்கைகளை வெகுவாகக் குறைத்து குளிா்சாதனப் படுக்கைகளை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயா்கல்வித் துறை அமைச்சரும், அவா்களைத் தொடா்ந்து துணைவேந்தரும் செயல்பட்டு வருகிறார்கள். மாநில அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்தும் நிலையில் உள்ளவரே ஆளுநா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயா்கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல் நடத்துவது முழுக்க, முழுக்க சட்ட விரோதம்.

    அமைச்சா் விழாவை புறக்கணித்தது மட்டும் போதாது. ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தின் மீதும் ஆளுநா் கையெழுத்து போடாமல் இருப்பதும் சட்ட விரோதம்தான். தனது வரம்பை மீறி ஆளுநா் போட்டி அரசாங்கம் நடத்துவது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவா் அண்ணாமலை விளக்கம் அளிப்பாரா?

    ெரயில் பெட்டிகளில் சாதாரண படுக்கைகளை வெகுவாகக் குறைத்து குளிா்சாதனப் படுக்கைகளை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே, மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. குளிா்சாதன படுக்கை உள்ள பெட்டிகளில் வழங்கி வந்த வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. அரசு சில நல்ல திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பல ஆண்டுகளாக நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. ஆசிரியா், அரசு ஊழியா், சத்துணவு, மருத்துவத் துறைகளில் அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்த அவுட்சோா்சிங் முறையையே தி.மு.க. அரசும் கடைப்பிடிப்பது சரியல்ல.

    குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளரை எதிா்க்கட்சிகள் சில ஆதரிப்பதால், அது மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று ஆகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்டச் செயலா் கவிவா்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சங்கா் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×