என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • செயல்படாத ஏ.டி.எம்.மையத்தால் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்
    • பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தி ல் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் அங்குள்ள வங்கியில் ஏ.டி.எம். மெஷின் கடந்த நான்கு நாட்களாக செயல்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற் றம்சாட்டி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து வங்கியின் பொதுமக்கள் கேட்கும் போது, மெஷின் பழுதாகி விட்டது. நாங்கள் தகவல் கூறிவிட்டோம் ஆனால் இதுவரை வந்து சரி செய்யப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

    ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் திருவரங்குளத்தில் இருந்து புதுக்கோட்டை 10 கிலோமீட்டர் ஆலங்குடி 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இதனால் மக்கள் தினந்தோறும் அல்லல்பட்டு வருகின்றனர். ஏடிஎம் பணம் எடுப்பதற்கு தினந்தோறும் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி வங்கி மேலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியின் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வீட்டிற்கு நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது
    • குறித்த நேரத்தில் பஸ் வராமல் முன்கூட்டியே செல்கிறது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நாள் தோறும் காலை பள்ளிக்கு வந்து மீண்டும் அந்த பஸ்களிலேயே மாலை ஊருக்கு திரும்பி வந்தனர்.

    இந்நிலையில் ஆலங்குடி யில் இருந்து நம்பம்பட்டி, மாங்கோட்டை, செம்பட்டி விடுதி வழியாக கறம்பக்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ் கடந்த சில மாதங்களாக மாலை மற்றும் காலை வேளைகளில் குறித்த நேரத்துக்கு இயக்கப்படவில்லை. மேலும் பஸ் வசதியின்றி கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 8-ம் நம்பர் எண் கொண்ட நகர பஸ் வழக்கமாக இயக்கப்படும் நேரத்தை விட 10 நிமிடங்கள் முன்கூட்டியே ஆலங்குடியில் இருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்து வந்த மாணவ-மாணவிகள் பஸ் ெசன்றுவிட்டதாலும், வேறு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இல்லாத காரணத்தாலும் 7 கிலோ மீட்டர் தூரம் நம்பம்பட்டி, மாங்கோட்ைட உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்தே வீட்டிற்கு சென்ற அவல நிலை ஏற்பட்டது.

    இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாணவர்களின் வசதிக்கா அந்த வழிதடத்தில் பஸ் இயக்க நீண்ட காலத்திற்கு பின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் அதே பஸ் டிரைவர், கண்டக்டர் அதிக கூட்டம் சேருவதாக கூறி குறித்த நேரத்திற்கு பஸ் இயக்காமல் முன்கூட்டியே எடுத்து சென்று விடுவது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே குறித்த நேரத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பெ ற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அம்பாளுக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம ஸம்வர்த்தினி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் எண்ணெய் காப்பு செய்து திரவியத்தூள், மஞ்சள் தூள், அரிசி மா வு, தேன், பால், தயிர், இளநீர், சர்க்கரை, சந்தனம், பன்னீர், குங்குமம் போன்ற அபிஷேகப் பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம் செய் யப்பட்டது. இதையடுத்து இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாலுக்கு ஆயிரக்கணக்கான வளைல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்
    • இயற்கை உபாதை கழிக்க சென்ற போது நடந்தது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஏடி காலணியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 85). இவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார் அப்போது அதே பகுதியில் உள்ள துரைராஜ் என்பவருக்கு சொந்தமான சுமார் 20 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சின்னம்மாளை உயிருடன் மீட்டனர்.

    • தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப் பட்டுள்ளது.
    • தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம்.

    புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கோயில் பணியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் காயமடைந்தவர்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைசசர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    புதுகோட்டை கோயில் தேர் விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்தவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளனர். ஒருவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 809 திருக்கோயில்களில் 981 தேர்தல்கள் உள்ளன, எல்லா தேரோட்டத்திலும் விபத்து ஏற்படுவதில்லை. சில தேர் விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    எதிர்காலங்களில் விபத்துக்களை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தேர் விபத்து நடைபெறாமல் இருக்க இந்து சமய அறிநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். எல்லா வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை தேரோட்டத்திற்கு அனைத்து துறைகள் சார்பிலும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து யார் அலட்சியம் காரணமாக நடைபெற்றிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார்.

    புகாரின் அடிப்படையில் கோயில் ஊரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கவனக்குறைவால் விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு தேரில் இருந்து சிலைகள் கோயிலுக்குள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான கோயில் தேர், நல்ல நாள் பார்த்து பழுது பார்க்கப்படும். அதன் பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது
    • பெண்கள் ஊர்வலமாக வந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டையில் காவல் தெய்வமாக விளங்கும் அகிலாண்டேஸ்வரர் அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு மது எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பெண்களால் ஜோடிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாலையை வெட்டி வைத்து, பூச்சூடி ஊர்வலமாக சுமந்து வந்து கோவில் முன்னர் குவித்து அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் மது எடுப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

    • தூய இஞ்ஞாசியர் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே சாத்தம்பட்டியில் தூய இஞ்ஞாசியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை நவநாள் திருப்பலி பூஜைகள் நடைபெற்று வந்தன. திருவிழா சிறப்பு திருப்பலியை மறை மாவட்ட அதிபர் அருட்பணி அருளானந்தம் அடிகளார் நிறைவேற்றினார். பின்னர் மின் அலங்கார தேரை மந்திரித்து புனிதம் செய்து ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.

    அதில் முதல் சப்பரத்தில் மைக்கேல் சம்மனசும், இரண்டாவது சப்பரத்தில் சூசையப்பரும், மூன்றாவது சப்பரத்தில் புனித தூய இஞ்ஞாசியர் சொரூபம் தாங்கி முக்கிய வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி, மாலை, ஊதுபத்தி, தூபம் காட்டியும், காணிக்கை செய்து கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். இதில் மகுதுபட்டி, பாணிபட்டி, விட்டானிலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் ஆலங்குடி அருகே உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டு பெருவிழா நடைபெற்றது. இதனையொட்டி ெகாடியேற்றம் மற்றும் பங்குகுரு, உதவி பங்குத்தந்தையர்களால் கூட்டுப்பாடல் மற்றும் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. புனிதரின் ஆசிபெற கிராம பொதுமக்கள் மற்றும் மின்னொளி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொது மக்கள் சந்தியாகப்பரின் ஆண்டு பெருவிழாவில் கலந்துகொண்டனர்.திரு விழாவில் வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
    • திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

     புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் பாலமுருகன் (வயது 34) விவசாயியான இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் இரு சக்கர வாகனத்தில் மாங்கோட்டையிலிருந்து எம்-தெற்கு தெரு வழியாக சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்

     புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே ஆண்டிகுளம், அரசமரம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மது விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதிர் கல்லுகுண்டு கரையைசேர்ந்த கோவிந்தசாமி மகன் முருகேசன் (வயது 51), அறந்தாங்கி அருகே அத்தாணி ஆவாகுளம் கோங்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராஜேந்திரன் (வயது 55) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    • பிரகதாம்பாள் கோவில் பணியாளர்கள் ௨ பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேர் சாய்ந்த விபத்தில் 10 பேர் காயம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விபத்துக்கு ள்ளானதில பணியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திரு விழா கடந்த வாரம் கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    தொடர்ந்து அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் வாசலில் அலங்கரிக்க ப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.

    இத்தேரின் முன்னும் பின்னும் சப்பரங்களில் விநாயகர், முருகன், சண்டி கேஸ்வரர் சுவாமி களும் எழுந்தருளச் செய்யப்ப ட்டது. அதன் பிறகு பக்தர்கள் வடம் படித்து தேர் இழுத்தனர்.

    கோவிலைச் சுற்றி தேரோடும் வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வலம் வர வேண்டிய நிலையில் தேர் இழுக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்புறமாக சாய்ந்தது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

    உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமை யிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் சாய்ந்து கிடந்த தேரை பிரித்து அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கிய பக்தர்களை மீட்டனர். இதில் காயமடைந்த 10 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் தேரோட்டம் நிறுத்தப்பட்டு தேர் மற்றும் சப்பரங்களில் இருந்த சுவாமி சிலைகள் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விபத்துக்குள்ளான தேரை கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் கோவில் பணியாளர்கள் ராஜேந்திரன் மற்றும் வைரவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல்த்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நட்புறவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் போலீசாருக்கு மன அழுத்தம் குறைவதோடு, புத்துணர்ச்சி பெருகி, குற்ற செயல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்த்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்த்துறை மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கவும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இளைஞர்களிடையே சமூக ஒற்றுமையை ஏற்படுத்திடவும் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அரசு தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காவல்த்துணைக்கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்ட காவல்த்துறை நண்பர்கள், இளைஞர்கள் ஆகியோர் விறுவிறுப்பாக விளையாடினர்.

    இறுதியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் துளசிராமன் உள்ளிட்ட காவல்த்துறையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் போலீசாருக்கு மன அழுத்தம் குறைவதோடு, புத்துணர்ச்சி பெருகி, குற்ற செயல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்
    • தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பால முருகன் (37), ஆவணம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 196 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக, தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பால முருகன் (37), ஆவணம் பகுதியைச் சேர்ந்த பரூக்(61), கீழாத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (40), ராஜா(31) ஆகிய பேரையும் கைது செய்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×