search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TEMPLE WORKERS"

    • சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி இசக்கியப்பன், அலமேலு, செல்வராஜ், புஷ்பம் , விஜயகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • பிரகதாம்பாள் கோவில் பணியாளர்கள் ௨ பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேர் சாய்ந்த விபத்தில் 10 பேர் காயம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விபத்துக்கு ள்ளானதில பணியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திரு விழா கடந்த வாரம் கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    தொடர்ந்து அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் வாசலில் அலங்கரிக்க ப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.

    இத்தேரின் முன்னும் பின்னும் சப்பரங்களில் விநாயகர், முருகன், சண்டி கேஸ்வரர் சுவாமி களும் எழுந்தருளச் செய்யப்ப ட்டது. அதன் பிறகு பக்தர்கள் வடம் படித்து தேர் இழுத்தனர்.

    கோவிலைச் சுற்றி தேரோடும் வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வலம் வர வேண்டிய நிலையில் தேர் இழுக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்புறமாக சாய்ந்தது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

    உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமை யிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் சாய்ந்து கிடந்த தேரை பிரித்து அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கிய பக்தர்களை மீட்டனர். இதில் காயமடைந்த 10 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் தேரோட்டம் நிறுத்தப்பட்டு தேர் மற்றும் சப்பரங்களில் இருந்த சுவாமி சிலைகள் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விபத்துக்குள்ளான தேரை கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் கோவில் பணியாளர்கள் ராஜேந்திரன் மற்றும் வைரவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×