சங்கரன்கோவிலில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் -சேர்மன் உமா மகேஸ்வரி வழங்கினார்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
சங்கரநாராயணசுவாமி கோவில் பணியாளர்களுக்கு  நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தாடைகள் வழங்கினார்.
சங்கரநாராயணசுவாமி கோவில் பணியாளர்களுக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தாடைகள் வழங்கினார்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி இசக்கியப்பன், அலமேலு, செல்வராஜ், புஷ்பம் , விஜயகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com