அம்பாளுக்கு வளையல் அலங்காரம்

அம்பாளுக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அம்பாளுக்கு வளையல் அலங்காரம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம ஸம்வர்த்தினி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் எண்ணெய் காப்பு செய்து திரவியத்தூள், மஞ்சள் தூள், அரிசி மா வு, தேன், பால், தயிர், இளநீர், சர்க்கரை, சந்தனம், பன்னீர், குங்குமம் போன்ற அபிஷேகப் பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம் செய் யப்பட்டது. இதையடுத்து இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாலுக்கு ஆயிரக்கணக்கான வளைல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com