என் மலர்
புதுக்கோட்டை
- விவசாயி எடுத்து வந்த ரூ.6.5 லட்சம் திருட்டுபோனது
- 2 பேர் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தாயினிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார். கீரனூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் உள்ள இவரது கணக்கில் இருந்து கடன் தொகை ரூ.6.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். குளத்தூரில் ஒரு கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இருந்த தொகையை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வளர்ச்சித்திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
- ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவரும் வகையில் அனைத்து அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, தெரிவித்தார்.
பின்னர்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர். மரு.தாரேஸ் அஹமது, பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி துவக்கி வைத்து, மகளிர் சுயஉதவிக்குழுவிர்.உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, உதவித் திட்ட அலுவலர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குமரன், பிரேமாவதி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- அறந்தாங்கி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது
- தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட கோரி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 300 முதல் 420 வரை தினக்கூலியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தற்காலிக தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் லேபர் சப்ளை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனால் தனியார் நிறுவனம் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்போவதாகவும், தாங்கள் நிர்ணயிக்கின்ற அளவிற்கு வேலை செய்யவில்லையெனில் ஊதியம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக தொழிலாளர்கள், தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
சோதனைச் சாவடியிலிருந்து தொடங்கிய பேரணியானது பெரியகடைவீதி, கட்டுமாவடி முக்கம், பேருந்து நிலையம் வழியாக அம்மா உணவகம் அருகே நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டது. போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், சிஐடியு மாவட்டத் தலைவர் அலாவுதீன், செயலாளர் கர்ணா உள்ளிட்ட தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கிராமமக்களின் போட்டி போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா வரிக்குடியில் புதிதாக மதுபானக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளூர், வடக்கூர், கொங்கரான்வயல், கோணரியேந்தல் ஆகிய கிராம மக்கள் கடையை முற்றுகையிட திரண்டனர்.
அப்போது காவல்த்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அதே பகுதியின் அருகே செயல்பட்டு வரும் மற்றொரு மதுபானக்கடையை முற்றுகையிட்டு, கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலால் உதவி மேலாளர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் திறக்க வேண்டும் அல்லது 2 கடைகளையும் மூட வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 2 கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் திறக்க அனுமதி அளித்தனர். பின்னர் 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த சம்பவம் க ாரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது
- குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் மழையூர் மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கி அதனுடன் சேர்த்து தனது சொந்த செலவில் புடவைகளை சீராக வழங்கி கர்ப்பிணி பெண்களை மகிழ்வித்தார். இந்த வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் அலுவலர்கள் மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் கொடுத்து வளை யல் அணிவித்தனர்.
இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது உடல்களை பரிசோதித்துக்கொள்ள மருத்து வமுகாம்களும் நடத்தப்பட்டது. சமூக நலத்துறை சார்பில் கர்ப்ப காலங்களில் பெண்கள் உ ண்ணக்கூடிய உணவு வகைகள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் கண்காட்சி வைத்து கர்ப்பிணிகளுக்கு விளக்கப்பட்டது.
பின்னா் மருத்துவமனையை ஆய்வு செய்த எம்எல்ஏ முத்துராஜா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் முகமது பஜ்ரூல்,சுகாதார மேற்பாா்வையாளா் துரை மாணிக்கம், கவுன்சிலா்கள் திருப்பதி, சுரேஷ் ஊாரட்சி மன்ற தலைவா்கள் கலைச்செல்வி தா்மராஜ், ரெத்தினம், சிவகாமி ராஜமாணிக்கம், திமுக பிரமுகா்கள் பாிமளம், சந்திர சேகா், கணேசன், மணி கண்டன் மற்றும் செவிலி யா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
- பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை ஒப்படைத்த ஒட்டுநர், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.
- நாகர்கோவில் வங்கி அதிகாரி
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் அந்தோணி ராஜ்(வயது 42), இவர் நாகர்கோவிலில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ந் தேதியன்று அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்தில் காரைக்குடிக்கு பயணம் செய்துள்ளார். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்ல வேண்டிய டேவிட்அந்தோணிராஜ், காரைக்குடி நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி வேறொரு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது தாம் கொண்டு வந்த பை மற்றும் உடமைகளை அந்த பேருந்திலேயே தவறவிட்டுவிட்டோம் என உணர்ந்து அதிர்ச்சியடைத்துள்ளார்.
உடனடியாக சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், மதுரைக்கு சென்ற பேருந்து இரவு அறந்தாங்கி திரும்பியதும், பயணிகள் இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பை ஒன்று உள்ளதை நடத்துனர் முத்துக்குமார், ஓட்டுனர் ரவி ஆகியோர் பார்த்துள்ளனர். அதனை எடுத்து பார்த்ததில் அதில் நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக போக்குவரத்து மண்டல மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துள்ளனர். பொருட்களை வாங்கி விசாரணை மேற்கொண்ட காவல்த்துறையினர் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர் டேவிட் அந்தோணிராஜை அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட சுமார் 15 சவரன் நகை லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அவரிடமே ஒப்படைத்தனர். ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உரியவரிடம் சேர உதவிய அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநில விருது வழங்கப்பட்டது
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை அரசு பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, பள்ளி கல்வித்துறையின் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருதை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராவிடம் வழங்கினார்.
மஞ்ச பேட்டை நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய நடுத்தர மிக்க மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி வருவது, மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது, சுற்றுச்சூழல் மன்றம் கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல், ஸ்மார்ட் வகுப்பறை மூலம் மாணவர்களின் அறிவியல் கணித சமூக அறிவியல் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகிறார்கள்தலைமை ஆசிரியரின் தொடர் முயற்சியால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரமான குடிநீர், கணினி ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவை ஏற்படுத்தி உள்ளார்.
சிறப்பாக பணிபுரிந்து வருவதற்கு மாநில நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார். சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ள பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பொதுமக்களும், கல்வி அலுவலர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ரூ.35.14 கோடி செலவில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது
- புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் திட்டப் பகுதியில்
புதுக்கோட்டை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், போஸ்நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து போஸ்நகரில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் எஸ்.ரகுபதி பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது,
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற்றவர் கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும், மற்றவர்களுக்கு கூடிய விரைவில் மற்ற இடங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயல ட்சுமிதமிழ்செல்வன், நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, நிர்வாகப் பொறியாளர் (திருச்சி கோட்டம்) இளம்பரிதி, உதவி நிர்வாகப் பொறியாளர் ஷகிலாபீவி, உதவிப் பொறியாளர் நவநீதகண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஆயில் மில் தீப்பிடித்து எரிந்து நாசமானது
- பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நம்பன்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியான பட்டேல் நகரில் ஆயில் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் இறங்கினர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக படி நகரில் சுமார் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் செயல்படும் இந்த தனியார் ஆயில் நிறுவனத்தால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற் படுவதாகவும் அதனால் அந்த ஆயில் நிறுவனத்தை இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக அந்த ஆயில் நிறுவனத்தை அந்த பகுதி யில் இருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றனர்.
தகவல் அறிந்து வந்த ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பவம் தொடர்பாக ஆலங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது
- ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள பந்துவா கோட்டையில் கிராம மக்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் ஜுல் பிகார் அலி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்கார்ப் இந்திய களப்பணியாளர் கவிதா மனநலம் பற்றியும், மனநலம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும், அதனை தடுப்பது பற்றியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவம் எடுத்துக் கொள்வது பற்றியும், மாற்றுத்திறனாளி அட்டை பெற்று தருதல், உதவித்தொகை பெறுவது பற்றியும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்கள் பெற்றுச் சென்றனர்.
- ஏம்பல் கிராமத்தை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- புதிதாக உருவாக்கப்படும் அரிமளம் வட்டத்தில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில் ஏம்பல், இரும்பாநாடு, குருங்களூர், மதகம் மற்றும் திருவாக்குடி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டு ஏம்பல் வருவாய் கிராமம் (பிர்க்கா) செயல்படுகிறது. இந்நிலையில் ஏம்பல், செங்கீரை, கீழாநிலை ஆகிய வருவாய் கிராமங்களை இணைத்து திருமயம் வட்டத்தில் உள்ள அரிமளத்தை தனி வட்டமாக உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஏம்பல் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஏம்பல் வட்டார வளர்ச்சிக்குழுவினர் கூறியது: ஏம்பலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், ஏம்பல் வருவாய் கிராமத்தை இணைத்து அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு உருவாக்கினால், ஏம்பல் பகுதி மக்கள் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைய வேண்டி இருக்கும். எனவே, ஏம்பலை புதிய வட்டமாக உருவாக்க வேண்டும். இல்லையேல், ஏற்கனவே உள்ளபடி ஆவுடையார்கோவில் வட்டத்திலேயே தொடர்வது நல்லது என்றனர்.
- சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார்
- பால் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீழாத்தூர் அருகே கட்ராம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). கூலித் தொழிலாளியான இவர், கீழாத்தூரில் இருந்து ஊருக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கீழாத் தூரில் உள்ள தனியார் பால் கொள்முதல் நிலையத்துக்கு பால் ஏற்றி வந்த சுமை ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே சந்திரசேகர் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து வடகாடு போலீசரார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சுமை ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகையை தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, த னியார் பால் நிறுவனத்தை சந்திரசேகரின் உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி மற்றும் வடகாடு போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.






