என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநில விருது
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநில விருது வழங்கப்பட்டது
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை அரசு பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, பள்ளி கல்வித்துறையின் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருதை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராவிடம் வழங்கினார்.
மஞ்ச பேட்டை நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய நடுத்தர மிக்க மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி வருவது, மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது, சுற்றுச்சூழல் மன்றம் கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல், ஸ்மார்ட் வகுப்பறை மூலம் மாணவர்களின் அறிவியல் கணித சமூக அறிவியல் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகிறார்கள்தலைமை ஆசிரியரின் தொடர் முயற்சியால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரமான குடிநீர், கணினி ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவை ஏற்படுத்தி உள்ளார்.
சிறப்பாக பணிபுரிந்து வருவதற்கு மாநில நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார். சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ள பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பொதுமக்களும், கல்வி அலுவலர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






