என் மலர்
நீங்கள் தேடியது "35.14 CRORE"
- ரூ.35.14 கோடி செலவில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது
- புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் திட்டப் பகுதியில்
புதுக்கோட்டை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், போஸ்நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து போஸ்நகரில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் எஸ்.ரகுபதி பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது,
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற்றவர் கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும், மற்றவர்களுக்கு கூடிய விரைவில் மற்ற இடங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயல ட்சுமிதமிழ்செல்வன், நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, நிர்வாகப் பொறியாளர் (திருச்சி கோட்டம்) இளம்பரிதி, உதவி நிர்வாகப் பொறியாளர் ஷகிலாபீவி, உதவிப் பொறியாளர் நவநீதகண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






