என் மலர்
புதுக்கோட்டை
- முக்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை அருகே உள்ள கட்சிரான்பட்டி கிராமத்தில் உள்ள முக்கரை விநாயகர் பூரண புஷ்கலாம்பிகா சமேத அய்யனார், ஆகாச கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதிதாக ஆலயங்கள் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி பூ ஜை, கோபூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவினை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
- மணமேல்குடியில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- இதில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மணமேல்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, முடநீக்கு அறுவை சிகிச்சை, ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி பரிந்துரை, உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித் தொகை, வங்கிக் கடன் வழங்குவதற்காக நபர்களை தேர்ந்தெடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியன நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனியார், நலத்திட்ட அலுவலர் தினேஷ், தலைமை ஆசிரியர் சங்கர், மருத்துவர்கள் சுகன்யா, ஜெயகர், சுந்தரமூர்த்தி, சுலைத்கான், சிவரஞ்சனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடியில் அரசு பள்ளிகளுக்கு டெஸ்க்- பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது
- இதன் மூலம் 350 பள்ளி மாணவ, மாணவிகள் பாடம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளுக்கு டெஸ்க் பெஞ்ச் வழங்கும் விழா மாஞ்சன்விடுதி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாஞ்சன்விடுதி ஊராட்சி ஒன்றியம் சன்விடுதியில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு 16, மழவராயன்பட்டி ஆரம்ப பள்ளிக்கு 16, வம்பன் பள்ளிக்கு 5, கொத்தக்கோட்டை ஊராட்சியில் தோப்புக்கொல்லை 11, கல்யாணிபுரம் 16 என மொத்தம் 64 டெஸ்க்பெஞ்ச் வழங்கப்பட்டது.
இதன் மூலம் 350 பள்ளி மாணவ மாணவிகள் பாடம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.டெஸ்க் பெஞ்சுகளை மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் வழங்கினார். மழவராயன்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயூப்கான், மாஞ்சன்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்கண்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராணி, உதவி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆரோக்கியசாமி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கிளை தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
- பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி:
மணமேல்குடி தாலுகா பொன்னகரம் மீனவ கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென் திருப்பதி என்றழைக்கப்படும், மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இராஜகோபுரம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவருமான பரணி கார்த்திகேயன் அடிக்கல்நாட்டி கோபுர கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
- தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கினார்
- தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கி–ணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்கு–நர் மா.பெரி–யசாமி கூறியிருப்ப–தாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,505 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை–யில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரண–மாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படு–கிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் டிராக்டரில் இயங்கும் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5x1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இயற்கை–யிலேயே காணப்படும் என் கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்ட–றிந்து, கூட்டுப்புழுக்கள் காணப்படும் ஓலை துணுக் குகளை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பர–வலாக ஓலை–யில் பொருத்த வேண்டும்.
கிரைசோபெர்லா இரை விழுங்கி ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் வெளி–யிடவேண்டும். கிரைசோ–பெர்லா இரை விழுங்கிகள், குடுமியான்மலை உயிரி–யல் கட்டுப்பாட்டு காரணி–கள் உற்பத்தி மையத்தி–லிருந்து தற்போது வழங் கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த கேட்டுக்கொள் ளப்படுகிறது. ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பு–றத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும்போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும்.
இதனை கட்டுப்படுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசலை தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூசணம் காய்ந்து விழுந்துவிடும். தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட தென்னை சாகுபடி–யாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை–களை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திருமணஞ்சேரி ஊராட்சியில் ரூ.1.67 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- நிகழ்ச்சியில் 1023 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் ஸ்ரீ சுகந்த பரிமளழேஸ்வரர் ஆலயத்தின் அருகே அரசு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்குதல், பெண்களுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ரூபாய் 1.67 கோடி மதிப்பீட்டில் 1023 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் திருமணஞ்சேரி ஊராட்சி பட்டத்தி காடு, கருக்கா குறிச்சி, கருவடதெரு முள்ளங்குரறிச்சி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவை மற்றும் சாலை வசதிகளை உடனே செய்து தருவதாக எம்.எல்.ஏ. கூறினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். முகாமில் சிறப்பு பயிற்சி ஆட்சியர், துணை ஆட்சியர்கள் ஒன்றிய ஆணையர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி, ஸ்டாலின், சின்னையா ஒன்றிய குழு துணை தலைவர் பரிமளம், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான பரிமளம், வருவாய் ஆய்வாளர்கள் அன்னக்கொடி, ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- ஆலங்குடி அருகே பள்ளி மாணவர்கள் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமராஜர் சிலை பஸ் ஸ்டாப் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் கவி, பிரபஞ்சன் என்ற இரு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாங்கோட்டை பகுதியில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜிந்திரன் (22), நவீன் (16), விஸ்வா (17) ஆகியோரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இரு தரப்பு மாணவர்களைச் சேர்ந்த உறவினர்கள் மாங்கோட்டை விளக்கு ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி தீபக் ரஜினி மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆலங்குடி அருகே பெண் மாயமானார்
- இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி சின்னையாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகள் ஐஸ்வர்யா (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 6 தேதி வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இவரது பெற்றோர் உற்றார் உறவினர்களிடம் கேட்டு தேடி பார்த்தனர். ஐஸ்வர்யா எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து செம்பட்டிவிடுதி போலீசில் அவரது தந்தை புஷ்பம் புகார் மனு கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்.
- ஆலங்குடி அருகே 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வி கோட்டை ஊராட்சி உருமநாதபுரம் கிராமம் பஸ் ஸ்டாப் அருகில் 6.76 ஹெக்டேர் அதாவது 17 ஏக்கர் வருவாய்த்துறை கணக்கில் கோவில் இடமாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தவளைப்பள்ளம், பாத்திமா நகர், உருமநாதபுரம், அரசடிப்பட்டி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய கிராமத்தில் உள்ள நபர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மழவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த மழவராயர் சமூக அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் தெட்சிணாமூர்த்தி மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த இடம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி 2021 ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசிலினை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு கணக்கில் கோவில் இடம் என்றும் அறக்கட்டளை சார்பில் பெரிய கோட்டை முனீஸ்வரர் மற்றும் பன்னீர் கோட்டை பரிவார தெய்வங்களுக்கான இடம் என உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதாக கூறப்படுகிறது.
ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு 17 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றினர். இந்நிலையில் ஒரு கிணற்றில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் குடிநீர் எடுத்துச் செல்லப்படுவதாக கூறினர். அதனால் அந்த கிணறு அகற்றப்படவில்லை. வருவாய்த்துறை சார்பில் ஆலங்குடி வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணன், சர்வேயர் கோபி கே.வி.கோட்டை கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி, உதவியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான 10-க்கு மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பருவம் தவறிய மழைப் பொழிவால் பாதிப்படைந்த விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணியினை புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
- பாதிக்கப்பட்ட வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிய வைத்து, நிலத்தினை காய வைத்து, அறுவடைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம், கூகனூர் கிராமத்தில், பருவம் தவறிய மழைப் பொழிவால் பாதிப்படைந்த நெல் வயல்வெளிகள் குறித்து, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது; புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் பெய்த பருவம் தவறிய மழையினால் அறுவடை நிலையிலிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 சதவீத நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத நெல் வயல்களில் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறுவடைப் பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 50 சதவீத மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிய வைத்து, நிலத்தினை காய வைத்து, அறுவடைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் பாதிப்படைந்த வயல்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் பாதிப்படைந்த வயல்கள் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் அறிவுறுத்தலின்படி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் பாதிப்படைந்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரண உதவி பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின்பு உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், உதவி இயக்குநர் (வேளாண்மை) பத்மபிரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கந்தர்வகோட்டை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, பூர்ண புஷ்பகலா சமேத ஐயனார், ஆனையடிகருப்பர், முத்தையன், பேச்சியம்மாள், ஆகாய கருப்பர், சப்பானி கருப்பர், பாப்பாத்தி அம்மன், மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் கலசங்களில் வைத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் புது நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஆலங்குடி அருகே சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
- அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைகுறிச்சி ஊராட்சியில் திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலகம் சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. கைகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். திருவரங்குளம் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ரெங்கநாயகி, டாக்டர் தேவி ஆகியோ சிகிச்சை அளித்தனர். சித்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.






