என் மலர்
புதுக்கோட்டை
- மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது
- பாதை வசதி செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை தாலுக்கா முரட்டு சோலகம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி மூக்காயி வயசு 90 இந்த நிலையில் இவர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் வீட்டில் இறந்த இறந்தவர் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்த மூக்காயின் உடலை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் தகவல் அறிந்த கந்தர்வகோட்டை ஆய்வாளர் செந்தில் மாறன் இறந்த மூதாட்டியும் உடலை எடுத்துச் செல்ல பாதை வசதி செய்வது தருவதாக உறுதி அளித்ததை அடுத்து இறந்த மூதாட்டி உடலை கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மூக்காயின் கணவர் முருகன் இறந்த பொழுது இதே மயான பாதை பிரச்சனை ஏற்பட்டது எனவே மாவட்ட ஆட்சியர் மயானத்திற்கு உரிய பாதையை எடுத்துக் கொடுத்து சாலை வசதி செய்து தரக் கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆலங்குடி.
புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த காட்டுப்பட்டி விகாஷ் (வயது 20) அதே பகுதியைச்சேர்ந்த கிருபாநிதி (வயது 20) ஆகிய இருவரும் ஆலங்குடி வழியாக அறந்தாங்கியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஆலங்குடி அருகில் உள்ள தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந் ந்த விக்னேஷ் (வயது 19)அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 27) ஆகிய இருவரும் அறந்தாங்கி சாலையில் தெற்கு பாத்தம்பட்டி யை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் இருவரும் ஓட்டி வந்த இரு மோட்டார் சைக்கிளும் அ ண்ணாநகர் பாலம் அருகில் சென்ற போது நேருக்கு நேர் மோதி வி பத்துக்குள்ளானது .இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு இரத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர்.இதைத் தொடர்ந்து நான்கு பேரில் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பார்த்தம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 27) இவ ர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார்.இவரது உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை க்கு வைக்கப்பட்டது.பின்னர் இறந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 3 நாட்கள் யாகசாலை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தில் முத்துமாரியம்மன் ேகாவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி கும்பாகிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித ர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் புனித நீரினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து ராமானுஜம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை கலந்து கொள்வதற்காக பில்லுவலசை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். கும்பாகிஷேகத்திற்கு பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் பூரணபுஷ்கலா உடனுறை பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது.இந்த கோயிலில் மாசி மக திருவிழா கடந்த 3ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மனித ரத்தம் கலந்து சோறு பிசைந்து, பில்லி எறியும் வினோத திருவிழா நடைபெற்றது.பாரம்பரியமாகஉள்ள வழக்கப்படி ஒரு சிறுவன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி குகையால் மறைக்கப்பட்ட மறைவில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில் பூசாரிகளில் ஒருவர் அந்த சிறுவனின் கழுத்தை அறுப்பதுபோல் செய்துவிட்டு, தனது தொடையை கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் கலந்து பிசைந்து வைத்தார்.பின்னர் சுமார் 20-க்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகள் இந்த பில்லி சோற்றை எடுத்துக்கொண்டு காட்டு பகுதிக்கு ஓடிச்சென்று வானத்தைநோக்கி 4 திசைகளிலும் வீசினர். இந்த பில்லி எரியும் வினோத நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வாராப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அன்னதானமும், நீர் மோர் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. செம்பட்டி விடுதி போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்இன்று கிடாய் வெட்டு பூஜை களும் மற்றும் நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
- புதுக்கோட்டை அருகே கருவேப்பிலான் கேட் பகுதியில் ேமம்பாலம் அமைய உள்ளது
- புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசா். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை சிபிஐ அதிகாரி போலவும், அமலாக்கத் துறை அதிகாரி போலவும் பேசுகிறாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் அண்ணாமலை பேசுகிறாா். கைது செய்ய வேண்டிய சட்டப்பிரிவுகளில்தான் கைது செய்வாா்கள். கைது செய்து பாா் என அவா் சவால் விடுக்கிறாா்.ராகுல்காந்தியின் நடைப்பயணம் சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிரொலிக்கவில்லையே எனக் கேட்கிறாா்கள். அந்தப் பயணம் நாடாளுமன்றத் தோ்தலுக்காக நடத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தலில் வேறு பல அரசியல் அம்சங்கள் இருக்கும். வெயில், மழை கடந்து நடந்திருக்கிறாா். எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு விமா்சிக்கக் கூடாது.மதுரை மற்றும் திருச்சி ெரயில்வே கோட்டங்களில் ெரயில் சேவை குறித்த கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. புதுக்கோட்டையை பொறுத்தவரை புதுக்கோட்டை- தஞ்சை புதிய தடம் அமைக்க நில அளவை குறித்தும், கீரனூரில் ெரயில்கள் நிறுத்தம் குறித்தும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிய ெரயில் தடம் அமைப்பது குறித்தும், புதுக்கோட்டை நகரில் கருவேப்பிலான் கேட் மற்றும் திருவப்பூா் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது.இவற்றில் கருவேப்பிலான் கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க ெரயில்வே துறை அனுமதித்துள்ளது. திருவப்பூா் மேம்பாலம் அமைப்பதில், எத்தனை வண்டிகள் கடந்து செல்கின்றன என்பன குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதையும் மேற்கொள்ளக் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்
- பொன்னமராவதி 4வது வார்டு செயலாளராக இருந்தவர்
பொன்னமராவதி,
புதுவளவு பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் மகன் கார்த்திகேயன்(49).செல்போன் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் இவர் பொன்னமராவதி 4வது வார்டு திமுக செயலாளராகவும் இருந்துவந்துள்ளார். நேற்று இரவு வலையபட்டி மலையாண்டி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு காயத்ரி என்ற மனைவியும், ஜீவா, சூர்யா என்ற மகன்களும் உள்ளனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் சுற்றுவட்டார அப்பகுதி மக்கள் மற்றும் திமுகவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்
- இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் அன்புச்செல்வி (வயது 21). இவர் இலுப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புச்செல்வி சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அன்புச்செல்வி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தூர பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- திருமணமான வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே வடவாளத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 36). மனைவி தேவி. குழந்தை இல்லை. இந்நிலையில் அவரது வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அவரது மனைவி தேவி செம்பட்டிவிடுதி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திர ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- குடும்ப தகராறில் நடந்த சம்பவம்
- மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் மத்திய கூட்டுறவு வங்கி வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர். வங்கியி ன் வெளிப்பகுதியை பூட்டியுள்ளார். அலுவலகத்தைத் திறக்க வந்த வங்கி அலுவலர்கள் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்படி விரைந்து வந்த வங்கி மேலாளர் இது குறித்து வடகாடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போலீஸார் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு வங்கி திறக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வங்கியின் கிளை மேலாளர் கனகபூஜம் வடகாடு போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார்
புள்ளாட்சிகுடியிருப்பு வெங்கடாசலம் மகன் ராஜராஜன் மீ து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு சங்க தலைவரும் ஆலங்குடி வருவாய்த்துறை அலுவலரும் துறைகண்ணு தலைமையில் 4.45. முதல் 5.45-வரை வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே அறிவித்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவி உயர்வு, பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்புக்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மற்றும் அரசாணையை வெளியிட வேண்டும். மற்றும் அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத:து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது
- நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்து
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் இருதய நல சிறப்பு மருத்துவர் டாக்டர் விஜய் சேகர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அனைவருக்கும் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரைஅளவு, கொழுப்பு அளவு, இருதய சுருள் படம், இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை எடுக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சிறு இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு டாக்டர் விஜய் சேகர் ஆலோசனை வழங்கினார் . 25 நபர்களுக்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் பட்டனர்.
மருத்துவர்.சுதந்திரகுமார், மார்க்கெட்டிங் தனவேந்தன், இந்திய மருத்துவச் சங்க பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன், ஸ்ரீதர் ,போக்குவரத்து கா வலர்கள் ராஜசேகர், உத்தமி, சற்குணன், விஜய், தே ன்மொழி, கார்த்திக் மற்றும் ஊர்காவ ல்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து வகையான மக்களும் முகாமில் 250 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
- 58 ேஜாடி மாடுகள் கலந்து கொண்டது
- சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் ரசித்தனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் ஸ்ரீ முத்தையா சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 58 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 16 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் ஜோடி 32 மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் மக்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். .விழாவினை ஏம்பல் இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.






