என் மலர்
பெரம்பலூர்
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி
- தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் சாதனை
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மாணவிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி புதுக்கோட்டையில் உள்ள சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பிரியதர்ஷினி, ஜெ.ரித்திகா ஆகியோர் தங்கப்பதக்கமும், பி.துர்காதேவி வெள்ளிப்பதக்கமும் மற்றும் சிவரஞ்சனி வெண்கலப்பதக்கமும் பெற்று ஒட்டுமொத்தமாக இரண்டாம் (ரன்னர்அப்) இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கு பெரம்பலூர் மாவட்டம் தடகள சங்கம் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் எம்.ஜி.ஆர். மைதானத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் முதல் கடந்த 5-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று ரூ.1,58,000 பரிசு தொகையை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து மற்றும் வளைகோல்பந்து போட்டிகளில் முதல் இடமும், கபாடி போட்டியில் இரண்டாம் இடமும், கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் மூன்றாம் இடமும் பெற்றது.குறிப்பாக இதில் தடகள போட்டிகளில் சி.சாருமதி 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் இடமும், செ.வினோதினி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், செ.தனலெட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் மற்றும் சர்மிளா சிலம்பம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் .மேலும் ஒவ்வொரு வெற்றிபெற்ற அணியில் இருந்தும் 32 மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.அகிலா, துணை உடற்கல்வி இயக்குனர்கள் ப.சிவரஞ்சனி, டேக்வாண்டோ பயிற்சியாளர் பரணிதேவி, முதல்வர் முனைவர் உமாதேவி பொங்கியாவைம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
- பெரம்பலூரில்வருகிற 25-ந் தேதி புத்தக்கத்திருவிழா தொடங்குகிறது
- ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூரில் புத்தக திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசியதாவது:-தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 8-வது புத்தக திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை பெரம்பலூர் நகராட்சி திடலில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள இந்த புத்தகக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளிலான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளது.மேலும் புத்தக திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். மேலும், அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. புத்தக திருவிழாவில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சமூகநல அலுவலர் ரவிபாலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி மற்றும் அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அலுவலக உதவியாளர் பணி மீண்டும் வழங்காததால் விரக்தியில் முயற்சி
- மங்களமேடு போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜெனுதீன். இவரது மகன் சம்சுதீன் (வயது 30). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாலிகண்டபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். மேலும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக பணிக்கு செல்லவில்லையாம். இதனால் சம்சுதீன் பதிலாக வேறோருவர் கடந்த ஒரு வருடமாக வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தார். அவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டதால், தற்போது வங்கியில் வாலிகண்டபுரத்தை சேர்ந்த மற்றொருவரை பணியில் சேர்த்துள்ளனர். சம்சுதீன் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாகவும், தற்பொழுது தனக்கு மீண்டும் பணி வழங்குமாறு வங்கி மேலாளரிடம் கேட்டு வந்தும், அவரும் மீண்டும் பணி வழங்கப்படவில்லையாம். இதனால் சம்சுதீன் நேற்று இரவு வங்கிக்கு சென்று மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பணி வழங்கப்படாததால் மனமுடைந்த சம்சுதீன் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்/
- சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் வலியறுத்தி உள்ளனர்.
- அரசு பஸ் புதிய தொடக்க விழாவிற்கு வந்த கலெக்டரிடம் வலியுறுத்தல்
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தில், அரசு பஸ் புதிய வழித்தடத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் அங்கு சென்றார். அப்போது திம்மூர் கிராம பெண்கள், ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் திம்மூர் கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகவும், அதோடு மட்டுமல்லாமல் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களை வாங்கியும் அதனை கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் முறையிட்டனர். மேலும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறைகள் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் திம்மூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பள்ளி வளாகத்தை சுற்றி புல், பூண்டுகள், கற்கள் கிடப்பதை பார்த்து உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.பள்ளி வளாகம் தூய்மையாக இல்லாவிட்டால், அடுத்த முறை வரும் போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பள்ளி வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
- முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்...
- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற செய்ய முடிவு
பெரம்பலூர்
பெரம்பலுாரில் புத்தக திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 8-வது புத்தக திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை பெரம்பலூர் நகராட்சி திடலில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள இந்த புத்தகக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளிலான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளது. மேலும் புத்தக திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். மேலும், அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. புத்தக திருவிழாவில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும், என்றார்.
- மகள் வீட்டுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
- பெரம்பலூர் அருகே பரபரப்பு
அகரம் சீகூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொளார் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 80)இவர் தனது மகளை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வசிஷ்டபுரம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக கணபதி வசிஷ்டபுரம் வந்தார். பின்னர் வெளியே செல்வதாக கூறி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகள், தந்தையை கடந்த ஒரு வாரமாக தேடி வந்தார்.இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் கிராம மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்து கொண்டிருப்பதை கண்டனர்.உடனே இது பற்றி குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் காவல் துறையும், தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்டனர்அதன் பின்னர் பார்த்தபோது கிணற்றில் சடலமாக மிதந்தவர் மாயமான கணபதி என்பது தெரியவந்தது.இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொண்டு கிணற்றில் வீசி விட்டார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே மகளின் வீட்டுக்கு வந்த கணபதி அகரம் சீகூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தியதை சிலர் பார்த்துள்ளனர்.இதனால் போதையில் நிலை தடுமாறி பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து மடிந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மகள் வீட்டுக்கு வந்த முதியவர் 8 நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகியதை தொடர்ந்து கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்
- போலீசார் விசாரணைக்கு பின்னர் ஒப்படைப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி மதியம் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதனை கண்ட பெரம்பலூர் போலீசார் அவரை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது அவர் நலமுடன் இருந்ததால், அவரை பற்றி தகவலை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூரை சேர்ந்த துரை அரசன் மனைவி ஜெயா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயாவை போலீசார் அவரது கணவரிடம் நேற்று ஒப்படைத்தனர்
- ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது
- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம், கருப்பட்டாங்குறிச்சி, அத்தியூர், லெப்பைக்குடிக்காடு கீழப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம், தலைமையில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசும் போது,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், லெப்பைக்குடிக்காடு பகுதியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நிழற்குடை அமைக்கும் பணி மற்று ம் ஜமாலியா நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொட ங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைியனை விரைவில் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்க எடுக்கப்படும். சிறுபான்மையினர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதி மென்மேலும் வளர பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்
- கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் சரணடைந்துள்ளார்
- சிறுவனை கைது செய்து விசாரணை
பெரம்பலூர்:
பெரம்பலூரில் 14 வயது சிறுவன் கொலையில் தொடர்புடைய ஒரு சிறுவன் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தார்.
பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் கணேசன் மகன் ரோஹித் ராஜ் (வயது14). இவர் 9 ஆம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோருடன் பூ கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ரோஹித் ராஜிக்கு பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன்(22) உள்பட சமூக விரோதிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு அண்மையில் கஞ்சா புகைக்க பழகிக்கொ ண்டதாக கூறப்படுகிறது.
சீனிவாசன் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்ட லங்கள் சிலவற்றை அண்மையில் ரோஹித் ராஜ் எடுத்துச் சென்றுவிட்டதாக கருதி சீனிவாசன் உள்ளிட்டோர் ரோஹித்தை பிடித்து தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித் இவர்கள் கஞ்சா வைத்திருக்கும் விபரத்தை போலீசில் கூறிவிடுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 12-ந் தேதி இரவு 7 மணியளவில் ரோஹித்தை மது பாட்டில்களை கொண்டு குத்து கொலை செய்தனர்.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறார்கள் மற்றும் பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனார் (23), பெரம்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சீனி (எ) சீனிவாசன் (22), ஆகியோர் கடந்த 14-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வக்கீல் மூலம் நேற்று பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் சரணடைந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது
- அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி
பெரம்பலூர்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக பெரம்பலூர் படிப்பு மைய பொறுப்பு அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவ, மாணவி களுக்கான சிறப்பு தேர்வு வரும் மே மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
இதில் மே மாதம் நடைபெற உள்ள சிறப்பு தேர்வை எழுத விருப்பும் மாணவ,மாணவிகள் https://coe.annamalaiuniversity.ac.in/bank/splddeapp.php என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் 31ம்தேதிக்குள் பதிவு செய்து தேர்வு எழுதிவெழுதி கொள்ளலாம். இந்த வாய்ப்பினை தேர்வர்கள் பயன்ப டுத்திக்கொ ள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் படிப்பு மைய தொலை பேசி எண் 04328-278877 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- நுகர்வோர் பாதுகாப்பு தெருமுனை பிரச்சாரம் நடந்தது
- துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நல மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தெருமுனை பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் கலந்து கொண்டு கொடியசைத்து தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இக்குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்த பிரச்சாரம் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் முடிவடைந்தது.
- வாகனம் ேமாதி புள்ளிமான் உயிரிழப்பு
- வனப்பகுதியில் புதைத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கருப்பண்ணசாமி கோவில் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது பெண் புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்து வந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர், புள்ளிமானின் உடலைக் கைப்பற்றி கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர்.






