என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குரும்பலூரில் தெருக்குழாய்கள், வீட்டு குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில வாரங்களாகவே காவிரி தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக மேட்டாங்காட்டு ஆற்றில் உள்ள நல்ல தண்ணீர் கேணியில் இருந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    அந்த குடிநீரும் 8 நாட்களுக்கு ஒரு முறை தான் வினியோகிக்கப்படுகிறது. சில சமயத்தில் 10, 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் சுமார் 1 மணி நேரம் தான் வினியோகிக்கப்படுகிறது.

    வீட்டில் குழாய் வைத்திருப்பவர்கள் குடிநீர் பிரச்சினையை சமாளித்து கொள்கிறார்கள். தெரு குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் போதியளவு குடிநீர் கிடைக்காமல் காசு கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    காவிரி குடிநீர் அருகே உள்ள கிராமங்களுக்கு வரும் சூழ்நிலையில் குரும்பலூருக்கு வராததற்கு காரணம் குடிநீர் வரும் குழாயில் அடைப்பு உள்ளதாக பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், காவிரி குடிநீர் வரும் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து ஊருக்கு போதிய அளவு காவிரி குடிநீர் மீண்டும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் கேணி நல்ல தண்ணீரை தினமும் வினியோகிக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய உப்பு தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்டிகை நாட்களை அஸ்வின்ஸ் ஸ்வீட்டுடன் கொண்டாடுங்கள் என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    • பாரத பண்பாடு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்

    பெரம்பலூர்

    பண்டிகைளை சிறப்பாக கொண்டாடுவதற்காக அஸ்வின் குழுமத்தில் ஆண்டுதோறும் இனிப்பு திருவிழா கொண்டாடப்படுகிறது. அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனம் பெரம்பலூரில் 2004-ல் சிறுதொழிலாகவும், பிறகு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 2006-ல் அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசனின் சீரிய தொலைநோக்குடன் விற்பனை நிறுவனங்களாகவும் தொடங்கப்பட்டது. பலநூற்றுக்கணக்கான அர்ப்பணிப்பு திறனுடன் பணிபுரியும் தொழிலாளர்கள், பாரம்பரிய கைமணத்தில் தயாரிக்கப்படும் நயமிகு காரவகைகள் வேதிப்பொருள் கலக்காத இயற்கை வண்ணங்களில் இனிப்பு வகைகள். புதுமை, பாரம்பரிய முறைப்படி பட்சணங்கள் மற்றும் உணவு தயாரிப்பு, தரத்தில் என்றும் உறுதி ஆகியவை அஸ்வின்ஸ் குழுமம் கடைபிடிக்கும் முக்கிய தரஅம்சங்கள் ஆகும். உயர்தரமான சைவ உணவகங்கள், பன்னாட்டு தரத்திலான எந்திரங்களில் தயாரிக்கப்படும் பேக்கரிப் பொருட்கள், விழாக்களுக்கான அவுட்டோர் கேட்டரிங் ஆகியவையும் இந்த தரத்தில் அடங்கும்.

    26 கிளைகளாக வளர்ச்சி

    இத்தகைய தரக்கொள்கை மூலம் அஸ்வின்ஸ் குழுமம் திருச்சி, சென்னை, துறையூர்,

    சேலம், ஆத்தூர், உளுந்தூர் பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளாக வளர்ச்சிஅடைந்துள்ளது.

    பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவுசாலையில் சென்னை-திருச்சி

    நான்குவழிச்சாலையில் பிரம்மாண்ட உணவுத்தொழிற்சாலையும், பேக்டரி ஃப்ரஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி அவுட்லெட், ஹைவே சைவ உணவகம் சிறப்பாக இயங்கிவருகிறது. மேலும் அவுட்டோர் கேட்டரிங் சேவை இதன் தனித்துவமாகும்.

    தீபாவளி கிப்ட் பேக்

    ஆயுதபூஜை-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவையான பலகாரம், அழகான டின் கண்டைனரில் விற்கப்பட உள்ளது.இனிப்புகள் கிப்ட் பேக், கிளாசிக்கல் தீபாவளி கிப்ட் பேக் ரூ.375, பிரீமியம் தீபாவளி பாக்ஸ் ரூ.695, ராயல் டின் பாக்ஸ் ரூ.850 ஆகிய விலைகளில் ஆகியவை விற்பனைக்கு உள்ளன. தீபாவளி இனிப்புகளுக்கு ஆர்டர்கள் அளிக்க அஸ்வின்ஸ் நிறுவனத்தின் 73730 41434 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். ஆயுதபூஜை திருநாளில் முப்பெரும் சக்திகளை வணங்கி அருள்பெறுமாறு வாடிக்கையாளர்களை அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • டோல்கேட் பணியாளர்கள் போராட்டத்தால் கட்டணமின்றி குஷியாக வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
    • 3-வது நாட்களாக போராட்டம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளான நேற்று சுங்கச்சாவடி பணியாளர்களில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 3-வது நாளாக அந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததாலும், பாஸ்ட் டேக் செயல்படாததாலும், வாகன ஓட்டிகள் கட்டணமின்றி குஷியாக சென்று வருகின்றனர். ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையினால் அந்த சாலை வழியாக அதிகமான வாகனங்கள் கடடணமின்றி செனறு வருவதால் சுங்கச்சாவடி ஒப்பந்த தனியார் நிறுவனத்துக்கு அதிகளவுல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • திருமாந்துறை சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    பெரம்பலூர் :

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா திருமாந்துறையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணயாளர்களும் நேற்று காலை திருமாந்துறை சுங்கச்சாவடியின் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் விஜயகுமார் கூறுகையில், திருமாந்துறை சுங்கச்சாவடியை போல், கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 32 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு என்று அறிக்கை வெளியிட்டும், அவர்களை பணியில் அமர்த்த ஒப்பந்த நிறுவனம் மெத்தன போக்கை கையாண்டு வருகிறது. பணியாளர்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும், என்றார். பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகனங்கள் இலவசமாக சென்று வருகின்றன.

    • பெரம்பலூர் பகுதியில் வசித்து வரும் மூத்த வாக்காளரான 100 வயதை கடந்த அங்கப்பனுக்கு வாழ்த்து பாராட்டு சான்றிதழை, அவருடைய வீட்டிற்கு சென்று பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி வழங்கினார்.
    • இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்களும், 22 பேரப்பிள்ளைகளும், 17 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    பெரம்பலூர்

    இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மூத்த வாக்காளர்களை பாராட்டி வாழ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் வழங்கிய வாழ்த்து சான்றிதழ் நாட்டிலுள்ள மூத்த வாக்காளர்கள் அனைவருக்கும் இல்லம் தேடி அரசுத்துறை அலுவலர்கள் நேரில் சென்று சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகின்றனர், அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பெரம்பலூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் மூத்த வாக்காளரான 100 வயதை கடந்த அங்கப்பனுக்கு வாழ்த்து பாராட்டு சான்றிதழை, அவருடைய வீட்டிற்கு சென்று பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி வழங்கினார்.

    கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி தனது 100-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார் அங்கப்பன். இவரது மனைவி ரெங்கநாயகி 80 வயதில் இறந்து விட்டார். இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்களும், 22 பேரப்பிள்ளைகளும், 17 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். தற்பொழுது அவரது மகன் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் வழங்கும் துறையின் சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சங்கர் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் வழங்கும் துறையின் சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சங்கர் தலைமை தாங்கினார். பறக்கும் படை தனி தாசில்தார் மாயகிருஷ்ணன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எடை மற்றும் முத்திரைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் ரேஷன் அட்டையில் பொருள் வாங்குபவர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் வரவேற்றார். முடிவில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் உமா நன்றி கூறினார்.

    • கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • செல்போன் கடை ஊழியர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியரான வினோத் (வயது 28) கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதாகி ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் உள்ள பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த பூவாயி என்ற பூவரசன்(21), வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(21), முத்து நகரை சேர்ந்த பப்லு என்ற சத்தியமூர்த்தி(24), வடக்கு மாதவி ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ்(21) ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மேற்கண்ட பூவரசன், மணிகண்டன், சத்தியமூர்த்தி, வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலினை பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று வழங்கினர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு மணி வெகுவாக பாராட்டினார்.

    • 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவர் வயலுக்கு சென்றுவிட்டார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன். டிரைவர். இவருடைய மனைவி பாரதி (வயது 23). இவர்களுக்கு ரிஷிஅழகன்(5), யுகேந்திரன்(4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் அறிவழகன் வயலுக்கு சென்றுவிட்டார். அப்போது பாரதி தனது 2 மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு தனியாக வீட்டில் இருந்தார். அப்போது தனியாக இருந்த பாரதி தனது ஓட்டு வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக கணவர் அறிவழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை அறிந்த பாரதியின் தாய் செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசார் விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாகவும், தீராத வயிற்று வலி காரணமாகவும் பாரதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    "

    • டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மேலும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மிலாடிநபியை முன்னிட்டு வருகிற 9-ந்தேதியும் ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    எல்.ஐ.சி. முகவர்கள், பாலிசிக்கான போனசை உர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி பெரம்பலூரில் வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகம் வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் சுத்தாங்காத்து தலைமையில் 50க்கு மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.

    • பயிர்காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் (சம்பா), மக்காச்சோளம், பருத்தி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திட்டத்தின் கீழ் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு வரும் 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    நெல் (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.564-ம், மக்காச்சோளத்திற்கு ரூ. 311-ம் மற்றும் பருத்திக்கு ரூ. 532 ஆகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என தெரிவித்தார்.

    • மின்வேலியில் சிக்கி பெண் பலியானார்.
    • காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சத்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் அவரது வயலுக்கு அருகே உள்ள வயலில் உள்ள மின்வேலியில் சிக்கி சத்யா இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விவசாயி ராமசாமி என்பவர் தனது மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகளின் தொல்லையை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சத்யா சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×