என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் இன்று நடந்தது
    • அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடந்தது

    பெரம்பலூர்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அரசின் பல்வேறு துறைகள் இணைந்து சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்திடும் வகையில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பற்றி அந்தந்த துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டு விரிவாக எடுத்து விளக்கும் விதமாக கண்காட்சியும் நடைபெற்றது. 

    • தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • ரூ.300 வாங்கி கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). இவரது மனைவி பாப்பாத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சந்திரன், ரவீந்திரகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நடேசன் 2-வது மகன் ரவீந்திரகுமார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை நடேசன் ரவீந்திரகுமாரிடம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வசித்து வரும் மூத்த மகன் சந்திரன் வீட்டிற்கு செல்வதற்காக ரூ.300 வாங்கி கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் நேற்று மாலை பாளையம்- குரும்பலூர் பிரிவு சாலைக்கு வடக்கே உள்ள குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான புளியந்தோப்பில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யாகசாலை அமைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 41-வது நாளாக தொடரும் போராட்டம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு வகையான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும், மனித உருவ பொம்மைக்கு பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் 41-வது நாளான நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஐகோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வேண்டி யாகசாலை அமைத்து பூஜைகளை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."

    • ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள ரைஸ் மில்லில் கடந்த 6-ந் தேதி சுமார் 20 டன் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்தது கண்டுபிடித்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடிவந்தனர்.

    திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்பி சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த 2 பேரை தேடிவந்தனர்.

    இந்நிலையில் களரம்பட்டி ரைஸ்மில்லில் பதுங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்கிற பாரதி ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உளுந்து விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உளுந்து விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை அவசியம் என வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 325 எக்டேர் பரப்பளவில் மார்கழி, தை பட்டத்தில் விவசாயிகளால் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினால் சான்றளிக்கப்பட்டு சான்று அட்டை பொருத்திய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் சேமித்து வைத்துள்ள உளுந்து விதைகள் அல்லது விற்பனையாள ர்களிடமிருந்து பெறப்பட்ட உளுந்து விதைகளை பரிசோதனை செய்த பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

    விதைப்பரிசோதனை நிலையத்தில் இவ்விதைகளின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிறரக கலவன், பிற பயிர்கள் போன்ற காரணிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    உளுந்து விதைப்பரிசோதனையில் பிற ரக கலவன்கள் ஏதேனும் இருப்பின் அதன் முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம். விதைப்பரிசோதனை நிலையத்தில் ஒரு பணி விதை மாதிரிக்கு ரூ.80 பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச் சீட்டுடன், உளுந்து 100 கிராம் அனுப்பி விதைகளை பரிசோதனை செய்து பயன்பெறலாம்.

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதைபரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் அருகில், மாவட்ட மைய நூலகம் மேல்புறம், துறைமங்கலம், பெரம்பலூர்-621 220 என்ற முகவரியில் செயல்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

    • விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி, ஜூடோ, சிலம்பம் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சாலையோர மிதிவண்டி போட்டியில் பாடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 17 19 பிரிவில் முதலிடம் பெற்றனர். ஜூடோ போட்டியில் 14 வயது பிரிவில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், கொத்தவாசல் அரசு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    19 வயது பிரிவில் லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். சிலப்பம் போட்டியில் ரெட்டையர் பிரிவில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். கம்பு சண்டை போட்டியில் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியின் ஏற்பாடுகளை லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணிகளுக்கு கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ, பட்டப்படிப்பு, டி.பார்ம், லைபரியன் முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • சுங்கச்சாவடி ஊழியர்கள் பாடை கட்டி வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • 40 -வது நாளாக தொடர்கிறது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் சுமார் 130 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் 28 ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று பனி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனை கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேரையும் நிபந்தனை இன்றி மீண்டும் பணியில் சேர்க்ககோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5- ம் தேதி ஆதார் கார்டு வாக்காளர் அட்டை அடையாள அட்டை ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை எரித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தின் 40- வது நாளான இன்று பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான பணி நீக்க செயலை தனியார் நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தங்களது வாழ்வாதாரத்தை பறித்து தற்கொலைக்கு தூண்டும் விதமாக சுங்கச்சாவடி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கீழப்பெரம்பலூரில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூரில் கிராம பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பழமலை தலைமை தாங்கினார். இளமுருகன், காந்தி, ரத்தின பாலா, தங்கராசு, ஜோதி, சூரசிங்கு, வெங்கடாசலம், ஆதிமூலம், சாந்தப்பன், ஆனந்தன், சுடர்மனி, பிரவீன்குமார், இளையராஜா, வேள்விமங்கலத்தை சேர்ந்த கபிலன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீழப்பெரம்பலூர் மற்றும் வேள்விமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யாத ஒன்றிய கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    30 வருடத்திற்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். ஜெயக்குமார் மளிகை கடையில் இருந்து தெற்கு தோப்பு வரை தார்சாலை அமைத்திடவும், சின்னாற்றில் மேம்பாலம் அமைக்கவும் , பெண்கள் சுகாதார வளாக கட்டிடம் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை இதனை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , பருவ மழையின் காரணமாக வடக்கேரி வரத்துவாய்க்கால் தூர்வாரவும், அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனே நியமனம் செய்யவும், கீழப்பெரம்பலூர் முதல் வசிஷ்டபுரம் வரை தார் சாலையின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்திடவும் , கோழியூர் பாதையில் தார் சாலை அமைத்திடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சின்ன பையன், மண்டல துணை வட்டாட்சியர் பாக்கியராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் மனோகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததையடுத்து சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    • அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படியை தமிழக அரசு காலதாமதமின்றி வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதல்-அமைச்சர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் கோரிக்கைகளை விளக்கி சங்க செயலாளர் மரியதாஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜ், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன், சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். முடிவில் சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்."

    • சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • 39-வது நாளாக நீட்டிப்பு

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியிடைநீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 39-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    .நிர்வாகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக ஆட்குறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமாந்துறை டோல் பிளாசா வில் 39-வது நாட்களாக போராட்டம் செய்து வந்தநிலையில் மாநில அரசும், மத்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் இந்த நிர்வாகத்திற்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் ஊழியர்களை வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் அனைவரும் தூக்கு கயிற்றை முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தல்

    பெரம்பலூர்

    தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகையினை ரத்து செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மேற்பார்வை மின்பொறியாளர் அம்பிகா தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள், மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

    கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

    தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ள நிலையில் மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    பெரம்பலூர் வசூல் மையத்தில் ஒருவர் மட்டும் மின்கட்டணம் வசூல் செய்து வருவதால் மின் நுகர்வோர்கள் அதிக நேரம் காத்திருத்து மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. ஆகையால் ஏற்கனவே இருந்தது போல் 3 பேரை வசூல் மையத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

    ஒருவர் பல வீட்டு மின்இணைப்பு பெற்று, அதில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகையினால் பயனடைந்து வருகின்றார்கள். தற்பொழுது 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்று வரும் சலுகைகளை ரத்து செய்து பொது பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்ய இருக்கும் தமிழக மின்துறை அமைச்சரின் முடிவு நியாயமில்லை. இதுபற்றி விசாரணை செய்து மின்நுகர்வோர் நலன் காக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×