என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பா.ஜ.க. விவசாய பரிவு சார்பில் பொங்கல் பரிசாக ரூ 5 ஆயிரம் மற்றம் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்த்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் ரூ.5 ஆயிரம் ரொக்க பணமும், செங்கரும்பு, பனைவெல்லத்துடன் முந்திரிபருப்பு, ஏலக்காய், திராட்சை ஆகிவற்றை தரமானதாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து கலைந்துசென்றனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்




    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம் :

    நாமக்கல் மாவட்டம் கோடி நாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 62). கூலித் தொழிலாளியான இவர், பெரம்பலூருக்கு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வாலிகண்ட புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் ெதரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுசாமி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • செல்போன் கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
    • போலீசார் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு சேவா நகரை சேர்ந்தவர் கனகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர் பெரம்பலூர் ரோவர் பள்ளி செல்லும் சாலையோரத்தில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடந்த 6 மாதங்களாக செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டர் கதவின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ஏதும் திருடு போகாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


    • பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, சிறுநிலா கிழக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அலி(வயது 35). இவருக்கு சரிதாபேகம் என்ற மனைவியும், முகமது நவ்பால் என்ற மகனும், ஜாபியா என்ற மகளும் உள்ளனர். முகமதுஅலி நேற்று காலை தனது மனைவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், வெள்ளனூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எறையூர்-பெருமத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முகமதுஅலி நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முகமதுஅலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • பெட்டி கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது.
    • போலீசார் விசாரணை நடத்தி பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே செங்குணம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந் தேதி இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடை உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


    • சிறுவர்கள் நடனமாடி அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.
    • வயலூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட கிறித்தவ பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்து இயேசு பிறப்பு விழாவை முன்னிட்டு கெத்சமனே காஸ்பல் மிஷன் சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன், செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி நிர்வாகி ராஜசேகர், மற்றும் கோவையிலிருந்து சகோதரர்கள் கர்ணன், தமிழ்ச்செல்வன், ராஜன், சாமுவேல் ஆகியோர் கிறிஸ்துவின் பிறப்புவிழாவை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்பு ஆராதனையும் திருப்பலியும் நடைபெற்றது.இவ்விழாவில் சிறுவர்களின் நடனமாடியும் நடித்துக் காட்டியும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இவ்விழாவில் போதகர் ஆண்ட்ரூஸ் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் அன்பினை கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் போதகர் கார்த்திகை ராஜா ஒருங்கிணைத்து நடத்தினார்.





    • கார் மோதி விபத்து
    • சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியானார்

    பெரம்பலூர்:

     அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள அயன்பேரையூர் தெற்குத் தெருவில் வசித்துவரும் ரத்தினசாமி மனைவி உலகநாயகி (வயது 87). இவர் சம்பவத்தன்று மாடு மேய்த்து விட்டு வீட்டிற்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார் அப்பொழுது எதிர்பாராத விதமாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உலக நாயகி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



    • வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்பட்டது
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வரிசைப் பட்டி கிராமத்தில் உள்ள வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழா–விற்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசு–கையில், ஏசு கிறிஸ்து–வின் பெருமையை–யும், கல்வி மற்றும் சுகாதாரத்தின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். சிறப்பு விருந்தி–னராக அரியலூர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை டோமினிக் சாவியோ கலந்துகொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் புனித தன்மையும், அவர் பிறந்த நோக்கத்தினையும் ஏசு பெருமான் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும் நடை–பெற்றன. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவி ஆராதனா வரவேற்றார். முடிவில் பள்ளியில் முதல்வர் அருள் பிரபாகர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு–களை பள்ளி, கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜி.லில்லி செய்து இருந்தார்.


    • ரோவர் கல்வி குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது
    • பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றி கூறினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ரோவர் கல்வி குழுமத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் பெரு–விழா கோலாகலமாக கொண்டா–டப்பட்டது. இவ்விழாவிற்கு ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் வரதராஜன் மற்றும் துணைதலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகி–யோர் தலைமை தாங்கி–னர். அறங்காவலர் மகாலட் சுமி வரதராஜன் முன்னிலை வகித்தார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றியும், யார் உங்களின் ஊக்கம் அளிப்பவர், உச்சா–கப்படுத்துபவர் என்பதை கண்டறிவதை பற்றியும், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் ரோவர் கல்வி குழும தலைவர் வரதரா–ஜன் திருக்குறளின் பெருமை–யையும், இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் பற்றியும் மேலும் மூடநம்பிக்கைகளா அல்லது அறிவியலின் உச்சமா என்பது பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். அலுவலக மேலாளர் ஆனந்த் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வி–ழாவில் ரோவர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், அலுவலக மேலா–ளர்கள் ஆசிரிய பெரு–மக்களும் அலுவலக ஊழி–யர்களும் கலந்து கொண்டனர்.


    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி–யில் 8 ஆம் ஆண்டு விளை–யாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டி–களை தொடங்கி வைத்தார். துணைத் தலை–வர் மோகன–சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தடகள விளை–யாட்டு போட்டிகள், அணி–வகுப்புகள் நடந்தது. விழாவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா கலந்து–கொண்டு போட்டிகளில வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்பாது அவர் பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என எல்லோருக்கும் பிரச்சினை உள்ளது. அதைக்கண்டு பின்வாங்காமல் கையாளும் அணுகு முறையில் தான் நம் வாழ்க்கையில் சாதனை–யாளராக ஆக முடியும். எந்த ஒரு செயலிலும் விதிமுறையை மீறாத பழக்கம் வளர்த்துக்கொண்டு வரும் மனநிலை இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமைவதோடு நாம் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை அடைந்து விடலாம் என்றார். இதில் சிறப்பு விருந்தி–னராக திருச்சி மின்வா–ரிய பொருளாதார கட்டுப்பட்டாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளா–கத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர்கள் சந்திரோதயம், ராஜேந்திரன், விளையாட்டு அலுவலர்கள் பிரபு, ராஜ் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து–கொண்டனர். முன்னதாக முதல்வர் ஹேமா வரவேற்றார். முடி–வில் துணை முதல்வர் சாரதா நன்றி கூறினார்.


    • வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
    • 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது

    பெரம்பலூர் :வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை பக்தர்கள் 10 கிலோ எடையில் பெரிய அளவிளான கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • ஆஞ்சநேயருக்கு 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலையும் அணிவிக்கப்பட்டது.

    குன்னம் :

    செட்டிகுளம் சந்தை வீதியில் தனி சன்னதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலையும் அணிவிக்கப்பட்டது. முன்னதாக சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் செட்டிகுளத்தை சுற்றியுள்ள பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர் கீழக்கணவாய், தம்பிரான் பட்டி, ரங்கநாதபுரம், குரூர், சிறுவயலூர், நாட்டார்மங்கலம், மாவிலங்கை கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பாடலூரில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவிலிலும் வடை மலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மேலும் குன்னத்தில் உள்ள பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு துளசியுடன் கூடிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


    ×