என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- ஆஞ்சநேயருக்கு 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலையும் அணிவிக்கப்பட்டது.
குன்னம் :
செட்டிகுளம் சந்தை வீதியில் தனி சன்னதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலையும் அணிவிக்கப்பட்டது. முன்னதாக சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் செட்டிகுளத்தை சுற்றியுள்ள பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர் கீழக்கணவாய், தம்பிரான் பட்டி, ரங்கநாதபுரம், குரூர், சிறுவயலூர், நாட்டார்மங்கலம், மாவிலங்கை கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பாடலூரில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவிலிலும் வடை மலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மேலும் குன்னத்தில் உள்ள பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு துளசியுடன் கூடிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.






