என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி
- கார் மோதி விபத்து
- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியானார்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள அயன்பேரையூர் தெற்குத் தெருவில் வசித்துவரும் ரத்தினசாமி மனைவி உலகநாயகி (வயது 87). இவர் சம்பவத்தன்று மாடு மேய்த்து விட்டு வீட்டிற்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார் அப்பொழுது எதிர்பாராத விதமாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உலக நாயகி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






