என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பேசினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசினார்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பை பார்வையிட்டு அவர் பேசும்போது, மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், வார இறுதி நாள்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இப்பயிற்சியில், பெரம்பலூர் ஒன்றியத்தி லிருந்து 49 மாணவர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்திலிருந்து 65 மாணவர்களும், ஆலத்தூர் ஒன்றியத்திலிருந்து 31 மாணவர்களும், வேப்பூர் ஒன்றியத்திலிருந்து 51 மாணவர்களும் என மொத்தம் 196 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகளை, மாவட்டத்தில் உள்ள 138 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர். இந்தப் பயிற்சி வகுப்பில் அளிக்கப்படும் அறிவுரைகளையும், நுணுக்கங்களையும் கற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், நன்கு படித்து நீட் தேர்வை எளிதில் எதிர்கொண்டு, அனைவரும் மருத்துவ ர்களாக வர வேண்டும். கல்விக்காக உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய கிராம விவசாயிகள் தங்கள் பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடத்திற்கான நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் தாமரைகண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுப்புரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வன், உதவியாளர் கோபிநாத், ராமசாமி, வரதராசு, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், தனபால் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 29), டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது நண்பனின் திருமணத்திற்காக அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது க.மேட்டுதெரு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயம் அடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யபட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், மேலும் விசேஷ நாட்களிலும் நடை திறப்பது வழக்கம். நேற்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மதுரகாளியம்மன் மகா அபிஷேக அறக்கட்டளை சார்பில், நேற்று 49-வது ஆண்டு மகா அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. மேலும் வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    • பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் 681 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
    • பெரம்பலுார் மாவட்டத்தில் 1,671 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத் தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமா–மிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் "புதுமை பெண்" 2-ம் கட்ட நிகழ்ச்சி பெரம் பலூர் மாவட்டத்தில் குரும் பலூரில் உள்ள பெரம்ப–லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 681 மாணவிகளுக்கு கலெக்டர் கற்பகம் மாதம் ரூ.1,000 வீதம் உதவி தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கி பேசியதாவது:-பெண் பிள்ளைகளின் கல்வி எந்தக்காரணம் கொண்டும் தடைபட்டு விடக்கூடாது, இடைநிற்றல் இருக்கக்கூடாது, அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர்கல்வி கனவை நினைவாக்க வேண்டும் போன்ற பல உன்னத நோக்கங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் முதற் கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்திய நாளில் நமது பெரம்பலுார் மாவட்டத்தில் 1,671 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.

    இன்றைய தினம் இரண்டாம் கட்ட–மாக 681 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இவர்க–ளுக்கு மாதந்தோ–றும் ரூ.6,81,000 வழங்கப்பட–வுள்ளது. கல்வி மட்டும்தான் மாண–வர்களை எதிர்காலத்தில் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும். கல்வியறிவு இல்லையென்றால், பொரு–ளாதார சுதந்திரம் இல்லாமல் போகும். அவ்வாறு பொரு–ளாதார சுதந்திரம் இல்லை–யென்றால் நம் வாழ்வில் இறுதிவரை வேறு ஒருவரை சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கும். பெண் என்பவள் பருவத்தின்போது பெற் றோரையும், திருமணத் திற்கு பிறகு கணவரையும், பிறகு குழந்தைகளையும் சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கின்றது. அதனை மாற்றுவதற்கு நமக்கு கிடைத்த ஆயுதம் கல்வி. நான் அரசுப்பள்ளி–யில் பயின்ற மாணவி என்பதில் பெருமைப்படுகிறேன். கல்வியினை முறையாகப் பயன்படுத்தியதால்தான் இன்று உங்கள் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவராக நின்று கொண்டிருக்கின்றேன்.

    தமிழ்நாடு அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்ப–டுத்தி வருகிறது. புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, எழுதுபொருட்கள் என கல்விக்கு ஏதுவான அனைத்து பொருட்களையும் அரசே வழங்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் நீட் கோச்சிங், இல்லம் தேடிக் கல்வி என பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளும் அரசால் வழங்கப்பட்டு வரு–கின்றது. நமது பொறுப்பு என்னவென்றால் இவற்றை–யெல்லாம் நன்றாக பயன்படுத்திகொள்வது–தான் என்றார். இதில் போலீஸ் சூப்பி–ரண்டு ஷியாமளா தேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், ஆர்.டி.ஓ. நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் நகர்ப்பு–றம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநி–திகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இத்திட்டம் தொடர்பான பணிகளில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது- பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கி ணைப்பாளர் பணியிட த்திற்கு பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    தகுதிகள் : ஒரு பட்டப்படிப்புடன் கணினியில் 6 மாத கால சான்றிதழ் MS OFFICE பெற்றிருத்தல் வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும், இத்திட்டம் தொடர்பான பணிகளில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய வட்டாரத்திற்குள் வசிப்ப வராக இருத்தல் வேண்டும். ஊதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். தகுதிக ளையுடைய விண்ணப்ப தாரர்கள் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம் பெர ம்பலூர் என்ற முகவரியில் வரும் 20ம்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.


    • இைளஞர்கள் தனியார் வங்கி, நிதித்துறை நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன என கலெக்டர் அறிவித்திருக்கிறார்
    • இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பிஏ, பி.காம், பிஎஸ்சி கணிதம் ) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    பெரம்பலூர்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தனியார் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவதற்கு ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது- தாட்கோ மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தனியார் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவதற்கு ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பெருகி வரும் வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவனமானது புகழ் பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க உள்ளது. இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பிஏ, பி.காம், பிஎஸ்சி கணிதம் ) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பி க்கலாம்.

    இப்பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள் ஆகும். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொ ள்ளப்படும் இப்பயி ற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதி க்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலை வாய்ப்புக்கு வழிவகைச் செய்யப்படும். இப்பணியில் ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பெறலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணை யதளத்தில் விண்ண ப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெரம்பலூர் எஸ்.பி.க்கு விருது வழங்கபட்டுள்ளது
    • முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் விருது வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் எஸ்பிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து மீட்டு அரசின் வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தும், கொத்தடிமை ஒழிப்பு எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்து அவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் சிறப்பாக திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தியும், குழந்தை தொழிலாள முறை உருவாக காரணமும், பாதுகாப்பும், அரவணைப்பும் இல்லாத குந்தைகளை தங்களது பிழைப்பிற்காக வேலையில் ஈடுப்படுத்தப்படும் .குழந்தைகளை மீட்டு அரசு பரிந்துரைத்த இடங்களில் தங்க வைத்தும், சாலை யோரத்தில் பாதுகாப்பின்றி முறையில் தங்கியிருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தும் சிறப்பாகவும், தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் எஸ்.பி. ஷியாம்ளா தேவியை பாராட்டி சென்னையில் நடந்த அரசு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் அதன் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் விருது வழங்கி பாராட்டினார்.





    • பெரம்பலூரில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:- பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு பொம்மனப்பாடி, வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வெங்கனூர், குன்னம் வட்டாரத்திற்கு பேரளி (வடக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு அணைப்பாடி ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

    கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • கொலை முயற்சி வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இடப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூரை சேர்ந்த கந்தன் என்பவருக்கும், காலனி தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 39) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மங்களமேடு போலீசார் கலியமூர்த்தி தரப்பினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதில், இந்த வழக்கின் குற்றவாளிகளான கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அவரது தம்பி கருணாநிதிக்கும் (35), மற்றொரு தம்பியான சரத்குமாருக்கும் (32) தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.ஆயிரம் அபராதமும் மற்றும் 2 நபர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். மேற்படி கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு புலன் விசாரணையை முடித்து குற்றவாளிகளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மங்களமேடு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

    • தாத்தா வீட்டுக்கு சென்று மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்த வடக்கு மாதவி ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சத்யா. இந்த தம்ப–தியினரின் மகன் சுதர்சன் (வயது 5). கோவிந்தராஜ் சென்னை–யில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்யா தனது மகன் சுதர்சனுடன் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அனுக் கூர்குடிக்காடு காட்டுக் கொட்டகையில் வசித்து வரும் தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் சென்றிருநதார். இதற்கிடையே நேற்று காலை 10 மணியளவில் வீட்டு முன்பு விளையா–டிக்கொண்டு இருந்த சுதர்சனை திடீரென்று காண–வில்லை.

    இதனால் பதட்டம் அடைந்த அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அனுக் கூர்குடிக்காடு காட்டுப் பகுதியில் உள்ள பாசன கிணற்றின் அருகே சுதர்ச–னின் செருப்பு மற்றும் பொம்மைகள் கிடந்தன. இதனைக் கண்ட அப்பகு–தியினர் உடனடியாக அவ–னது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிறுவனின் தாய் மகன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத் துறையி–னருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் சுதர்சனின் உடல் மீட்கப்பட்டது. இதை பார்த்ததும் அவர் தாய் உள்ளிட்டோர் கதறி அழுதனர். இதனையடுத்து சுதர்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்ப–லூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சம்பவம் குறித்து மங்கள–மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப–டுத்தி உள்ளது.


    • மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • மணல் திருட பயன்படுத்திய மாட்டு வண்டியை மணலுடன் குன்னம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர், சின்னாறு வடகரை பகுதியில் மாட்டு வண்டியில் சிலர் மணல் திருடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குன்னம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கிழுமத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கிழுமத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கல்யாண குமார் (வயது 31) ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மணல் திருட பயன்படுத்திய மாட்டு வண்டி மற்றும் மணலுடன் குன்னம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




    ×