என் மலர்
உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய கிராம விவசாயிகள் தங்கள் பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடத்திற்கான நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் தாமரைகண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுப்புரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வன், உதவியாளர் கோபிநாத், ராமசாமி, வரதராசு, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், தனபால் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






