என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் நடைபெற்ற யாதவர்கள் குடும்பவிழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கபட்டது
    • விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா தலைமை தாங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின்சார்பில் யாதவர்களின் குடும்பவிழா, துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாளின் ஆன்மீக பிரசங்கம், வீரன் அழகுமுத்துகோன் வரலாறு பிரசங்கம், கிருஷ்ணரின் மேன்மையை கூறும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடந்தது.

    விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத்தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 சிறப்பிடம் பெற்ற யாதவகுல மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50ஆயிரம், ரூ.25ஆயிரம்,ரூ.10ஆயிரம் மற்றும் 120-பேர்களுக்கு தலா ரூ2ஆயிரம் கல்வி உதவித்தொகைளையும், எசனை, அன்னமங்கலம் யாதவ திருமண மண்டபங்களை புனரமைக்க தலா ரூ.50ஆயிரம் நிதிஉதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசும்போது, கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி, குடிமைப்பணி தேர்வு ஆகியவற்றில் யாதவகுல மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும். அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.அவருக்கு வெள்ளிவீரவாளை, மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்.

    விழாவிற்கு மாவட்ட அவைத்தலைவர் செட்டிகுளம் லிட்டில் பிளவர் பள்ளி தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளர் மகாத்மா பள்ளி ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.

    விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் கொம்புதி செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி செயலாளர், டாக்டர் முத்துலட்சுமி, இளைஞரணி செயலாளர் பொட்டல்.துரை, சட்ட ஆலோசகர் சபாபதி, மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் யாதவ மகாசபையின் பணிகள் , செயல்பாடுகள், சேவைகள் குறித்தும், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஒன்றிய நிர்வாகிகள் திருவள்ளுவர், சிறுநிலா விஜயா(மகளிரணி) ஆகியோர் மாவட் ட, ஒன்றிய அமைப்புகளின் பணிகள் குறித்தும் கருத்துரை ஆற்றினார்கள்.

    முக்கிய பிரமுகர்களுக்கு மாவட்ட பொருளாளர் ராமர் பொன்னாடை அணிவித்தார். விழாவில் மாவட்ட நிர்வாகிகள் பத்திரம் சிவக்குமார், பூலாம்பாடி வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், முத்துசாமி உள்பட 4 ஒன்றியங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளான பேர் கலந்துகொண்டனர். 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வளர்ந்த தென்னங்கன்றுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டன.

    முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்கி, பிரதான சாலைகள் வழியாக சென்று விழா நடந்த மகாலை அடைந்தது. இதில் மாநிலதலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு பெரம்பலூர் பெருமாள்,சிவன் மற்றும் பாலமுருகன் கோவில்கள் சார்பில் சிறப்பான வரவேற்பும், பூர்ணகும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. முடிவில் நகரத்தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.





    • வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து பெண் படுகாயமடைந்தார்.
    • இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இருப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 30). இவர், கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுமதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் சுமதிக்கு இடுப்பு, கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் சுமதியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பெரம்பலூரில் நாளை நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். அன்றைய தினம் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • சிறைதண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதம்
    • தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்

    பெரம்பலூர்,

    நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது பெண் கல்வி. பெண் கல்விக்கு தடையாக இருப்பது குழந்தை திருமணம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆகிய அனைவருக்கும் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 பிரிவு 11-ன்படி, 2 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ தண்டனையாக விதிக்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூக நல அலுவலரை 9944350988 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரை 8668092093 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 9443391931 என்ற செல்போன் எண்ணிலும், குழந்தை நலக்குழுவை 6369018347 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்

    அகரம்சீகூர்,

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கி மயான கொள்ளை திருவிழாவும் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை தீமிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    • 5 லிட்டர் சாராயம், டூவீலர் பறிமுதல்
    • சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வெள்ளுவாடியில் அங்காளம்மன் கோவில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் சூர்யாவை (வயது 22) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே இடத்தில் சாராயம் அழிக்கப்பட்டது.

    • 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • போலீசாருக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் கண் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், அவர்களின் குடும்பத்தினரும் பயனடைந்தனர்."

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலை விழா நிறைவு நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
    • நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங் களின் சார்பாக நட்சத்தி–ரக்கலை விழா 3 நாட்கள் கோலாகமாக நடைபெற்றது. இதில் விழாவின் 3-ம் மற்றும் நிறைவு நாள் கொண்டாட்டம் நேற்று சினிமா பிரபலங்களுடன் நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நட்சத்திரக்கலை விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார். விழா–வானது பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கரகாட்ட கலையோடு துவங்கப்பட் டது. செயலா–ளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்த–லட்சுமி கதிரவன், இயக்கு–நர் மணி, ராஜபூபதி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர்.

    விழாவில் திரைப்பட பிரபலங்களான நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அருண் விஜய், நடன இயகுனர் ராபர்ட், பாடகர்கள் கானா சுதாகர், பூவையார், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மணிமேகலை, அசார் ஆகியோர் கலந்துகொண்டு 20-க்கும் மேற்பட்ட பாடல் கள் பாடி, ஆடி மகிழ் வித்த–னர்.

    நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அருண் விஜய் ஆகியோர் மாணவ, மாண–வி–களுடன் நடனம் ஆடி–யும், கலந்துரையாடியும் விழாவை சிறப்பித்தனர். பெரம்பலூர் சுற்று வட் டார பகுதியின் பொது–மக்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழு–மத்தைச் சேர்ந்த பொறி–யியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள், நர்சிங் கல் லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், துணை மருத் துவ அறிவியல் கல்லூரி–கள், தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உடற்கல்வி–யியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண–விகள் ஆடிப்பாடி மகிழந்த–னர்.

    • பெரம்பலூரில் நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தமிழ்நாடு நரிகுறவர் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவனர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தென்னிந்திய ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். நரிக்குறவர்கள் சமு தாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததின் பயனாக கிடைக்க போகும் பயன்கள் குறித்தும், சமூக மக்களின் தொழில் வளர்ச்சி மேம்படுத்துதல் மற்றும் நரிக்குறவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துதல் போன்றவை குறித்து ஆலோசனை செய்ய ப்பட்டது.

    கூட்டத்தில் மத்திய அரசு நரிக்குறவன் என்கிற குருவிக்கார இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதை தமிழக அரசு பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37 வது பிரிவில் சேர்த்து காலதாமதமின்றி விரைவில் நரிக்குற வர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நரிக்குறவர்கள் தொழில் முன்னேற்றம் அடைய தமிழகத்தில் இருக்கின்ற பேரூராட்சி, நகராட்சி. மாநகராட்சி, சுற்றுலாத்தலம் பேருந்து நிலையம் மற்றும் அன்னதான திட்டத்தின் கீழ் இயங்கும் பிரசித்த பெற்ற கோவில்களில் 5 கடைகள் ஒதுக்கீடு செய்து தொழில் தொடங்க மானிய கடன் வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா. வீடு மற்றும் நிலமற்றவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய அரசு கொடுக்கவேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் நம்பியார் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் நன்றி கூறினார்.




    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது
    • காவல் உதவி செயலி குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு ஜான் பரிமளா மேரி ஆகியோர் மாணவ-மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 65). இந்நிலையில் தனது உறவினர் நாகராஜ் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நூத்தப்பூரில் இருந்து பில்லங்குளத்திற்கு சென்றுள்ளார். பில்லங்குளம் பகுதியில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அகரம்சீகூர் அருகே அபராதரட்சகர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை கிராமத்தில் அபராதரட்சகர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அறங்காவலர் துறை பெரம்பலூர் மாவட்ட தலைவர் கலியபெருமாள் துவக்கி வைத்தார். இதையொட்டி விக்னேஷ்வரர் பூஜையும், கலச பூஜையும், யாகமும், கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கருணாகரன், கோவில் அர்ச்சகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×