என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது
- பெரம்பலூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யபட்டனர்
- . இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று தப்பி சென்ற வழிப்பறி திருடர்களை பிடித்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் ரோவர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு (வயது41). இவர் காமராஜர் வளைவு அருகே செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பிரபு கடையை திறக்க டூவிலரில் எளம்பலூர் சாலை வழியே வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 பேர் பிரபுவை வழிமறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவரது பையிலிருந்த 500 ரூபாய், செல்போன் மற்றும் டூவிலரையும் பறித்துக்கொண்டு அதிவேகமாக தப்பி சென்றனர்.
இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று தப்பி சென்ற வழிப்பறி திருடர்களை பிடித்தனர். பின்னர் விசாரணையில் அவர்கள் மேரிபுரத்தை சேர்ந்த விஜயேந்திரன் மகன் ஹரிஹரன் (47), சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, முண்டலாம்பட்டியை சேர்ந்த ராமன் மகன் ரமேஷ் (எ) கருணாகரன் (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து டூவிலர், செல்போன், மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 டூவிலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஹரிஹரன், கருணாகரன் ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






