என் மலர்
நீலகிரி
போலீசார் வாகன சோதனையில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 மூட்டை தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.
குன்னூர்:
தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்டு குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குன்னூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்தவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை நிறுத்தி அதில் இருந்த பேரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. உடனடியாக லாரியில் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். லாரியில் தேங்காய் மட்டைகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
அதனை அகற்றி விட்டு போலீசார் சோதனை செய்தபோது மட்டைகளுக்கு நடுவே ஏராளமான சாக்கு மூட்டைகள் கிடந்தன. அந்த மூட்டைகளை எடுத்து போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.8½ லட்சம் ஆகும்.
பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியை சேர்ந்த ராஜூ(29), குருராஜி(24), சுரேஷ்(28) என்பது தெரியவந்தது. இவர்கள் கர்நாடகா குண்டல்பெட்டில் இருந்து கூடலூர், குன்னூர் வழியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 மூட்டை தடைசெய்யப்பட்ட குட்காவையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோத்தகிரியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழையுடன் கூடிய கடும் பனிமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மேலும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை பச்சை தேயிலை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில் கொப்புள நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்ற வேண்டும். தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும். செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்சோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதேபோன்று பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் மூலம் கொப்புள நோயை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
கூடலூர்:
கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பு நட வடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து எல்லைகளிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழகம், கேரள மற்றும் கர்நாடகா என 3 மாநில எல்லை பகுதிகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இங்கிருந்து கர்நாடகாவுக்கு அரசு பஸ்களும், வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
தற்போது கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை தொடர்ந்து கூடலூரில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார், சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். சோதனை சாவடியில் கார்களை தடுத்து நிறுத்தி கார் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் காரில் இருக்கும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து அவர்களிடம் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்று வைத்துள்ளார்களா? என்பதையும் சோதனை செய்கின்றனர். அப்படி இல்லை என்றால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என அவர்களிடம் விசாரிக்கின்றனர். ஊசி செலுத்தியிருந்தால் அவர்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
ஊசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பின்னர் அவர்களின் பெயர், முகவரி, அவர்கள் செல்லும் இடம், செல்போன் எண் போன்றவற்றை வாங்கி கொண்டு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றால் பரிசோதனை செய்து விட்டு சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், உடல் நிலை பாதிக்கப்பட்டால் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். மேலும் அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
காய்ச்சல் அறிகுறிகளுடன் வரக்கூடிய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை அவர்களது மாநிலத்திற்கே திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பஸ் மற்றும் வாகனங்களில் தமிழகம் வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக சுகாதார குழுவினர், செவிலியர்கள் அடங்கிய பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் ரெயில் நிலையத்திலும் கர்நாடகாவில் இருந்த வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகிரது. கூடுதல் சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். காரில் இருக்கும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து அவர்களிடம் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்று வைத்துள்ளார்களா? என்பதையும் சோதனை செய்கின்றனர். அப்படி இல்லை என்றால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என அவர்களிடம் விசாரிக்கின்றனர். காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க ஓசூர் அருகே தமிழக எல்லையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக உள்ள கொரோனா அறிகுறிகளை விட மாற்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பஸ்கள் மற்றும் கார்களில் வருபவர்கள் உரிய சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

குன்னூரில் தனியார் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக 3 பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஊட்டி:
குன்னூரில் உள்ள சி.எம்.எஸ். என்ற தனியார் விடுதியில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி அருகே உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். விடுதியில் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து விடுதியில் உள்ள சக மாணவிகள் மற்றும் பணியாளர்கள் என 114 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்ட 21 மாணவிகள் 3 பள்ளிகளில் படித்து வந்தனர். அதில் புனித மேரீஸ் பள்ளியில் படித்து வந்த 14 மாணவிகளுக்கு கொரோனா பாதித்தது. 3 பள்ளிகளிலும் படித்து வரும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும். கொரோனா பரவலை தடுக்கவும், தடுப்பு நடவடிக்கையாகவும் குன்னூர் புனித மேரீஸ் பள்ளி, புனித அந்தோணியார் பள்ளி உள்பட 3 பள்ளிகள் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளது.
3 பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பள்ளி வகுப்பறைகள், வளாகங்களில் நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

குன்னூரில் தனியார் விடுதியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சி.எம்.எஸ். என்ற தனியார் விடுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்து அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் விடுதியில் உள்ள மாணவிகள் சிலருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது.
இதையடுத்து விடுதியில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் விடுதியில் உள்ள 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவிகள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதி ஊழியர்கள், மாணவிகளுடன் பள்ளியில் படிப்பவர்கள் என மொத்தம் 100 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனியார் விடுதி மூடப்பட்டது. தொடர்ந்து தனியார் விடுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் நீலகிரி மாவட்டத்தில் 13 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 692 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 187 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,008 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வருகிற 1.1.2022-ந் தேதி தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் ஒரு மாதம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற விண்ணப்பங்களை பெற கடந்த 13, 14-ந் தேதிகள், கூடுதலாக 20, 21-ந் தேதிகள், 27, 28-ந் தேதிகள் என 3 வாரம் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
நீலகிரியில் வாக்குச்சாவடி அமைவிடங்களான 370 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு பெயர் இருப்பதை உறுதி செய்தும், திருத்தங்களையும் மேற்கொண்டனர்.
நீலகிரியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை பெற்று வாக்காளர்கள் பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.
சிறப்பு முகாம்களில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,198 பேர், கூடலூர் தொகுதியில் 3,048 பேர், குன்னூர் தொகுதியில் 1,762 பேர் என மொத்தம் 7,008 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்வதற்கு ஊட்டி தொகுதியில் 987 பேர், கூடலூர் தொகுதியில் 404 பேர், குன்னூர் தொகுதியில் 316 பேர் என மொத்தம் ஆயிரத்து 707 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய ஊட்டி தொகுதியில் 317 பேர், கூடலூர் தொகுதியில் 916 பேர், குன்னூர் தொகுதியில் 404 பேர் என மொத்தம் ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
திருத்தம் மேற்கொள்ள ஊட்டி தொகுதியில் 338 பேர், கூடலூர் தொகுதியில் 496 பேர், குன்னூர் தொகுதியில் 435 பேர் என மொத்தம் 1,269 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சிறப்பு முகாம்கள் மூலம் ஊட்டி தொகுதியில் 3,840, கூடலூர் தொகுதியில் 4,864, குன்னூர் தொகுதியில் 2,917 என மொத்தம் 11 ஆயிரத்து 621 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வருகிற ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கோத்தகிரி நேரு பூங்கா வெறிச்சோடியது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நேரு பூங்கா முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இங்கு அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பகுதி, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்து உள்ளன.
இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வந்து, தங்களது குழந்தைகளை அங்குள்ள சிறுவர் விளையாட்டு பகுதியில் விளையாட விட்டு மகிழ்கின்றனர். இதனால் உள்ளூர் மக்களுக்கும் நேரு பூங்கா பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்க தோட்டங்களுக்கு செல்லவும், காய்கறி விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்லவும் முடியாத நிலை உள்ளது.
மாறுபட்ட காலநிலை மற்றும் தொடர் மழை பெய்து வருவதால் நேரு பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் உள்ளூர் மக்களும் பூங்காவுக்கு செல்வதை விரும்பவில்லை. இதனால் நேரு பூங்கா ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதேபோன்று கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 673 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை தனது முழு கொள்ளளவான 43.5 அடியை எட்டியது.
குன்னூர்:
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, மவுண்ட் பேட்டன், ஓட்டுப்பட்டரை, சேலாஸ், கொலக்கெம்பை உள்பட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் குன்னூரில் இருந்து பார்லஸ் செல்லும் சாலையில் நின்றிருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. மேலும் அங்கிருந்த மின்சார கம்பி மீது பட்டதால் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இதேபோல் மவுண்ட்பேட்டன் சாலை, பெட்போர்டு செல்லும் சாலைகளிலும் 2 மரங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் 3 இடங்களிலும் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர இரவு முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

கோத்தகிரியிலும் பலத்த மழை பெய்தது. கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகள், கட்டபெட்டு செல்லும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காலை நேரம் இரவு போல காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியும், மெதுவாகவும் இயக்கி செல்கின்றனர்.
கோத்தகிரி- ஊட்டி சாலையில் கட்டபெட்டு என்ற இடத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்து அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, கூடலூர், பந்தலூரிலும் மழை பெய்தது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக மிதமான காலநிலையே நிலவுகிறது. அவ்வப்போது லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்கிறது. நேற்று இரவில் சாரல் மழை பெய்தது. இன்று காலை மேககூட்டங்கள் திரண்டு நகரமே இருள்சூழ்ந்த பகுதியாக காணப்படுகிறது.

புலி அணையில் குளித்த காட்சியை படகில் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பைக்காரா அணை. வனப்பகுதிக்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையை சுற்றி பார்க்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
வனப்பகுதிக்குள் இருப்பதால் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அப்படி கரையின் ஓரமாக நின்று தண்ணீர் குடிக்கும் வனவிலங்குகளை அங்கு படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் பிடித்து மகிழ்வார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்காரா அணைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அணையின் நடுவே புலி ஒன்று உற்சாகமாக தண்ணீரில் மூழ்கி குளித்து, ஆனந்தமாக விளையாடி கொண்டிருந்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக புலி அணையில் உற்சாக குளியல் போட்டது.
படகு தான் இருக்கும் இடம் நோக்கி வருவதை உணர்ந்ததும் புலி உடனடியாக அணையில் இருந்து வெளியேறி வனத்திற்குள் சென்று மறைந்து விட்டது. புலி அணையில் குளித்த காட்சியை படகில் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர். உடனடியாக தங்கள் செல்போனை எடுத்து அதில் புலி உற்சாக குளியல் போட்டதை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து கொண்டனர். பின்னர் அதனை தங்களது சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் பரப்பினர். தற்போது இந்த வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,905 பேர் குணமடைந்துள்ள நிலையில், 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 1,03,859 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 544 நாட்களில் குறைவான எண்ணிக்கை ஆகும்.
இதுவரை இந்தியாவில் 3,40,08,183 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,68,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 42,04,171 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 1,22,41,68,929 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்... இதையும் படியுங்கள்... தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா
குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல்வேறு விதமான இயற்கை கலந்த மூலிகை மலர்கள் பூத்து வருகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கவும், இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருவார்கள்.
அவர்கள் பூங்காக்களில் உள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களையும், சாலையோரங்களில் பூத்து குலுங்கும் அரிய வகை மலர்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல்வேறு விதமான இயற்கை கலந்த மூலிகை மலர்கள் பூத்து வருகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இயற்கை கலந்த கண் கவரும் மலர்களும் பசுமை நிறைந்த புல் தரைகளும், வான் உயர்ந்த மரங்களும் மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகளும் உள்ளன. இதுதவிர 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய குறிஞ்சி மலரும் உள்ளது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குறிஞ்சி மலர் பூத்து குலுங்குகிறது.
இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா முழுவதும் உள்ள மலர் செடிகளையும், மூலிகை செடிகளையும் பார்த்து விட்டு, பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலரையும் கண்டு ரசிக்கின்றனர். பூவை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று செல்பி புகைப்படமும், குடும்பத்துடன் நின்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள்.