என் மலர்
நீலகிரி
குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து 5. கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப் சத்திரம் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
அந்த இடத்தில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெலிங்டன் வந்துள்ள விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர். சவுத்ரி ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு சென்றுள்ளார்.
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சற்றுமுன் இந்த துயர சம்பவம் நடைபெற்றது. எரிந்த நிலையில் மீட்டகப்பட்ட உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டயறிப்பட்டுள்ளன. பிபின் ராவத் உடல் இன்று டெல்லிக்கு எடுத்துக் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான எப்படி? என கண்டறிய ஹெலிகாப்டரில் உள்ள கருப்புப் பெட்டி அவசியம். இந்த கருப்புப் பெட்டியில் கமாண்டர் பேசிய உரையாடல் பதிவாகியிருக்கும். இதை நிபுணர்கள் தேடிவருகின்றன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் தேடினர்.
தற்போது கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள நிபுணர்கள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ராணுவ அதிகாரிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பலியான 4 பேரும் டெல்லியை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது.
மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 5 பேர் பற்றிய விவரங்கள் உடனடியாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக இந்திய விமான படை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேகமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் வெலிங்டனில் உள்ள மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்துகொண்டு இருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 4 பேர் பயணம் செய்தனர்.
இந்த சம்பவம் அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஹெலிகாப்டரில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய விளைபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட மாவட்டங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு பசுமை அங்காடி மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் நீலகிரி மாவட்ட மக்களுக்கு கோவை, மைசூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வருகிறது. கர்நாடக மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லாத சூழலில் தமிழக மக்களின் தேவையை உணர்ந்து அம்மாநில வியாபாரிகள் தக்காளி விலையை நாளுக்குநாள் உயர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளை பாதிப்பை காரணம் காட்டி கூடலூரில் தக்காளி கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கூடலூரில் தக்காளி விலை உயர்த்தி விற்கப்படுவதால் ஆதிவாசி மற்றும் தோட்ட தொழிலாளர்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கர்நாடகத்தின் எல்லையில் கூடலூர் அமைந்துள்ளது. ஆனால் தக்காளி விலை சென்னைக்கு நிகராக விற்கப்படுகிறது. இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
விலை உயர்வு குறித்து காய்கறி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, கர்நாடகா மாநிலம் குண்டல்பெட், மைசூரு பகுதியில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தினமும் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து உள்ளதை உணர்ந்து கர்நாடக மொத்த வியாபாரிகள் கொள்முதல் விலை கிலோ ரூ.80 என நிர்ணயித்து வழங்குகின்றனர். இதனால் அங்கு இருந்து கொண்டு வரப்படும் லாரி வாடகை உள்ளிட்ட செலவினங்களை கருத்தில் கொண்டு ரூ.100 ஆக விற்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில் வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கப்பட்டது. அந்த மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ரேபீஸ் நோய் கண்டறியும் மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற ரூ.137 கோடி செலவில் உலகத்தர கட்டுமானம், உள்கட்டமைகள் மேம்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவு பெற்று ஜூலை மாதம் முதல் சோதனை பணிகள் தொடங்கப்பட்டன.
இதுதொடர்பாக பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:-
கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கி, சோதனை நடந்து வருகிறது. இந்த மருந்தின் மூலப் பொருட்களின் தரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னர் வணிக ரீதியாக வினியோகிக்க உரிமம் வழங்கும். உரிமம் கிடைத்தவுடன் முத்தடுப்பூசி மருந்து வினியோகிக்கப்படும். ஆண்டுக்கு 10 மில்லியன் டோஸ் முத்தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும். வருகிற 2023-ம் ஆண்டு வினியோகம் தொடங்கும்.
இந்த நிறுவனத்தில் ரேபீஸ் வெறிநாய் கடி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தனியார் நிறுவனங்களில் இருந்து தான் ரேபீஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கோவை பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கரில் ரேபீஸ் மருந்து புதிய உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது நில பரிமாற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் ரேபீஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கப்படும். இங்கு கொரோனா தடுப்பூசிகளை நிரப்புவது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் நிரப்பும் பணி தொடங்கும். மாதத்துக்கு ஒரு கோடி டோஸ்கள் நிரப்ப முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனங்களில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கேரளா முதல் கூடலூர், முதுமலை, கர்நாடகா மற்றும் சத்தியமங்கலம் வரை உணவு தேவை உள்ளிட்ட காரணங்களால் காட்டுயானைகள் இடம்பெயர்ந்து சென்று வருகின்றன. தற்போது கூடலூர், முதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் காட்டுயானைகள் கூட்டமாக உலா வந்தன.
அதில் பிறந்து சில வாரங்களே ஆன குட்டியானையும் அடங்கும். அப்போது அந்த சாலையில் சுற்றுலா வாகனங்களும் வந்தன. உடனே தாய் யானை உள்பட 2 பெரிய யானைகள் தங்களுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பாக குட்டியானையை அழைத்து சென்றன.
இதை கண்ட சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அந்த காட்சியை மிகவும் ஆச்சரியத்துடன் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற காட்டுயானைகள் அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுயானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. அவை குறிப்பிட்ட வயது வரை குட்டியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கும். இதுபோன்ற காட்சியை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் கண்டு ரசிக்க வேண்டும். ஏனென்றால் குட்டியானை இருக்கும்போது காட்டுயானைகள் திடீரென தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.
ஊட்டி:
நீலகிரி பிலிம் கிளப் சார்பில் குறும்பட திருவிழா ஊட்டியில் உள்ள அசெம்பிளி திரையரங்கில் நடைபெற்றது. இதில் 32 நாடுகளை சேர்ந்த 120 குறும்படங்கள் திரையிடப்பட்டன.
சிறந்த படம், நடிப்பு, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதி நாளான நேற்று மாலை ஊட்டி அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கினார்.
ஊட்டி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. சமீபத்தில் குன்னூருக்கு சிறந்த மலைவாசஸ்தலம் என விருது கிடைத்தது. திரைப்படம் சிறந்த பொழுது போக்காக உள்ளது. நல்ல கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கொண்டு செல்ல முடியும்.
கலைஞர் தனது கதை, வசனம் மூலம் சமூக சமத்துவ சிந்தனைகளை பரப்பி சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை திரைப்படங்கள் மூலமாகவே ஊட்டினார்.
சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதுடன், மக்களுக்கும் புதிய அனுபவத்தை தர வசதிகள் செய்து தரப்படும். ஊட்டியில் சுற்றுலா விழா நடத்தப்பட உள்ளது. சிறந்த குறும்பட இயக்குனர்களை எப்போதும் அரசு ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ஊட்டி மலைகளும், இயற்கை அழகும் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் ஆரம்ப காலங்களில் ஊட்டியில் திரைப்படப்பிடிப்பு நடக்காத நாட்களே கிடையாது. இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த ஊட்டியில் குறும்பட விழா நடத்துவது பாராட்டிற்குரியது. திரைப்படம் சார்ந்த படிப்புகளை பயின்ற இளைஞர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வர இதுபோன்ற குறும்படங்கள் சிறந்த வழி. நீலகிரியை சேர்ந்த பலரும் திரைத்துறையில் பிரகாசித்து வருகின்றனர். இன்னும் பலரும் வர வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்... டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது






