என் மலர்
நீலகிரி
தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாட்டையே இயக்கும் முக்கிய பதவிகளில் ஒன்றான முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து கோவை அருகே உள்ள சூலூர் விமான படை தளத்துக்கு வந்தார். சூலூரில் இருந்து எம்.ஐ.17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் அவர் குன்னூருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத்தும் வந்திருந்தார்.
ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி, அவர்களது பாதுகாப்புக்கு சென்ற ராணுவ கமாண்டோக்கள், 4 விமானிகள் என மொத்தம் 14 பேர் இருந்தனர்.
அவர்கள் சென்ற விமானம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியை நெருங்க இருந்த நிலையில் திடீரென விபத்தில் சிக்கியது. இன்னும் 5 நிமிடங்கள் அந்த ஹெலிகாப்டர் வழக்கம் போல் பறந்து இருந்தால் பிபின் ராவத், திட்டமிட்டபடி தான் பங்கேற்க வந்த கூட்டத்துக்கு சென்றிருப்பார்.
ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியபடி பறந்தது. சிறிது நேரத்தில் மேலே இருந்து கீழாக தலை குப்புற கவிழ்ந்தது. பயங்கர சத்தத்துடன் வெடித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. ஹெலிகாப்டரில் எரிபொருள் அதிகம் நிரப்பப்பட்டு இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
விபத்து நடந்த இடம் குடியிருப்பு பகுதி அருகே என்பதால் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் தங்களால் முடிந்த அளவு தீயை அணைக்க போராடினர்.
தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், ராணுவ வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்க அவர்கள் போராடினர். ஆனால் ஹெலிகாப்டரில் எரிந்த தீயை அவர்களால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீ எரிந்து கொண்டே இருந்தது. அதன்பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது. இருந்தாலும் மீட்புக்குழுவினர் தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டனர். சிலர் அங்கேயே பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் குன்னூர் ராணுவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதில் பிபின் ராவத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவியும், ராணுவ அதிகாரிகள் 11 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிபின் ராவத் உயிரிழந்த தகவல் அறிந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பலியான பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் உண்மையான தேச பக்தரை இழந்த விட்டதாக தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே பலியான பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று 13 பேரின் உடல்களும் தனி, தனிப் பெட்டிகளில் வைக்கப்பட்டு அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு இருந்தது.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்களை டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அதிகாலையே தொடங்கின.

அங்குள்ள பேரக்ஸ் அரங்கில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் தலைமையில் பிபின் ராவத் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல பிபின் ராவத்தின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர் கருப்பு துண்டு அணிந்திருந்தார்.
மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என். நேரு, வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் வெளிநாட்டு பயிற்சி ராணுவ வீரர்கள், பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் குன்னூரில் இருந்து பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து ராணுவ விமானத்தில் அவர்கள் உடல்கள் ஏற்றப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி சென்றதும் பிபின் ராவத் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
நாளை (10-ந் தேதி) காலை பிபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிபின் ராவத் வீடு பாராளுமன்றம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை அடுத்து இருக்கிறது.
அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் ரோடு வழியாக டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து முப்படைகளும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் இந்த விபத்து குறித்து குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, பாதுகாப்புக்காக போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர். நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் காவலர் வாகனம் வளைவில் திரும்பும்போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ் அதிகாரி உள்பட சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மற்றொரு இடத்தில் விபத்தில் சிக்கியது. இதனால், விபத்து ஏற்பட்ட ஆம்புலன்ஸில் இருந்து மற்றொரு வாகனத்துக்கு உடல் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் கொண்டு செல்லும்போது, மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் குவிந்திருந்த பொதுமக்கள் வழியெங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படியுங்கள்.. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் அஞ்சலி
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் உள்ள அறை எண் 102-க்குள் இன்று காலை திடீரென குண்டு வெடித்தது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்து தெறித்து ஓடினர்.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மடிக்கணினி வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், இருப்பினும் அதன் உண்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் துணை போலீஸ் கமிஷனர் பிரனாவ் தயால் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ரோகினி நீதிமன்ற அறையில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் வேடமிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. கோவா சட்டமன்ற தேர்தல்: பிரியங்கா காந்தி நாளை பிரசாரம் தொடங்குகிறார்
குன்னூர்:
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்களுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்த தகவல் அறிந்ததும் எனது நெஞ்சமே நொறுங்கி விட்டது. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகவே நான் ஓடோடி இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளேன்.
நாட்டு பற்றுடன் இருப்பதே நாம் இறந்தவர்களுக்கு செலுத்த கூடிய உண்மையான அஞ்சலி. முப்படை தலைமை தளபதி எந்நேரமும், நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றியவர் ஆவார்.

இந்த விபத்தில் சிக்கி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங்கையும் நேரில் பார்த்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரக்கூடிய சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் அவர் காப்பாற்ற பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில், 40 நாடுகளை சேர்ந்த 430 பேர் ராணுவ பயிற்சி பெற்று, ராணுவ உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
குன்னூர் நஞ்சப்பாசத்திரம் பகுதியில், நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தளபதி பிபின் ராவத் பல்வேறு உயரிய பதவிகளை வகித்தார். அதற்கான பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. அவரும் இந்த கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவர் ஆவார்.
இந்த நிலையில், தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் அவர் விபத்தில் சிக்கி பலியானார்.
இந்த சம்பவம் ராணுவ பயிற்சி கல்லூரி மாணவர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூரில் பயின்று நம் ராணுவ படைக்கு தலைமை வகித்து, பின்னர் முப்படைகளின் தளபதியாக தலைநிமிர்ந்த அந்த சிங்கம், தன் ராணுவ தந்திரங்கள் பயின்ற மண்ணிலேயே கம்பீரமாக தலை சாய்ந்தது, பெரும் வரலாற்று பதிவாகி உள்ளது.
அதன்பின் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
பெருமாள்சாமி (குன்னூர் நஞ்சப்ப சத்திரம்:-
நான் எனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது வானத்தில் ஏதோ ஒரு பெரிய அளவிலான சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்த போது ஹெலிகாப்டர் ஒன்று எரிந்தபடியே கீழே வந்த வண்ணம் இருந்தது.
அப்போது அதில் இருந்து 2 பேர் உடல் முழுவதும் தீ எரிந்த நிலையிலேயே கரிகட்டையாகி கீழே விழுந்தனர். வேகமாக வந்த ஹெலிகாப்டர் மரங்களில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
இந்த நிலையில் கீழே விழுந்த ஹெலிகாப்டரில் இருந்து 2 பேர் அபய குரல் எழுப்பினர். அவர்கள் இந்தியில் பேசியதால் எங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் தங்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று தான் அழைப்பார்கள் என நினைத்து கொண்டு நானும், இன்னும் சிலரும் சத்தம் வந்த இடம் நோக்கி ஓடினோம்.
அங்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க எவ்வளவோ முயற்சி மேற்கொண்டோம். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் எங்களால் அதன் அருகே நெருங்க முடியவில்லை. உடனடியாக அனைவருமே வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அணைக்க முயன்றோம். ஆனாலும் தீ பற்றி எரிந்தது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தோம். வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது தான் இது நடந்தது என்று நாங்கள் நினைத்திருந்தோம்.
ஆனால் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், ராணுவ மற்றும் விமான படையினர் வந்த பின்னர் தான் இந்த விபத்தில் இந்திய நாட்டின் தளபதியே சிக்கி உயிரிழந்த தகவல் எங்களுக்கு தெரிந்தது. இது மிகவும் வேதனையளிக்கிறது. காப்பாற்றுங்கள் என்று அழைத்தவர்களை கூட எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், நாங்கள் சிலர் சாலையோரம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அப்போது டமார், டமார் என சத்தம் கேட்டது. யாராவது வெடி வெடிக்கிறார்களோ என்று தான் நினைத்தோம். ஆனால் சற்று தொலைவில் பார்த்தபோது அந்த பகுதியே கரும்புகை மண்டலமாகவும், தீயும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அங்கு ஒடி சென்று எங்கள் பகுதியை சேர்ந்த அனைவருமே தீயை அணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டோம். ஆனாலும் எவ்வளவோ முயன்றும் 13 பேர் உயிரிழந்து விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் அவர்களுடன் பயணித்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். அவர் 80 சதவீத தீக்காயங்களுடன் குன்னூர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வரும் பட்சத்தில் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவையில் இருந்து சென்ற சிறப்பு மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படைத் தளபதி உள்பட 14 பேர் பயணித்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதனை குன்னூர் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் இருந்தது.
மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது வானில் கடுமையான மேகமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. பனி மூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் ஹெலிகாப்டர் தொடர்ந்து பயணித்தது. ஆனால் மேட்டுப்பாளையத்தை கடந்தபோதே ஹெலிகாப்டர் தள்ளாடியபடியே சென்று உள்ளது.

முப்படை தளபதி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உடனடியாக விமானப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த காட்டேரி பகுதிக்கு விரைந்தனர். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? பனி மூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஹெலிகாப்டரில் ஏதாவது கோளாறு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடமும் உள்ளூர் போலீசார் உதவியுடன் விமானப்படையினர் விசாரித்தனர்.
விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஆகும். ஏனென்றால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் பாதுகாப்பானது என்பதால் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் தாங்கள் செல்வதற்கு இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
பொதுவாகவே இந்த ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி புறப்பட்ட இந்த எம்.ஐ.17 வி.5 ரக ஹெலிகாப்டரும் பரிசோதிக்கப்பட்டது.
அதன்பின்னரே முப்படை தளபதி உள்பட 14 பேர் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். பலமுறை பரிசோதிக்கப்பட்டும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.
பொதுவாகவே ராணுவ உயர் அதிகாரிகள் பயணிக்கும் போதும், அவர்கள் செல்லக்கூடிய விமானம், ஹெலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். விபத்தில் சிக்கிய இந்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி எல்லாம் விபத்துக்குள்ளானது கிடையாது.
அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. மேலும் பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது தெரியவில்லை.
உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக சில வேலைகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது.
இதன் காரணமாக கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை கொண்டு விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.






