என் மலர்
நீலகிரி
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள செல்போன் டவர்களை கண்காணித்து அதில் விபத்து நடந்த தினம் அன்று பதிவாகி இருந்த செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந்தேதி முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத்தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண்சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் குன்னூரிலேயே முகாமிட்டு விபத்து நடந்த இடம், விபத்து நடப்பதற்கு முன்பு வீடியோ எடுத்த ரெயில்பாதை பகுதி, ஹெலிகாப்டர் வான் வழியாக பறந்ததன் நிலமார்க்க பகுதிகளில் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பகுதியையும் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர் நேரில் பார்வையிட்டனர். அங்கு ஹெலிகாப்டர் பாகங்கள் மற்றும் வேறு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை கண்டறிய தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அங்குள்ள செடி, மரங்களில் ரத்த கறைகள் படர்ந்திருந்தன. உடனடியாக அதனை விசாரணை குழுவினர் சேகரித்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணியில் இறங்கிய ராணுவம் மற்றும் விமானப்படையினர் இறக்கைகளை இணைக்கக் கூடிய மையப்பகுதியான மெயின் ரோட்டார், மாஸ்ட் உள்ளிட்டவற்றையும், ஹெலிகாப்டரின் பாகங்களையும் மீட்டனர். மேலும் அதில் இருந்து ராணுவ துப்பாக்கிகள், செல்போன்கள் போன்றவற்றையும் மீட்டனர்.
விமானப்படையினர் 2 ட்ரோன் கேமிராக்களை விபத்து நடந்த பகுதி, சாலை பகுதி, தேயிலை தோட்ட பகுதிகளில் பறக்க விட்டு அந்த பகுதிகளில் வேறு ஏதாவது ஆதாரங்கள், ஹெலிகாப்டரின் பாகங்கள் கிடக்கிறதா? என்பதையும் ஆராய்ந்தனர்.
முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவினர், விபத்து தொடர்பாக நஞ்சப்பசத்திரம் மக்கள், விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்த தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள், விபத்து நடப்பதற்கு முன்பு ஹெலிகாப்டரை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என இதுவரை 80 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோதே தீ பிடித்து கீழே விழுந்ததா? அல்லது கீழே விழுந்ததும் தீ பிடித்ததா? என பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்கள் அளித்த பதில்களையும் பதிவு செய்து கொண்டனர்.
இதுதவிர அந்த பகுதியில் மூடப்பட்டிருந்த காட்டேஜ் யாருடையது? அது எவ்வளவு நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. அதில் யாராவது தங்கி இருந்தார்களா? என்ற தகவல்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள செல்போன் டவர்களை கண்காணித்து அதில் விபத்து நடந்த தினம் அன்று பதிவாகி இருந்த செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர்.
இதேபோல் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எஸ்.பி முத்துமாணிக்கம் தலைமையிலான விசாரணை குழுவினரும் அந்த பகுதியிலேயே முகாமிட்டு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள், விபத்தை நேரில் பார்த்ததாக கூறப்படுவர்கள் என பலரிடமும், ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் கதவுகள் திறந்திருந்ததா? அதில் இருந்து யாராவது கீழே குதித்தார்களா? விமானம் விழுந்து கிடந்தபோது முதலில் எந்த நிலைமையில் இருந்தது? விழுந்ததும் தீ பிடித்ததா? அல்லது சில நிமிடங்கள் கழித்து தீ பிடித்ததா? யாராவது உடல் கருகி கிடந்தனரா? என விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டியை விசாரணை குழுவினர் மீட்டு ஆய்விற்காக பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளனர். அது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அது வந்த பின்னரே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது எப்படி? ஹெலிகாப்டரில் கடைசியாக என்ன நடந்தது, அதில் இருந்தவர்கள் கடைசியாக என்ன பேசினார்கள் என்ற தகவல்கள் தெரியவரும்.
இதையும் படியுங்கள்... விராட் கோலி குறித்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.சி.சி.ஐ.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தை உயிருக்குபோராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்த்ததாக ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை பார்த்தவுடன் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்பு களத்தில் குதித்தனர். அவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரை கொண்டு போய் ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து மீட்பு பணியும் மேற்கொண்டனர். தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவினர்.
உதவி செய்தபோது ராணுவ வீரர்கள் நிலைமை குறித்து நேரில் பார்த்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிரிந்து வருகிறார்கள். அந்த வகையில் பிபின் ராவத் உயிருக்கு போராடிய நிலையிலேயே, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்புலன்சில் மருத்துவ பணியாளர்களாக இருந்தவர்கள் பிபின் ராவத்தின் கடைசி நேர அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராம மூர்த்தி: ஹெலிகாப்டர் விபத்து நடந்ததாக 12.36-க்கு உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக நான் மருத்துவ பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு 12.40 மணியளில் சென்றடைந்தோம்.
அங்கு ஏற்கனவே, ஆம்புலன்ஸில் சென்றவர்கள் பிபின் ராவத் உடலை நாங்கள் சென்ற வாகனத்திற்கு மாற்றினார்கள். நான் உடனடியாக வாகனத்தை எடுத்து மருத்துவனைக்கு ஓட்டிச் சென்றேன் என்றார்.
விக்னேஷ, அவசரநிலை மருத்துவமனை உதவியாளர்: விபத்து நடத்த இடத்தில் இருந்து பிபின் ராவத் என்றுதான் தெரியாமலேயே ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு எடுத்து வந்தோம். அடுத்த ஒரு நிமிடத்தில் கேப்டன் வருண் அவர்களையும் எடுத்து வந்தார்கள்.
இருவரையும் ஒரே ஆம்புலன்சின் ஏற்றிக் கொண்டு சென்றோம். மருத்துவமனையில் இருவரையும் உயிரோடு சேர்த்தோம். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும்போது, தளபதி இந்தியில் பேசினார். அதனால் தனக்கு சரியாக ஏதும் புரியவில்லை. அருகில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் இந்தியில் ஏதோ கூறினார். தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தன்னை காப்பாற்றும்படி அவர் கூறியதாக எனக்கு புரிந்தது’’ என்றார்.
நஞ்சப்பசத்திரம் கிராமத்தை சென்னை தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் தத்தெடுப்பதாக லெப்டினண்ட் ஜெனரல் அருண் கூறினார்.
குன்னூர்:
குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை பார்த்தவுடன் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்பு களத்தில் குதித்தனர். அவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரை கொண்டு போய் ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து மீட்பு பணியும் மேற்கொண்டனர். தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவினர்.
தன்னலம் பாராமல் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரம் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த ராணுவத்தினர் இதயங்களிலும் இடம் பிடித்து விட்டனர். இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
அவர்களை ராணுவ அதிகாரிகள் சந்தித்து பாராட்டி நல உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழக காவல்துறை சார்பில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கிராம மக்களை பாராட்டி கம்பளிகள் வழங்கினார்.
இந்தநிலையில் நேற்று தென் பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ. அருண் குன்னூருக்கு வருகை வந்தார். வெலிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து லெப்டினண்ட் ஜெனரல் அருண், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நஞ்சப்பசத்திரம் மக்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். கிராம மக்களுக்கு தேவையான போர்வைகள், சோலார் எமர்ஜென்சி விளக்குகள் மற்றும் உணவுப்பொருட்களை அவர் வழங்கினார்.
லெப்டினண்ட் ஜெனரல் அருண் பேசுகையில் கிராம மக்களின் முயற்சி தன்னை நெகிழ்வித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் நஞ்சப்பசத்திரம் கிராமத்தை சென்னை தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் தத்தெடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி இந்த கிராம மக்கள் ஒன்று கூடும் வகையில் சமுதாய கூடம் ஒன்று கட்டிக் கொடுக்கப்படும், அடுத்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி வரை ஒவ்வொரு மாதமும் இந்த கிராமத்தில் டாக்டர், நர்சுகளை கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். மேல் சிகிச்சை தேவைப்பட்டால் ராணுவ ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுவர் என தெரிவித்தார்.
அவரது அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தை முதலில் பார்த்து தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, சந்திரகுமார் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டுயானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளது.
இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் ஆங்காங்கே சாலைகளில் நின்று அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பெரும்பள்ளம் அருகே சென்றபோது எதிரே குட்டியுடன் 4 காட்டு யானைகள் சாலையை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளின் வழி மறிப்பில் சிக்கி ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டுயானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்று சாலையோரம் இருந்த மண்பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தார்கள். இதை தொடர்ந்து அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு மஞ்சூர் சென்றடைந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தியை அடுத்த தேனலை கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்மணி (வயது 68). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
ருக்மணி மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ருக்மணி வீட்டில் இருந்தார். வெகுநேரமாக அவரது வீட்டில் எந்தவித சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ருக்மணி வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது ருக்மணி கொலை செய்யப்பட்டு வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அவரது உடலில் கை, கால், கழுத்து என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. ருக்மணி அணிந்திருந்த கம்மல், மோதிரமும் திருட்டுப் போய் இருந்தது.
ருக்மணி கொலை செய்யப்பட்டது குறித்து கேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம், நகையை பறிக்க விடாமல் ருக்மணி போராடியபோது ஆத்திரத்தில் கொள்ளையர்கள் அவரை கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
ருக்மணி வீட்டுக்கு அடுத்து லட்சுமி (68) என்ற மூதாட்டி வசித்து வந்தார். அவர் வீட்டில் 16 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு பவுன் நகை வைத்திருந்தார். அந்த பணமும், நகையும் கொள்ளை போய் உள்ளது.
ருக்மணியை கொன்ற நபர்கள் தான் லட்சுமி வீட்டுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை நடந்த சமயத்தில் லட்சுமி வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நஞ்சப்பசத்திரம் பகுதியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலை மையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற அவர், அங்கு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பங்கேற்றார்.
விழாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பேசியதாவது:-
ஹெலிகாப்டர் விபத்து நடந்த தகவல் அறிந்ததும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தினார். குறிப்பாக விபத்து தகவல் அறிந்த 10-வது நிமிடத்திலேயே தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை அனுப்பி மீட்பு பணியை மேற்கொண்டார். அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இதேபோல் அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிக்கு உதவினர். ஹெலிகாப்டர் விபத்தில் உதவாதவர்கள் என்று யாரையுமே கூறமுடியாது. அனைவருமே ஓடி வந்து பல்வேறு உதவிகளை செய்து மீட்பு பணிக்கு உதவினர். அதிலும் நஞ்சப்ப சத்திரம் மக்கள் விபத்து நடந்ததும், தங்கள் பகுதியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்து மீட்பு பணிக்கு உதவியுள்ளனர். மேலும் தீயணைப்பு, ராணுவத்தினர் வந்த பின்னரும் அவர்களுக்கு பல உதவிகள் செய்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இதுபோன்ற குடிமக்கள் இருந்தால் இதே ராணுவ உடையை 5 ஆயிரம் முறை கூட அணிந்து கொண்டு நாங்கள் பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேற்று கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...வாரணாசியில் பிரதமர் மோடி: படகு மூலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார்
விமான படையினர், ராணுவத்தினர் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிறு சிறு பொருட்களையும் ஆய்வு செய்து சேகரித்து வருகிறார்கள்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படைகளின் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் மற்றும் விசாரணை குழுவினர் கடந்த 3 நாட்களாக விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டும், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து விபத்து நடந்த பகுதி யை ராணுவம் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சீல் வைத்து எரிந்த ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியை முழுவதும் ஆய்வு செய்த ராணுவ, விமானபடையினர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொண்டு வந்த பொருட்கள், அதிகாரிகளின் துப்பாக்கிகள் மற்றும் செல்போன்களின் பாகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக மீட்டு கொண்டு சென்றனர். மேலும் அங்குள்ள, செடி, கொடி, இலைகளில் படர்ந்திருந்த ரத்த கறைகள் போன்றவற்றையும் சேகரித்தனர்.
இதேபோல் எரிந்த ஹெலிகாப்டரின் பல பாகங்களும் தனித்தனியாக மீட்கப்பட்டு எம்.ஆர்.சி மற்றும் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நேற்றும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லீப் என்றழைக்கப்படும், ரோட்டார் மீட்பு பணி நடந்தது. நிலத்தின் மீது மோதிய நிலையில் இருந்த மெயின் ரோட்டார்(இறக்கைகளை இணைக்க கூடிய மையபகுதி), பிளேட், மாஸ்ட் ஆகியவற்றை கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.
மேலும் விமானபடையினர், ராணுவத்தினர் அந்த பகுதியில் உள்ள சிறு, சிறு பொருட்களையும் ஆய்வு செய்து சேகரித்து வருகிறார்கள். சில பாகங்கள் கட்டர் மிஷினால் உடைக்கப்பட்டும் மீட்கப்பட்டன.

ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.
ஊட்டி:
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று (திங்கட்கிழமை) குன்னூருக்கு வருகிறார். பின்னர் அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் நரவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.
கூடலூர் அருகே தார் கலவை எந்திரம் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரத்தை மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன? மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதுடன், அந்த இடத்தில் மீண்டும் தார் கலவை எந்திரம் செயல்படாது என்ற உறுதியையும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பொதுமக்கள் தடுப்பூசி சான்றிதழுடன் நடமாடவேண்டும்- கவர்னர் அதிரடி அறிவிப்பு
ஹெலிகாப்டர் விபத்து நடந்த அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு விசாரணை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத் த நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நேற்று ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஸ்வர் சிங், நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து முப்படைகளின் வீரர்களும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரிபாகங்களை சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மரங்களை வெட்டி உதவி செய்கின்றனர்.
மேலும் சேகரித்த உதிரிபாகங்களை பாதுகாப்புடன் உடைக்க வெல்டிங் எந்திரங்களும் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன், குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் விபத்து நடந்த பகுதிக்கு முதலில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீ காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி இருந்ததா? அவை சேதமாகி உள்ளதா? என்பது குறித்து அறிய மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் விசாரணை குழு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் போன்ற காட்சிகளும், பின்னர் கீழே விழுவது போன்ற சத்தத்துடன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ தான் ஹெலிகாப்டர் விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோவாகும். இதனை முக்கிய ஆதாரமாக கருதிய போலீசார் அந்த வீடியோவை எடுத்தவர்கள் யார் என விசாரித்தபோது, கோவையை சேர்ந்த ஜோ மற்றும் அவரது நண்பர் நாசர் ஆகியோர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் அந்த வீடியோவை எடுத்ததாகவும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர்.
முப்படைத்தளபதி சென்ற அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதால் போலீசார் இதனை முக்கிய ஆதாரமாக கருதினர். இதையடுத்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார், நேற்று ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை வீடியோ எடுத்த நாசரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும் விசாரணையை தீவிரப்படுத்த தமிழக காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதவிர மீட்கப்பட்ட சேதமடைந்த ஹெலிகாப்டர் பாகங்களை மீண்டும் வடிவமைத்து, அதில் எந்த பாகங்கள் இல்லை என்பதையும், அதனை தேடும் பணியில் இறங்கவும் விசாரணை குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் போன்ற காட்சிகளும், பின்னர் கீழே விழுவது போன்ற சத்தத்துடன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ தான் ஹெலிகாப்டர் விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோவாகும். இதனை முக்கிய ஆதாரமாக கருதிய போலீசார் அந்த வீடியோவை எடுத்தவர்கள் யார் என விசாரித்தபோது, கோவையை சேர்ந்த ஜோ மற்றும் அவரது நண்பர் நாசர் ஆகியோர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் அந்த வீடியோவை எடுத்ததாகவும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர்.
முப்படைத்தளபதி சென்ற அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதால் போலீசார் இதனை முக்கிய ஆதாரமாக கருதினர். இதையடுத்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார், நேற்று ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை வீடியோ எடுத்த நாசரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும் விசாரணையை தீவிரப்படுத்த தமிழக காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விழுந்து கிடந்த ராணுவ துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. மேலும் விமானப்படை அதிகாரி நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
ஊட்டி :
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்தில் அவர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் விமானி வருன் சிங் மட்டும் 80 சதவீத காயங்களுடன், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால் மரங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தலைமை தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் 16 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டது. தற்போது கடல் மட்டத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விபத்து நடைபெற்ற இடத்தில் நவீன டிரோன் கேமரா பறக்கவிடப்பட்டு, ஹெலிகாப்டர் எவ்வளவு அடி உயரத்தில் பறந்த போது விபத்து ஏற்பட்டது, விபத்து நடைபெற்ற இடத்திற்கும் தரையிறங்க வேண்டிய இடத்திற்கும் இடையே உள்ள தூரம், ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கும், விபத்து நடைபெற்ற இடத்திற்கும் உள்ள தூரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதில் அந்த ஹெலிகாப்டர் 750 மீட்டர் உயரத்தில் விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே மத்திய அரசு விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங்கை விசாரணை அதிகாரியாக நியமித்தது. இவர் 2-வது நாளாக நேற்று ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசித்து விசாரணையை மேற்கொண்டார். அவருடன் விமானப்படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ் உடனிருந்தார். ரன்னிமேடு ரெயில் பாதை அருகே சுற்றுலா பயணி ஒருவர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கடும் பனிமூட்டத்தில் சென்ற போது வீடியோ எடுத்து உள்ளார். அந்த இடத்திற்கு விசாரணை அதிகாரி சென்று ஆய்வு செய்தார். அங்கு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததா, கடும் பனிமூட்டம் நடுவே சென்றது குறித்து விசாரணை நடத்தினார்.
2-வது நாளாக விமானப்படை சிறப்பு குழுவினர் நவீன கருவிகளுடன் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு வருகை தந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் விழுந்த இடம், மரங்கள் மீது மோதிய பகுதி, வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். டிரோன் கேமரா பறக்கவிட்டு ஆய்வு பணியை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரின் பின்னால் இருந்த வால் பகுதி உடைந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தது. 15 அடி நீள வால் பகுதி எரியாமல் இருந்தது.
மேலும் ராணுவ வீரர்கள் கொண்டு வந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. பிஸ்டல் மற்றும் அதனை லோடு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களை விமானப்படையினர் சேகரித்தனர். எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் துப்பாக்கிகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேபோல் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேரியர் லிடர் உள்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டனர்.
ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின், ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்களும் அறிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 2,500 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று காலையில் மூடப்பட்டி ருந்தன. ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய்கறி கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்களை விற்கவும், வாங்கவும் மக்கள் வந்த வண்ணம் இருப்பர்.
இன்று காலை இந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டி கமர்சியல் சாலையில் செல்போன் கடைகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், எலக்ட்ரிக் கடைகள் என 300-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. பெரும்பாலும் ஜவுளி கடைகளே அதிகளவில் உள்ளன. இதனால் இங்கு எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த கடைகளும் இன்று அடைக்கப்பட்டதால் காலையில் இருந்தே இந்த பகுதியில் எந்தவொரு வாகனத்தையோ, மக்கள் நடமாட்டத்தையோ பார்க்க முடியவில்லை. இந்த பகுதியே மிகவும் அமைதியாக காணப்பட்டது.
இதேபோல் ஊட்டியில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருந்தது. இவர்கள் கடைகளை அடைத்து ராணுவ அதிகாரிகளுக்கு தங்கள் நினைவஞ்சலியை செலுத்தினர்.
குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, டெட்போர்டு, சேலாஸ், எலநள்ளி, கொடநாடு, கட்டபெட்டு, கொட்டகெம்பை, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், குஞ்சப்பனை உள்பட அனைத்து பகுதிகளிலும் செயல்பட கூடிய டீக்கடைகள், உணவகங்கள், பெரிய, பெரிய வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
குன்னூர் மற்றும் கோத்தகிரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருந்தன.
மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு தங்கள் துக்கத்தை கடைபிடித்தனர்.
கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள், ஓட்டுனர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் திரண்டு கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்று ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் 150க்கும் அதிகமான தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த பஸ்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இன்று ஒருநாள் மட்டும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் தனியார் பஸ்கள் இன்று ஓடவில்லை.இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்கள் மட்டுமே வழக்கம்போல் இயங்கின. தனியார் பஸ் மற்றும் ஆட்டோ போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை. நீலகிரிக்கு வாரத்தின் அனைத்து நாட்களுமே சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இன்று சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைவாகவே இருந்தது.
இதையும் படியுங்கள்... மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் - சமந்தா