என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
முப்படைத்தளபதி உள்பட 13 பேர் பலி- ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 80 பேரிடம் ராணுவம் விசாரணை
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள செல்போன் டவர்களை கண்காணித்து அதில் விபத்து நடந்த தினம் அன்று பதிவாகி இருந்த செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந்தேதி முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத்தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண்சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் குன்னூரிலேயே முகாமிட்டு விபத்து நடந்த இடம், விபத்து நடப்பதற்கு முன்பு வீடியோ எடுத்த ரெயில்பாதை பகுதி, ஹெலிகாப்டர் வான் வழியாக பறந்ததன் நிலமார்க்க பகுதிகளில் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பகுதியையும் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர் நேரில் பார்வையிட்டனர். அங்கு ஹெலிகாப்டர் பாகங்கள் மற்றும் வேறு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை கண்டறிய தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அங்குள்ள செடி, மரங்களில் ரத்த கறைகள் படர்ந்திருந்தன. உடனடியாக அதனை விசாரணை குழுவினர் சேகரித்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணியில் இறங்கிய ராணுவம் மற்றும் விமானப்படையினர் இறக்கைகளை இணைக்கக் கூடிய மையப்பகுதியான மெயின் ரோட்டார், மாஸ்ட் உள்ளிட்டவற்றையும், ஹெலிகாப்டரின் பாகங்களையும் மீட்டனர். மேலும் அதில் இருந்து ராணுவ துப்பாக்கிகள், செல்போன்கள் போன்றவற்றையும் மீட்டனர்.
விமானப்படையினர் 2 ட்ரோன் கேமிராக்களை விபத்து நடந்த பகுதி, சாலை பகுதி, தேயிலை தோட்ட பகுதிகளில் பறக்க விட்டு அந்த பகுதிகளில் வேறு ஏதாவது ஆதாரங்கள், ஹெலிகாப்டரின் பாகங்கள் கிடக்கிறதா? என்பதையும் ஆராய்ந்தனர்.
முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவினர், விபத்து தொடர்பாக நஞ்சப்பசத்திரம் மக்கள், விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்த தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள், விபத்து நடப்பதற்கு முன்பு ஹெலிகாப்டரை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என இதுவரை 80 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோதே தீ பிடித்து கீழே விழுந்ததா? அல்லது கீழே விழுந்ததும் தீ பிடித்ததா? என பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்கள் அளித்த பதில்களையும் பதிவு செய்து கொண்டனர்.
இதுதவிர அந்த பகுதியில் மூடப்பட்டிருந்த காட்டேஜ் யாருடையது? அது எவ்வளவு நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. அதில் யாராவது தங்கி இருந்தார்களா? என்ற தகவல்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள செல்போன் டவர்களை கண்காணித்து அதில் விபத்து நடந்த தினம் அன்று பதிவாகி இருந்த செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர்.
இதேபோல் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எஸ்.பி முத்துமாணிக்கம் தலைமையிலான விசாரணை குழுவினரும் அந்த பகுதியிலேயே முகாமிட்டு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள், விபத்தை நேரில் பார்த்ததாக கூறப்படுவர்கள் என பலரிடமும், ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் கதவுகள் திறந்திருந்ததா? அதில் இருந்து யாராவது கீழே குதித்தார்களா? விமானம் விழுந்து கிடந்தபோது முதலில் எந்த நிலைமையில் இருந்தது? விழுந்ததும் தீ பிடித்ததா? அல்லது சில நிமிடங்கள் கழித்து தீ பிடித்ததா? யாராவது உடல் கருகி கிடந்தனரா? என விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டியை விசாரணை குழுவினர் மீட்டு ஆய்விற்காக பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளனர். அது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அது வந்த பின்னரே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது எப்படி? ஹெலிகாப்டரில் கடைசியாக என்ன நடந்தது, அதில் இருந்தவர்கள் கடைசியாக என்ன பேசினார்கள் என்ற தகவல்கள் தெரியவரும்.
இதையும் படியுங்கள்... விராட் கோலி குறித்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.சி.சி.ஐ.
Next Story