என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை
குன்னூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தியை அடுத்த தேனலை கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்மணி (வயது 68). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
ருக்மணி மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ருக்மணி வீட்டில் இருந்தார். வெகுநேரமாக அவரது வீட்டில் எந்தவித சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ருக்மணி வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது ருக்மணி கொலை செய்யப்பட்டு வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அவரது உடலில் கை, கால், கழுத்து என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. ருக்மணி அணிந்திருந்த கம்மல், மோதிரமும் திருட்டுப் போய் இருந்தது.
ருக்மணி கொலை செய்யப்பட்டது குறித்து கேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம், நகையை பறிக்க விடாமல் ருக்மணி போராடியபோது ஆத்திரத்தில் கொள்ளையர்கள் அவரை கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
ருக்மணி வீட்டுக்கு அடுத்து லட்சுமி (68) என்ற மூதாட்டி வசித்து வந்தார். அவர் வீட்டில் 16 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு பவுன் நகை வைத்திருந்தார். அந்த பணமும், நகையும் கொள்ளை போய் உள்ளது.
ருக்மணியை கொன்ற நபர்கள் தான் லட்சுமி வீட்டுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை நடந்த சமயத்தில் லட்சுமி வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story