என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிபின் ராவத்
பிபின் ராவத் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது- நாளை ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு
பிபின் ராவத் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
குன்னூர்:
தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாட்டையே இயக்கும் முக்கிய பதவிகளில் ஒன்றான முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்களை டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அதிகாலையே தொடங்கின.

அங்குள்ள பேரக்ஸ் அரங்கில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் தலைமையில் பிபின் ராவத் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல பிபின் ராவத்தின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர் கருப்பு துண்டு அணிந்திருந்தார்.
மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என். நேரு, வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் வெளிநாட்டு பயிற்சி ராணுவ வீரர்கள், பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் குன்னூரில் இருந்து பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து ராணுவ விமானத்தில் அவர்கள் உடல்கள் ஏற்றப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி சென்றதும் பிபின் ராவத் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
நாளை (10-ந் தேதி) காலை பிபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிபின் ராவத் வீடு பாராளுமன்றம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை அடுத்து இருக்கிறது.
அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் ரோடு வழியாக டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிபின் ராவத்துடன் பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.
பிபின் ராவத், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நேற்று நடைபெறுவதாக இருந்த பயிற்சி அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டு இருந்தார்.
இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து கோவை அருகே உள்ள சூலூர் விமான படை தளத்துக்கு வந்தார். சூலூரில் இருந்து எம்.ஐ.17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் அவர் குன்னூருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத்தும் வந்திருந்தார்.
ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி, அவர்களது பாதுகாப்புக்கு சென்ற ராணுவ கமாண்டோக்கள், 4 விமானிகள் என மொத்தம் 14 பேர் இருந்தனர்.
அவர்கள் சென்ற விமானம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியை நெருங்க இருந்த நிலையில் திடீரென விபத்தில் சிக்கியது. இன்னும் 5 நிமிடங்கள் அந்த ஹெலிகாப்டர் வழக்கம் போல் பறந்து இருந்தால் பிபின் ராவத், திட்டமிட்டபடி தான் பங்கேற்க வந்த கூட்டத்துக்கு சென்றிருப்பார்.
ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியபடி பறந்தது. சிறிது நேரத்தில் மேலே இருந்து கீழாக தலை குப்புற கவிழ்ந்தது. பயங்கர சத்தத்துடன் வெடித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. ஹெலிகாப்டரில் எரிபொருள் அதிகம் நிரப்பப்பட்டு இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
விபத்து நடந்த இடம் குடியிருப்பு பகுதி அருகே என்பதால் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் தங்களால் முடிந்த அளவு தீயை அணைக்க போராடினர்.
தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், ராணுவ வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்க அவர்கள் போராடினர். ஆனால் ஹெலிகாப்டரில் எரிந்த தீயை அவர்களால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீ எரிந்து கொண்டே இருந்தது. அதன்பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது. இருந்தாலும் மீட்புக்குழுவினர் தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டனர். சிலர் அங்கேயே பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் குன்னூர் ராணுவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதில் பிபின் ராவத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவியும், ராணுவ அதிகாரிகள் 11 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிபின் ராவத் உயிரிழந்த தகவல் அறிந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பலியான பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் உண்மையான தேச பக்தரை இழந்த விட்டதாக தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே பலியான பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று 13 பேரின் உடல்களும் தனி, தனிப் பெட்டிகளில் வைக்கப்பட்டு அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு இருந்தது.

ஆஸ்பத்திரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிபின் ராவத் உடல், வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்குள்ள பேரக்ஸ் அரங்கில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் தலைமையில் பிபின் ராவத் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல பிபின் ராவத்தின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர் கருப்பு துண்டு அணிந்திருந்தார்.
மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என். நேரு, வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் வெளிநாட்டு பயிற்சி ராணுவ வீரர்கள், பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் குன்னூரில் இருந்து பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து ராணுவ விமானத்தில் அவர்கள் உடல்கள் ஏற்றப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி சென்றதும் பிபின் ராவத் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
நாளை (10-ந் தேதி) காலை பிபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிபின் ராவத் வீடு பாராளுமன்றம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை அடுத்து இருக்கிறது.
அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் ரோடு வழியாக டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதேபோல விபத்தில் பலியான மற்ற ராணுவ அதிகாரிகளின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
Next Story