என் மலர்
நீலகிரி
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவில்லை. தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்து உள்ளது. நடப்பாண்டில் கோடை சீசனை முன்னிட்டு மலர் மற்றும் பழக்காட்சி குழு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். கலெக்டர் எஸ்.பி.அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மே மாதம் வார விடுமுறை நாட்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை நடத்துவதற்கான தேதிகள், காட்சி ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரியில் கடந்த 2 ஆண்டுகள் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப் பாண்டில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகவும் பிரபலமான 124-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன் படி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 7, 8-ந் தேதிகளில் 11-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 9-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 14, 15-ந் தேதிகளில் 17-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 28, 29-ந் தேதிகளில் 62-வது பழ கண்காட்சி நடைபெறுகிறது.
நடப்பாண்டில் மிகச் சிறப்பாக கண்காட்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மலைமாவட்டமான நீலகிரியில் பார்த்து மகிழ பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சிமுனையும் ஒன்று. கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 6,500 அடி உயரத்தில் இருக்கும் கோடநாடு காட்சிமுனை பகுதியில் இதமான காலநிலை நிலவுவதால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம்.
இங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க காட்சி கோபுரம், தொலை நோக்கி கருவி வசதியும் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சமவெளி பகுதியில் இருக்கும் பவானிசாகர் அணை, பவானி ஆறு, தெங்குமரஹாடா கிராமம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள், ரங்கசாமி மலைச்சிகரம், அங்குள்ள அழகிய நீர்வீழ்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்கிறார்கள்.
தற்போது இங்கு இதமான காலநிலை நிலவி வருவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அவர்கள் அங்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சிலர் அங்கு குடும்பத்து டன் நின்று புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
மேலும் அங்கு வைக்கப்பட்டு உள்ள அரியவகை பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாசாரம் குறித்த படங்களையும் அவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். குறிப்பாக கோத்தகிரியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. அதையும் சுற்றுலா பயணிகள் கண்டு கழித்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது கோடநாடு காட்சிமுனை களைகட்டி உள்ளது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
கோடநாடு காட்சிமுனை பகுதியில் உள்ள இயற்கை காட்சிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு காட்சி கோபுரம், புகைப்படங்கள் கூடிய ஒரு அறை ஆகியவை மட்டுமே இருக்கிறது. இங்குள்ள காலநிலையை அனுபவிக்கதான் பலர் இங்கு வருகிறார்கள்.
இதனால் இங்கு குழந்தைகள் விளையாட விளையாட்டு பூங்கா ஒன்று அமைத்தால் இன்னும் அழகாக இருக்கும். அதை செய்தால் சுற்றுலா பயணிகளும் அதிகம்பேர் வருவார்கள். எனவே அதை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(40). இவரது மனைவி கீதா(வயது38). இவர்களுக்கு நித்தீஷ்(3), நித்தின்(1) என 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் மூத்த மகன் நித்தீசுடன் கோவையிலும், கீதா 2-வது மகனுடன் ஊட்டியிலும் வசித்து வந்தனர்.
கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே அந்த குழந்தையை கீதா ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெளிப்புற காயங்கள் இல்லை என்பதும், கீதா குழந்தையை சரியாக பராமரிக்காததும் போலீசாருக்கு தெரியவந்தது.
எனவே குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கினர். இதனை அறிந்து கொள்ள உடற்கூறு ஆய்வுக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை ஊட்டி போலீசாருக்கு கிடைத்தது. அதில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதும், குழந்தையின் உணவுக்குழாய் பகுதியில் கிழங்குகள், அரிசி உள்ளிட்டவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கீதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது மகனை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நெஞ்சை பதறவைக்கும் திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன.
கீதா ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்தவர். அந்த திருமண வாழ்க்கையில் மனகசப்பு ஏற்படவே அவர்கள் 2 பேரையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார்.
அந்த சமயம் தான் சமூக வலைதளம் மூலம் கார்த்திக்கின் அறிமுகம் கிடைக்க அவருடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நன்றாக சென்ற இவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது.
அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட இருவரும் பரஸ்பரம் பேசி பிரிவது என முடிவு செய்தனர். அதன்படி தற்போது இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
கார்த்திக் பிரிந்து சென்ற பிறகு, 2-வது மகன் நித்தினுடன் கீதா தனியாக இருந்தார். கணவரின் பிரிவுக்கு பிறகு கீதாவுக்கு பல நபர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
சிலர் வீட்டிற்கு வருவதும், சிலர் வெளியிடங்களுக்கும் அவரை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அவரது உல்லாச வாழக்கைக்கு வில்லன் போல அவரது 1 வயது குழந்தை இருந்ததால் அவன் மீது கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
வெறுப்பின் உச்சம் பெற்ற பிள்ளையையே கொலை செய்ய வைக்கும் அளவுக்கு மாறியது. குழந்தையை கொலை செய்ய வேண்டும். ஆனால் போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக யோசித்தார்.
அதன்பின்னர் தான் கீதா, தனது குழந்தையை கொடுமைப்படுத்த தொடங்கினார். அவரை தினந்தோறும் அடித்து துன்புறுத்தினார்.
சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்காமல் அரிசியை எடுத்து வாயில் போட்டு தண்ணீரை ஊற்றுவது, பச்சை கிழங்கை வாங்கி அதனை குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக திணிப்பது, மது வாங்கி வந்து வாயில் ஊற்றுவது என தினம் தினம் குழந்தையை சித்ரவதை செய்து வந்துள்ளார்.
கடந்த 14-ந் தேதி வீட்டில் உள்ள தொட்டிலில் நித்தின் தூங்கி கொண்டிருந்தான். இது தான் தக்க சமயம் மகனை கொன்று விட்டு, தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக தெரிவிக்கலாம் என நினைத்தார் கீதா.
பின்னர் தொட்டிலின் அருகே சென்று குழந்தையை பாசத்தோடு பார்ப்பது போல தொட்டிலை ஆட்டி விட்டார். சிறிது நேரத்தில் தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை தொட்டிலோடு சேர்த்து வேகமாக ஆட்டினார். இதில் குழந்தையின் தலை சுவரில் சென்று மோதியது. இதில் வலி தாங்காமல் குழந்தை சத்தம் போட்டது. ஆனாலும் கல் நெஞ்சம் படைத்த தாய் குழந்தையின் அழுகுரலுக்கு செவிசாய்க்காமல் மீண்டும் குழந்தையை தொட்டிலோடு சேர்த்து தரையில் ஓங்கி அடித்தார்.
சில நிமிடங்களில் குழந்தை மூச்சு பேச்சின்றி அமைதியாகி விட்டது. குழந்தை இறந்ததை தெரிந்து கொண்ட கீதா, அக்கம் பக்கத்தினரிடம் அதை காட்டி கொள்ளாமல், தனது குழந்தை மூச்சு பேச்சின்றி கிடப்பதாக கூறி அவர்கள் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று நாடகமாடியதும், அதன்பின்னர் தனது கள்ளக்காதலர்களுடன் ஊர், ஊராக ஜாலியாக சுற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். எனவே கார்த்திக் நித்தீசுடன் கோவையிலும், கீதா தனது 2-வது குழந்தை நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே அந்த குழந்தையை கீதா ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணமாகி, அவர்களை விட்டு பிரிந்தது தெரியவந்தது. அத்துடன் சமூகவலைத்தளம் மூலம் 3-வதாக கார்த்திக்குடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து உள்ளார்.
அவர் மூலம்தான் 2 குழந்தைகள் பிறந்து உள்ளன. பின்னர் கார்த்திக்கை பிரிந்த கீதாவுக்கு மேலும் பலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், அவர் தனது குழந்தையை சரிவர பராமரிக்காமல் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கீதாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் கீதாவை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக கீதா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
3-வது கணவரை விட்டு பிரிந்த கீதாவுக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்து உள்ளார். எனவே அவரால் குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை. அத்துடன் கள்ளக்காதலுக்கு அந்த குழந்தை இடையூறாகவும் இருந்து உள்ளது. எனவே குழந்தையை கொல்ல கீதா முடிவு செய்து உள்ளார். போலீசில் சிக்காமல் குழந்தையை கொலை செய்ய யோசித்தார். அப்போதுதான் அவர் தனது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து உள்ளார். அத்துடன் மதுபானமும் கொடுத்து உள்ளார்.
இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் எதுவும் தெரியாததுபோன்று அவர் குழந்தையை தூக்கியபடி அழுதுகொண்டே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று நாடகமாடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை தெப்பக்காடு பகுதியில் வனஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துறை உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அந்த சாலையோரத்தில் மான்கள் மேய்ந்து கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென்று அங்கு பாய்ந்து வந்த ஒரு புலி, புள்ளிமானை வேட்டையாடியது. பின்னர் அதை தூக்கி புதருக்குள் கொண்டு சென்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்தனர். அத்துடன் சிலர் செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.
பிறகு அதை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலியை கூண்டில் அடைத்து பூங்காவில் வைத்து இருப்பதை பார்க்கும் போதே பயமாக இருக்கும். ஆனால் அது வனப்பகுதியில் கம்பீரமாக நடந்து வந்து, இரையை வேட்டையாடி தூக்கிச்சென்றதை பார்த்தபோது பயமாகதான் இருந்தது என்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. காலையில் வெயிலும், பகலில் மேகமூட்டமாகவும், இரவில் நீர்பனியுமாக காணப்பட்டதால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் காய்ந்து காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருந்தது.
மேலும் மழை பெய்யாததால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்தது, சில இடங்களில் வறண்டும் போனது. இதனால் பல இடங்களில் பயிரிட்டு இருந்த செடிகள் கருகின.
இந்த நிலையில் நேற்று காலை முதல் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லாததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
பகல் 12.15 மணியளவில் திடீரென தூறல் விழ தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் அங்குள்ள பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.
சுற்றுலா பயணிகள் குடை பிடித்த சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். நேற்று பெய்த திடீர் கோடை மழை காரணமாக வெப்பம் முற்றிலும் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. நேற்று பெய்த திடீர் மழையால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இதேபோல் கோத்தகிரி பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
சமவெளி பகுதிகளில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் வறட்சியை சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் இடம் பெயர்ந்து, வனத்தையொட்டிய கிராம பகுதிகள், தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்பட்டது. இருந்தது. தற்போது ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே 7 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை ரெயில்பாதை ஓரத்தில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ரன்னிமேடு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்குள் குட்டி யானைகள் உள்பட 7 காட்டு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சென்றன.
சில மணி நேரம் அங்கேயே முகாமிட்டிருந்த யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன.
தேயிலை தோட்டத்தில் சுற்றி திரியும் யானை கூட்டம் ரன்னிமேடு அருகே உள்ள அரசு விதைப்பண்ணை குடியிருப்பு, தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள், தேயிலை பறிக்க செல்பவர்கள், கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் வேண்டும் செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடி ஒன்று நடமாடி வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு குந்தா தாலுகா அலுவலகம் அருகே உலா வந்த கரடி அங்குள்ள ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான டீ கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி சென்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் கொட்டரகண்டி தாலுகா அலுவலகம் அருகே சாலையோரம் கரடி பதுங்கியிருந்துள்ளது.
இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு கரடியை விரட்டியுள்ளனர். இதை தொடர்ந்து கரடி மீண்டும் வராமல் இருக்க அப்பகுதியில் டயரை கொளுத்தி தீயிட்டுள்ளதுடன் இரவு 10 மணி வரை காவல் இருந்துள்ளனர்.
இதை தொடர்ந்து இளைஞர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள். இந்நிலையில் ஆட்கள் நடமாட்டம் முழுவதுமாக ஓய்ந்த போன நிலையில் 11 மணிக்கு மேல் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி மீண்டும் ராஜமாணிக்கத்தின் டீ கடை கதவை உடைத்தெறிந்து உள்ளே புகுந்துள்ளது.
தொடர்ந்து கடையில் இருந்த பாத்திரங்கள், சமையல் பொருட்களை கீழே தள்ளி சூறையாடியதுடன் கேனில் இருந்த எண்ணெயை குடித்து சென்றுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலை கரடியால் சூறையாடப்பட்ட ராஜமாணிக்கத்தின் டீ கடையை பார்வையிட்டனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை ஒட்டியுள்ள தேயிலை தோட்டம் மற்றும் பெரியார்நகர் பகுதிகளில் கரடியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கரடி அப்பகுதியில் நடமாடி வருவது கொட்டரகண்டி பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
நாளுக்குநாள் அதிகரித்த வறட்சியின் தாக்கத்தால் மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து கருகி போயுள்ளது. நீர் நிலைகளும் வறண்டு போயுள்ளதால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயரும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி முன்புறம் உள்ள வருவாய்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டது.
ஏற்கனவே வறட்சியின் காரணமாக செடி, கொடிகள் காய்ந்து கிடந்ததாலும், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் தீ ஜூவாலைகள் வானுயர எழும்பியது. தாலுகா அலுவலக சுற்றுசுவரை ஒட்டிய பகுதி என்பதால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீ பரவுவதை கண்டு அச்சம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். குந்தா ரேஞ்சர் சீனிவாசன் உத்தரவின்பேரில் வனவர் ரவிக்குமார் மேற்பார்வையில் விரைந்து வந்த வனத்துறையினர், காட்டு தீயை அணைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
தீ மேலும் பரவாமல் இருக்க செடி, கொடிகளை வெட்டி அகற்றியும், மண்ணை வாரியிறைத்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தாலுகா அலுவலக நீர் தேக்கத்தில் இருந்து நீண்ட ரப்பர் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சரிவான மலைப்பகுதி. அடர்ந்த புல்வெளிகளும் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இருள் சூழ்ந்த நிலையில் இப்பகுதிக்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் ஏராளமானோர் அங்கு வரவழைக்கப்பட்டு எதிர் தீ மூட்டப்பட்டு தீயை அணைத்தனர்.
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை முள்ளூர் வனத்தையொட்டிய பகுதிகளில் நேற்று இரவு திடீரென காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வனம் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் வனத்தில் இருந்த சிறிய அளவிலான செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் எரிந்து கருகின.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள், பழங்கள், மூங்கில்கள் உள்ளன.
நீலகிரியில் தற்போது பனிகாலம் முடிந்து இதமான காலநிலை நிலவுவதால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஒற்றை காட்டு யானை குட்டியுடன் முகாமிட்டுள்ளது.
தற்போது நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் மலை ரெயிலில் பயணிப்பதில் ஆர்வம் காட்டுவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் ரெயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை சுற்றி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளது.
பில்லூர் அணை அருகே உள்ள அத்திக்கடவு பகுதியில் இருந்து பூச்சி மருதூர் வழியாக மக்கள் செல்ல அரசு பஸ் மற்றும் தனியார் ஜீப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீராடி கிராமத்தின் அருகே வனப்பகுதியை விட்டு ஒற்றை காட்டு யானை வெளியேறியது. அந்த யானை மண் சாலையில் ஜீப்க்கு வழி விடாமல் வெகுநேரமாக ஒய்யாரமாக சாலையின் நடுவே நடந்து சென்றது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் நீர்நிலைகளைத் தேடி வெளியே வருகிறது. வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும்.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.






