என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டு வளாகத்தில் 2 சிறுத்தைகள் வலம் வந்துள்ளன.
    • குன்னூா் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை கடந்த வாரம் உள்ளே நுழைந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டு வளாகத்தில் 2 சிறுத்தைகள் வலம் வந்துள்ளன. இந்த சிறுத்தைகள், நாய்களை வேட்டையாட வந்துள்ளன. ஆனால், நாய்கள் கூண்டுக்குள் இருந்து சப்தமிட்டதைத் தொடா்ந்து, சிறுத்தைகள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேறின. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கட்டபெட்டு வனத்துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்தனா்.

    இதேபோல குன்னூா் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை கடந்த வாரம் உள்ளே நுழைந்தது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்தும், அவை இன்னும் பிடிபடவில்லை.

    பேரட்டி குடியிருப்பு பகுதியில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். எனவே, எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக சிறுத்தைகளை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

    பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, வெள்ளேரி, விலக்கலாடி, ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, கூடலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி சேரம்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது. கடும் குளிர்மற்றும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கிராம பகுதிகளிலும் பொதுமக்கள் சாா்பிலும் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

    ஊட்டி:

    விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் உதகை நகர பகுதிகள், மஞ்சூா், எமரால்டு, இத்தலாா், காத்தாடிமட்டம், கூடலூா், பந்தலூா், குன்னூா், கோத்தகிரி உள்பட்ட பகுதிகளிலும் சுமாா் 450 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டன.

    இதில் ஊட்டியில் பூசாரிகள் பேரவை சாா்பில் 40 சிலைகளும், சிவசேனா சாா்பில் 15 சிலைகளும், கோத்தகிரியில் அனுமன் சேனா சாா்பில் 30 சிலைகளும் என மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராம பகுதிகளிலும் பொதுமக்கள் சாா்பிலும் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பூசாரிகள் பேரவைகள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சனிக்கிழமையும், ஏனைய அமைப்புகள் சாா்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையும் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

    • போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆச்சங்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், தனிப்பிரிவு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆச்சங்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இதையடுத்து அருகே சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த ஜான் ஜோசப்(வயது40) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, விற்பனைக்காக அங்கு நின்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் ஜோசப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடை கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஹரீஷ். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதுதவிர தனது வீட்டில் மாடுகளும் வளர்த்து வருகிறார். மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    நேற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில், மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    பின்னர் கொட்டகையில் மாடுகளை கட்டி விட்டு வீட்டிற்குள் சென்றார்.இந்த நிலையில் சிறிது நேரத்தில் கொட்டகையில் இருந்து கன்றுக்குட்டி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியான அவர் கொட்டகைக்கு வந்து பார்த்தார்.

    அப்போது அங்கு கன்றுக்குட்டி யும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்த அவர் சோகமானார். உடனடியாக சம்பவம் குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டது, மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், நாயும் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.பின்னர் உயிரிழந்த கன்றுக் குட்டி மற்றும் வளர்ப்பு நாய் உடல் மீட்கப்பட்டு அதே பகுதி யில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    • 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டது.
    • பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை ஊட்டி அருகே நடைபெற்றது. ஒத்திகை பயிற்சியினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்ககூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஒத்திகைப் பயிற்சியானது நடத்தப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய பருவ காலங்களில் வெள்ளத்தினால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் அபாயகரமான பகுதிகளாக ஊட்டி வட்டத்திற்குட்பட்ட முத்தோரை, பாலாடா, நஞ்சநாடு, குந்தா வட்டத்திற்குட்பட்ட முள்ளிகூர், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட குன்னூர் நகரம், கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட கன்னிகா தேவி காலனி, கூடலூர் வட்டத்திற்குட்பட்ட மேல் கூடலூர் ஆகிய 5 இடங்கள் கண்டறியப்பட்டு வெள்ளம் குறித்த ஒத்திகையை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில் மிகவும் அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ள இடத்தில் வெள்ளமோ, நிலச்சரிவோ நடக்கும் போது எவ்வாறு அரசுத்துறை அலுவலர்கள் உடனடியாக சென்று பேரிடரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பாதிக்கும் பகுதியாக எம்.பாலாடா கே.கே.நகர் நஞ்சநாடு 1 பகுதியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை எவ்வாறு மீட்பது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலமாகவும், படுகாயமடைந்த ஒருவருக்கு முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல் குறித்து மருத்துவத்துறை மூலமாகவும் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து இந்த நிகழ்ச்சி யானது நடத்தி காண்பித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    குறிப்பாக, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை நிகழ் பார்வையாளர் கவுசல் பரீவா, வெலிங்டன் ராணுவ அதிகாரி பிரேம்குமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சத்யகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  

    • ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது.
    • வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி, மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நேற்று நள்ளிரவில் ஊட்டியில் கரடி ஒன்று குடியிருப்புக்குள் வந்து, அங்குள்ள வீட்டில் புகுந்து காபி குடித்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

    நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் இருந்து பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. இதனால் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.

    சத்தம் வந்த இடம் நோக்கி சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு கரடி ஒன்று நின்றிருந்தது. கரடி வீட்டில் வைத்திருந்த காபி கேனை கீழே தள்ளி காபியை குடித்து கொண்டிருந்தது.

    இதனை அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

    இந்த வீடியோவை எடுத்தவர்கள், அதனை தற்போது சமூக வலைதளங்களில் திருமண வீட்டில் புகுந்து காபி குடிக்கும் கரடி என தலைப்பிட்டு பரவ விட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வேகமாக வைரலாகி வருகிறது.

    • கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.
    • பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தி, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை தாக்கி வருகிறது. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வந்தன.

    தற்போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி, நூலகம், கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.

    இதில் பேரூராட்சி அலுவலக பொருட்கள், பள்ளி வகுப்பறைகள், நூலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாடப் பொருட்கள், அஞ்சலகத்தில் இருந்த பதிவேடுகள் நாசமானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை சூறையாடின.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    மேலும் அங்குள்ள நூலகத்தை சேதப்படுத்தின. 3-வது முறை இதேபோல் அனைத்து கட்டிடங்களிலும் இருந்த கதவுகளை காட்டு யானைகள் வளைத்து பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்த ஓவேலி பேரூராட்சி மற்றும் வருவாய், வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டதால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்து 3-வது முறையாக அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே, பேரூராட்சி அலுவலக பகுதியில் இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இனிவரும் நாட்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    • முதல் மாடியில் இருந்து குறுகிய பாதை வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.
    • பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி எம்.எஸ்‌. லைன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 49), வியாபாரி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் ஐந்து லாந்தர் பகுதியில் முதல் மாடியில் இருந்து குறுகிய பாதை வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

    அவ்வாறு வரும்போது நிலை தடுமாறியதால், மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை.

    நேற்று காலையில் அவர் இறந்து கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யானைகள் பூஜை செய்து விநாயகரை வழிபட்டன.
    • யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நாடுமுழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக ெகாண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானை கள் முகாமிலும் விநாயகா் சதுா்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி அபயாரண்யம் மற்றும் தெப்பக்காடு முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பாகன்களை காலையிலேயே குளிப்பாட்டி, அதற்கு அலங்காரம் செய்தனர். பின்னர் யானைகளுக்கு பரிவட்டம் கட்டி, அனைத்து யானைகளையும், முகாமின் நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நிறுத்தி வைத்தனர்

    பின்னர் பழங்குடியினரின் பாரம்பரிய இசை முழங்க மசினி, கிருஷ்ணா யானைகள் மணியடித்தபடி கோவிலை 3 முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கி பூஜை செய்தன.பூஜைகள் முடிந்த பின்னர் யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பல்வேறு பழங்கள் வழங்கப்பட்டன.

    இதில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தலைமையில் வனச்சரக அலுவலா்கள் மற்றும் வன ஊழியா்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.இதுதவிர சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களும் யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தில் கலந்து கொண்டனர்.

    • 2 நாட்கள் ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி,

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு வண்ணங்களில் களிம ண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    விழா நிறைவ டைந்தவுடன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரை க்கப்படுகிறது. நீலகி ரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்க ளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து பூசாரிகள் பேரவைகள் சார்பில் வருகிற 3-ந் தேதியும், மாவட்டம் முழுவதும் இந்து அமை ப்புகள் சார்பில் 4-ந் தேதியும் விநாயகர் சிலை ஊர்வ லங்கள் நடக்கின்றன.

    ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் வழியாக செல்லும் போது அதிக கோஷம் எழுப்பக்கூடாது, வணிக நிறுவனங்களை மூட சொல்லக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, எந்தவித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபட க்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். ஊட்டி நகரிலேயே பெரிய விநாயகர் சிலை ஊட்டி பாம்பே கேசியல் பகுதியில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

    • யானைகள் ஆற்றுக்குள் வந்ததை பார்த்ததும், அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
    • காட்டு யானைகள் வர உள்ளதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம டைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அருகே சோலாடி பகுதிக்குள் 4 காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டன.

    பின்னர் அங்கிருந்து யானைகள் கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள சோலாடி போலீஸ் சோதனைச்சாவடி அருகே உள்ள பாலத்தில் முகாமிட்டன.

    இதனால் இரவு பணியில் ஈடுபட்ட போலீசார் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி உத்தரவின்படி, வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர்.

    அங்கிருந்து சென்ற யானைகள் நேற்று சோலாடி ஆற்றங்கரையில் நின்றன.பின்னர் ஆற்றுக்குள் இறங்கி யானைகள் உற்சாக குளியல் போட்டன. இதையடுத்து ஆறு வழியாக கேரள மாநில எல்லைக்குள் நுழைந்தது.

    யானைகள் ஆற்றுக்குள் வந்ததை பார்த்ததும், அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் காட்டு யானைகள் வர உள்ளதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×