என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மசினகுடியில் மது விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்2 Sep 2022 10:06 AM GMT (Updated: 2 Sep 2022 10:06 AM GMT)
- போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆச்சங்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், தனிப்பிரிவு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆச்சங்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இதையடுத்து அருகே சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த ஜான் ஜோசப்(வயது40) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, விற்பனைக்காக அங்கு நின்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் ஜோசப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×