என் மலர்
நீலகிரி
- பலவாகனங்கள் சேற்றில் சிக்கி போராடிதான் செல்ல வேண்டி உள்ளது.
- நூற்றுகணக்கான வாகனங்கள் செல்லும் சாலை இப்படி அனைவரையும் அல்லல் படுத்த வைக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி எச்.எம்.டி சாலையில் உள்ள குழிகளில் தினமும் பலவாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
அவசர தேவைகளுக்கு செல்லும் பலவாகனங்கள் சேற்றில் சிக்கி போராடிதான் செல்ல வேண்டி உள்ளது.
இத்தனைக்கும் இது ஒரு முக்கியசாலை ரோஜா பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் நகருக்குள் வராமல் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து குன்னூர் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் என தினமும் நூற்றுகணக்காக வாகனங்கள் செல்லும் சாலை இப்படி அனைவரையும் அல்லல் படுத்த வைக்கிறது.
இதனை சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
- வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர்.
ஊட்டி,
சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தட்டாம்பாறையில் காட்டு யானை புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை மிதித்து நாசம் செய்தது. அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் உலா வந்த யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானையை விரட்டினர். பின்னர் அங்கிருந்து அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முகாமிட்டது. இதனால் அங்கு வந்த நோயாளிகள் பீதி அடைந்தனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 அய்யப்பன் கோவில் அருகே தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. தகவல் அறிந்த சேரம்பாடி வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.
- ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி,
குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் ஆசிரியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்பின் மேரி சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சார்பில் பரிசுகளை வழங்கினார். பள்ளி மாணவர்கள் அளித்த சிறப்பான ஆசிரியர் தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
- 619 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். மொத்தம் 619 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதியார் பல்கலைகழக தேர்வுதுறை கட்டுப்பாட்டாளர் முனைவர் ஆர்.விஜயராகவன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கல்லூரி செயலர் ஆனி உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
- மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும்.
இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார்.
தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் தடையை மீறியும் வெளிமாநில வாகனங்களும் இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகமான வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் இந்த வழியாக வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலையில் விபத்து அடிக்கடி நடந்து வந்தது.
இதன் காரணமாக உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊட்டி நகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனிடையே இந்த சாலையில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தற்பொழுது இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விகுறியே. கல்லட்டி சாலையில் விபத்துகளை தடுக்க சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்தும் அந்த சாலையில் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி:
திருச்சி அருகே மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது55). இவரது மகன் யுவராஜ்(25).
தந்தை, மகனான இவர்கள் 2 பேரும் ஊட்டியில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருச்சியில் வசூல் செய்து ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊட்டிக்கு வந்து பட்டுவாடா செய்வது வழக்கம்.
வழக்கம்போல் இன்று வியாபாரிகளுக்கு பணம் பட்டுவாடா கொடுப்பதற்காக தங்கராஜ், தனது மகனுடன் நேற்று இரவே திருச்சியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார். அப்போது கையில் திருச்சியில் வசூலித்த ரூ.30 லட்சம் பணமும் வைத்திருந்தார்.
இன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்கராஜூம், யுவராஜூம், ஊட்டிக்கு வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து, ஊட்டி மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்றனர். ஊட்டியின் மையப்பகுதியான மார்கெட்மணிகூண்டு அருகே சென்றபோது, அவர்களின் பின்னால் கார் ஒன்று வேகமாக வந்து 2 பேரையும் மறித்தது.
அதில் இருந்து மர்மநபர்கள் சிலர் திபுதிபுவென கீழே இறங்கி, தங்கராஜின் அருகே சென்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா? என பார்த்தனர்.
அந்த சமயம் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்களை வெட்டினர். பின்னர் அந்த கும்பல், வியாபாரிகள் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு தாங்கள் வந்த காரில் தப்பியோடினர்.
இதில் தந்தை, மகன் 2 பேரும் உடலின் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டதால் வலியால் அலறி துடித்தனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, ஊட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வியாபாரிகளை வெட்டிய கும்பல் குறித்து விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அந்த வழியாக வந்த வெளிமாநில, வெளிமாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ஒரு கார் வந்தது. அந்த காரில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முராணவே பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வியாபாரிகளை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை தப்பிய கும்பல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வியாபாரிகளை பஸ்சில் ஒரு கும்பலும், காரில் ஒரு கும்பலும் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த 3 பேருடன் வேறு சிலருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் வியாபாரிகளான தந்தை,மகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி பணம் பறித்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
- மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
குன்னூரை சேர்ந்தவர் காட்வின்(22). இவா் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
விடுமுறை நாட்களில் சொந்த ஊா் சென்று வந்த இவருக்கு, அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.
இதைத் தொடா்ந்து காட்வின் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி 7 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளார்.
சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் கூடி பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் பிரசன்ன தேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும் இதுகுறித்து குன்னூா் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.
ஊட்டி அருகே உள்ள புதுமந்து பகுதியை சோ்ந்தவா் ராஜன்(26). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. நேற்று 17வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரசன்ன தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இருவீட்டு பெற்றோரிடமும் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.
மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை திருமணம் செய்யமாட்டோம் என ஒப்புதல் கடிதம் கொடுத்தனர்.
அதேபோல நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நிழற்குடை பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
- பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
ஊட்டி,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, பாதிரிமூலா, அத்திசால், தட்டாம்பாறை உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் கொளப்பள்ளி, பந்தலூர், கூடலூர், எருமாடு, தாளூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மூலைக்கடை பகுதிக்கு வந்துதான் செல்லவேண்டும். இவ்வாறு வந்து செல்லும் பயணிகளும் மாணவ-மாணவிகளும் மூலைக்கடை பயணியர் நிழற்குடையில் பஸ்களுக்காக காத்து கிடக்கின்றனர். தற்போது பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் நிழற்குடையில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகிறார்கள். இதனால் அந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
- தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சமடைந்தனர்.
- அதிகாலை 3 மணி வரை காட்டு யானைகள் நின்றன.
ஊட்டி,
காட்டு யானைகள் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கோக்கால் மலையடிவாரத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு இருந்தன. தொடர்ந்து மேல் கூடலூர், லாரஸ்டன், 4-ம் நெம்பர், கெவிப்பாரா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தன.மேலும் தோட்ட தொழிலாளர்களும் காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சமடைந்தனர். இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாலை அல்லது இரவில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்தநிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் காட்டு யானைகள் நள்ளிரவு முகாமிட்டன. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சனி பகவான் கோவிலை சேதப்படுத்தின. இதில் இரும்பு கதவு மற்றும் உள்ளே இருந்த பூஜை பொருட்களை காட்டு யானைகள் நாசம் செய்தன. தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை காட்டு யானைகள் அப்பகுதியில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பல மீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்தினர். பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.
- சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயி கள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரவேணு:
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.
மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயி கள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருவதுடன், மேகமூட்டமான சீதோ ஷ்ணநிலை நிலவுகிறது.இதன் காரணமாக தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது.இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவதால் சிறு தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், கொப்புள நோயைக் கட்டுப்படுத்த தேயிலைத் தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.
செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரிய வந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்து களை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவி த்தனர்.
- 16 கூட்டுறவு மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.
- மத்திய வணிக துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி -
நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நம்பி சுமார் 65 ஆயிரம் சிறு குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர்.
16 கூட்டுறவு மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன. முந்தைய மாத ஏல சராசரி விலையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரும் மாத துவக்கத்திலும், அந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையை மாற்றியமைத்து அந்த மாதத்திற்கான தேயிலை விலையை, அந்தந்த மாத இறுதியில் அறிவிக்க வேண்டும் என தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கங்கள், மத்திய வணிக துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், மாத இறுதியில் தேயிலை விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் மாதத்திற்கான பசுந்தேயிலை விலை நிர்ணயம் செய்து குன்னூர் தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ெசப்டம்பர் மாத விலையாக ரூ.14.38 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தேயிலை வாரியம் நிர்ணயித்துள்ள இந்த விலையை அனைத்து தேயிலை தொழிற்சா லைகளும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நிர்ணயி க்கப்பட்ட விலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா? அல்லது குறைவாக வழங்கப்படுகிறதா? என தேயிலை வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என தேயிலை வாரியம் செயல் இயக்குநர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.
- தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் காட்டு யானைகள் நள்ளிரவு முகாமிட்டன.
- அதிகாலை 3 மணி வரை காட்டு யானைகள் அப்பகுதியில் நின்றன.
ஊட்டி
கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கோக்கால் மலையடிவாரத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு இருந்தன.
தொடர்ந்து மேல் கூடலூர், லாரஸ்டன், 4-ம் நெம்பர், கெவிப்பாரா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தன.மேலும் தோட்ட தொழிலாளர்களும் காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சமடைந்தனர்.இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாலை அல்லது இரவில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் காட்டு யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முகாமிட்டன. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சனி பகவான் கோவிலை சேதப்படுத்தின.
இதில் இரும்பு கதவு மற்றும் உள்ளே இருந்த பூஜை பொருட்களை காட்டு யானைகள் நாசம் செய்தன.
தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை காட்டு யானைகள் அப்பகுதியில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பல மீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்தினர்.
பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.






