என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா வாகனங்கள்"

    • வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
    • அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.

    இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

    வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • “பார்க்கிங்” வசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல்
    • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சீசன் முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 5நாட்களாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாகஇருந்தனர்.

    இங்கு சீசன் காலங்களில் வரும் சுற்றுலா வாக னங்களை நிறுத்துவதற்கு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதி யில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் வழக்கத்துக்கு அதிகமாக சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்கு வருவதால் அந்த வாகனங்க ளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கடற்கரை சாலையிலும் மற்ற வீதிகளிலும் சுற்றுலா வாகனங்களை தாறுமாறாக கொண்டு நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதில் சுற்றுலா வாகனம் ஒன்றை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள பூங்காவி ல் அமைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூந்தொட்டிகள் மற்றும் சாலையோரமாக நடப்பட்டு இருந்த நிழல்தரும் அலங்கார மரங்களை பாதுகாக்க சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு சுவரையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.எனவேகன்னியா குமரிக்கு வரும்சுற்றுலா வாகனங்களைநிறுத்து வதற்கு கூடுதலாக "பார்க்கிங்" வசதி ஏற்படுத்த வேண்டும் என்றுசுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது.
    • சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது புனிதவெள்ளியை தொடர்ந்து வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதன்காரணமாக அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மூஞ்சிக்கல், உகாதே நகர் , ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.

    காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நேற்று இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் உள்பட பொதுமக்கள் தாங்களாகவே போக்குவரத்தை சீரமைத்துக்கொண்டனர். மேலமலையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போதுமான போக்குவரத்து போலீசார் பணியமர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறைந்த அளவே போலீசார் பணியில் உள்ளதால் வேலைபளு அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று, அனுமதி சான்று, சாலை வரி உள்ளிட்டவையை வழங்கப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்ல சுற்றுலா வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற தொடர்ந்து சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.

    அப்போது விதிகளை மீறி அகலம், வண்ணம் உயரம் ஒலிபெருக்கி மின்விளக்கு பல்வேறு காரணங்களுக்காக மோட்டர் வாகன ஆய்வாளர் நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலத்தில் குவிந்தன. இதனால் அதிகாரிகள் திணறினர். சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்காமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    கொடைக்கானல் பஸ்நிலையத்தில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் சாரல்மழை பெய்து இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நகர் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை பஸ்நிலையத்தில் நிறுத்திவிட்டு சுற்றுலா இடங்கள் மற்றும் ஒட்டல்களுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பஸ்களை எடுக்க முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் பஸ்நிலைய பகுதியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது. கோடைகால சீசனின்போது போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் போதுமான வாகனநிறுத்துமிடங்கள் இல்லாததால் இந்த பிரச்சினை தொடர்கிறது.
     
    நீண்டகால கோரிக்கையான மல்டிலெவல் பார்க்கிங் என்பது ஆய்வுப்பணி மேற்கொள்ளும் நிலையிலேயே உள்ளது. இதனால் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்களை நியமித்து வெளிவாகனங்கள் உள்ளே வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும்.

    இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார்.

    தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் தடையை மீறியும் வெளிமாநில வாகனங்களும் இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகமான வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் இந்த வழியாக வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலையில் விபத்து அடிக்கடி நடந்து வந்தது.

    இதன் காரணமாக உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊட்டி நகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனிடையே இந்த சாலையில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தற்பொழுது இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விகுறியே. கல்லட்டி சாலையில் விபத்துகளை தடுக்க சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்தும் அந்த சாலையில் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×