search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blister disease attack on tea plants"

    • சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயி கள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

    மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயி கள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருவதுடன், மேகமூட்டமான சீதோ ஷ்ணநிலை நிலவுகிறது.இதன் காரணமாக தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது.இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவதால் சிறு தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், கொப்புள நோயைக் கட்டுப்படுத்த தேயிலைத் தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

    செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரிய வந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்து களை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவி த்தனர்.

    ×