என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாததால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
    • அடிப்படை தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட கப்பத்தொரை கிராமத்தின் ஒரு பகுதி கம்ளிகார் லைன் பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 40 குடும்பத்தினர், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி நஞ்சநாடு மற்றும் இத்தலார், அவலாஞ்சி சந்திக்கும் பகுதி உள்ளது. இங்கு நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பருவ மழை காரணமாக இப்பணிகள் தொய்வு ஏற்பட்டது.

    ஆனால் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனால், இப்பகுதியில் அடிப்படை தேவையான குடிநீர் இணைப்புகளை துண்டித்து மாதக்கணக்கில் குடிக்க நீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்தாலும் சரியான முறையில் பதில் அளிக்ககூட முன்வருவதில்லை.

    எனவே, மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.
    • இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டமும் அட்டகாசம் அதிகமாக காணப்படுகிறது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கேத்தரின் வாட்டர் பால்ஸ் பகுதியில் இரண்டு கிராமங்கள் உள்ளது. அங்கு இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டமும் அட்டகாசம் அதிகமாக காணப்படுவதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தற்போது நேற்று இரவு கேத்தரின் வாட்டர் பால்ஸ் வாகன நிறுத்தத்தில் ஒரு சிறிய வகை பெட்டிக்கடை ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்கடையை இரவு நேரங்களில் கரடியானது உடைத்து அதில் உள்ள தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்டு வருவதாகவும், இதுபோன்று கடையை உடைக்கும் நிகழ்ச்சி இதோடு மூன்றாவது தடவையாக நடப்பதாகவும் தெரிவித்தனர்.

    எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்
    • பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் வனவிலங்குகள் சிறிது காலத்தில் வயிற்றில் கோளாறு ஏற்பட்டு இறந்துவிடும்.

    ஊட்டி

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டம் என்பதால் இங்கு உள்ள இயற்கை சூழலையும் வன விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

    ஆனால் தடையையும் மீறி சில சுற்றுலாப் பயணிகள் மறைமுகமாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதுடன், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகளிலும் வனப்பகுதிகளிலும் வீசி செல்கின்றனர்.

    இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி - தெப்பக்காடு சாலையில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசிச் சென்றுள்ளனர்.

    அவ்வாறு வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகளை காட்டு யானை ஒன்று பொறுமையாக தனது தும்பிக்கையால் எடுத்து சாப்பிடும் காட்சி வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவ்வாறு பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் வனவிலங்குகள் சிறிது காலத்தில் வயிற்றில் கோளாறு ஏற்பட்டு இறந்துவிடும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரி கொண்டுவருவது தவிர்க்குமாறு வனத்து றையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

      ஊட்டி:

      தி.மு.கவின் மூத்த தலைவர் ஆ.ராசா. இவர் நீலகிரி தொகுதியின் எம்.பியாக இருந்து வருகிறார்.

      கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா எம்.பி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

      ஆ.ராசா எம்.பியின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகளையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அவரின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியது.

      ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியை விட்டு நீக்க கோரியும் பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கோவையில் நேற்று ஒரே நாளில் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.கவினர் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இதற்கிடையே ஆ.ராசா எம்.பியின் பேச்சை கண்டித்து அவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.

      அதன்படி நாளை நீலகிரி முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.

      இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:-

      ஆ.ராசாவின் இந்து மத விரோத பேச்சு கண்டிக்கத்தக்கது. அவரை கண்டித்து நாளை நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களின் இந்த போராட்டத்திற்கு நீலகிரி மாவட்ட மக்கள், வியாபாரிகள் என அனைவரும் முழு ஆதரவு கொடுத்துள்ளனர்.திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.

      மேலும் ஆ.ராசாவை எம்பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய கோரி, ஒவ்வொரு இந்து முன்னணியினரும் வருகிற புதன்கிழமையில் இருந்து ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடிதம் எழுத உள்ளோம். 15 நாட்களுக்குள் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும். பல்வேறு விதமாக எங்களது போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      நாளை நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி கடையடைப்பு போராட்டம் அறிவித்து உள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக கூடலூர் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

      இதுதவிர மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை, நாடுகாணி, பர்லியார் உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலுமே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

      இதேபோல நீலகிரி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

      • போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்
      • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்

      ஊட்டி,

      மசினகுடி அருகே 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

      இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஆனைகட்டி எப்பநாடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

      இதில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ரமேசை போலீசார் கைது செய்தனர்.

      • அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊட்டியில் நடந்தது.
      • கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

      ஊட்டி,

      நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் கே.ஆர். அர்ச்சுணன், செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி, கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் நன்றி கூறினார்.

      கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார், அன்புச்செல்வன், சகுந்தலா, ஜெயலட்சுமி, தனலட்சுமி, உதகை எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராம்,நொண்டிமேடு கிளை செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

      • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.
      • மாணவிகளின் தனிதிறமைகளை வெளிகாட்டிய அறிவியல் கண்காட்சி நடந்தது.

      ஊட்டி

      நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பள்ளியில் நடைபெற்ற 107வது நிறுவன தினவிழாவில் மாணவ, மாணவிகளின் தனிதிறமைகளை வெளிகாட்டிய அறிவியல் கண்காட்சி நடந்தது.

      பள்ளியின் முதல்வர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிறுவனர் தினவிழாவில் நஞ்சுன்கூட் ஜெ.எஸ்.எஸ் கலைகல்லூரி துணை பேராசிரியர் ஹனகவுடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

      தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் இந்த நிறுவனர் தின விழாவில் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

      • பெரியாரின் 144-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
      • சமூகநீதி நாள் உறுதிமொழியும் ஏற்று கொண்டனர்.

      ஊட்டி,

      பெரியாரின் 144-வது பிறந்த நாளான சமூகநீதி நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பெரியாரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழியும் ஏற்று கொண்டனர். விழாவில் ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார்.

      இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், நகர செயலாளர்கள் ராமசாமி, சேகர், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, நெல்லை கண்ணன், லாரன்ஸ், சிவானந்தராஜா, சுஜேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி செயலாளர்கள் பிரகாஷ், உதயகுமார், சின்னவர், சதீஷ்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், எல்கில் ரவி, காந்தல் ரவி, கர்ணன், ராஜா, தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, நவுபுல், பேரூராட்சி மன்ற தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, சித்ராதேவி, ஹேமமாலினி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆல்வின், டெர்மிலா, மாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படும்.
      • ஊட்டி தாவரவியல் பூங்காவில் 260 ரகங்களில் 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

      ஊட்டி

      நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

      இதனால் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படும். குறிப்பாக கோடைசீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

      சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் கண்காட்சிகள் நடத்தப்படும். சுற்றுலா பயணிகள் கண்காட்சியில் இடம்பெறும் பூக்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

      ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

      2-வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 260 ரகங்களில் 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

      இதற்கான பணியில் தோட்டக்க லைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரோஜா பூங்காவிலும் மலர்கள் தயார்படுத்தும் பணி நடக்கிறது.

      இதுதவிர தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் அலங்கார பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. 2-வது சீசனுக்காக ஊட்டியில் பூங்கா நர்சர்களில் 20 ஆயிரம் அழகு தாவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

      • கேரளாவில் பாத யாத்திரையை முடித்து கொள்ளும் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்.
      • கூடலூரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இடம் மற்றும் இரவு தங்கும் இடத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்தனர்.

      ஊட்டி:

      காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார்.

      தனது நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து கன்னியாகுமரி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்றனர்.கன்னியாகுமரியில் இருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார்.

      அங்கு 11-ந் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் பாத யாத்திரையை முடித்து கொள்ளும் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்.

      வருகிற 29-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.

      இதற்காக அன்று கூடலூருக்கு வரும் அவர், அன்றைய தினம் கூடலூரில் நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.

      பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

      கூடலூரில் நடைபயணத்தை முடித்து கொண்டு அடுத்த நாள் கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.

      இந்த நிலையில் கூடலூரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இடம் மற்றும் இரவு தங்கும் இடத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்தனர்.

      பின்னர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், 29-ந் தேதி கூடலூர் வரும் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். கோழிப்பாலம் முதல் கூடலூர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். பின்னர் கூடலூரில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

      • அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்
      • மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர்.

      ஊட்டி

      நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு கே.கே.மட்டம் பகுதியை சேர்ந்தவர் புச்சித்தன் என்ற கன்னட தாத்தா (வயது 67). இந்தநிலையில் 15.7.2020-ந் தேதி புச்சித்தன், 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி விளையாடுவது போல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

      இதற்கிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர். அதற்கு அவள் முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.


      மேலும் மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. சிறை தண்டனை இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புச்சித்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது.


      அதன்படி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புச்சித்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். பின்னர் போலீசார் புச்சித்தனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

      • ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
      • ராஜாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.

      ஊட்டி

      ஊட்டியில் மாவட்ட பாஜக சார்பில் ராசாவின் மதப்போக்கு பிரிவினையை கைவிடக்கோரி மண்டல் தலைவர் பிரவீன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது

      மாவட்டத் தலைவர் மோகன்ராஜ்கௌடா , மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

      நகர நிர்வாகிகள் பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார் ,ராஜேந்திரன், நகர துணைத் தலைவர் சுதாகர் ,ஹரி கிஷன் ,மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,

      ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்

      நீலகிரி மாவட்டத்தில் ராசா ஒரு இந்து வீட்டிலேயு கூட ஓட்டு கேட்க முடியாது. அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் உதகை நகர பாஜக நிர்வாகிகள் கூறினர்

      ×