search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை
    X

    ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

    • கேரளாவில் பாத யாத்திரையை முடித்து கொள்ளும் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்.
    • கூடலூரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இடம் மற்றும் இரவு தங்கும் இடத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்தனர்.

    ஊட்டி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார்.

    தனது நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து கன்னியாகுமரி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்றனர்.கன்னியாகுமரியில் இருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார்.

    அங்கு 11-ந் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் பாத யாத்திரையை முடித்து கொள்ளும் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    வருகிற 29-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அன்று கூடலூருக்கு வரும் அவர், அன்றைய தினம் கூடலூரில் நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    கூடலூரில் நடைபயணத்தை முடித்து கொண்டு அடுத்த நாள் கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.

    இந்த நிலையில் கூடலூரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இடம் மற்றும் இரவு தங்கும் இடத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், 29-ந் தேதி கூடலூர் வரும் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். கோழிப்பாலம் முதல் கூடலூர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். பின்னர் கூடலூரில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    Next Story
    ×